Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all 425 articles
Browse latest View live

கவிதைக்காரரின் சிறுகதைகள்

$
0
0

ஜுலி யட்சி (சிறுகதைகள்)-நிலாரசிகன்

மொத்தம் பத்து கதைகளோடு வந்திருக்கும் இத்தொகுப்பை அதீதங்களின் மீது ஈர்ப்புள்ளவர்களுக்கும், கனவுலகில் எப்போதும் கிட்டாத வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், இறுதியாக நவீன கவிதைகளின் பரிச்சியம் உள்ளவர்களுக்குமான சிறு தொகுப்பாக வந்திருக்கிறது. கனவுலகை பதிவு செய்பவர்களாக இதுவரை கவிஞர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். நிலாரசிகனும் கவிஞர் தான். இத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்துமே கதைகள் என்ற வடிவத்தை நோக்கிஏங்கி ஏங்கிப் பயணிக்கின்றன. நவீனம் எல்லாவற்றையும் கலைத்துப் பார்க்கும், கலைத்துப் போடும் தன்மையை உள்ளடக்கியது தான். கதைகளை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்திற்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தீவிர வாசகர்கள் வந்து விட்டார்கள். ஆரம்ப நிலை வாசகனும் கூட இவரது கதைகளுக்குள் நுழைந்து வாசித்து இன்புறலாம். அதற்கு கொஞ்சம் கவிதைகளின் பரிச்சியம் இருந்தால் போதுமானது.

கதைகள் எல்லாவற்றிலும்ஜன்னலில் நின்றோ, மொட்டை மாடியில் நின்றோ  மரங்களையும், இயற்கையையும், நிலாவையும், கடலையும், ஏரியையும்உருவங்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கின்றன. வனக்காவலராக வரும் தந்தை வனப்பூக்களின் அரசியின் காலில் உள்ள காயத்திற்கு சிகிச்சை செய்கிறார்அவளுக்கு தர்ஷிணிப்பூ என்று பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர். தர்ஷிணிப்பூ  என்று அவர் இட்ட பெயர் வனத்தில் வாழும் எந்த விலங்கினதுமாகக் கூட இருக்கலாம். இயற்கை விலங்குகளின் காப்பாளர்கள் இருக்கும் உலகில் அவற்றை தேவைக்காகவும் உணவின் ருசிக்காகவும் கொல்லும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது! யானை டாக்டர் என்றொரு சிறந்த சிறுகதையை  ஜெயமோகன் முன்பாக எழுதினார். மீண்டும் ஒருமுறை அதை ஞாபகத்துக்கு கொண்டு வரச் செய்த கதை இது. கத்தியில்குத்தினால் ரத்தம் வரும் வலிக்கும் என்பது மாதிரி உடனே நிகழ்ந்த  கதையிது.

தொகுப்பில் ஏராளமான கதைகள் பெண் பார்வையில் நகருகின்றன. எழுதியது பெண் தானோ என்ற ஐயம் அடிக்கடி வந்து போனது எனக்கு. சந்தேகத்திற்கு ஒருமுறை நிலாரசிகையோ என்று அட்டைப்படத்தை பார்த்தேன். பெண்ணின் மனவுணர்வுகள் மிகநுட்பமாக பதிவாகியிருக்கின்றனகதைகளில் வரும்எல்லாப் பெண்களும்  மனதில் பெரும் பாரங்களாக தங்களின் துக்கங்களை சுமக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் கோரமாக நிகழ்த்தவும் தயங்குவதில்லை. தன்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஆடவனை கொலை செய்யும் யட்சியாக பெண் உருக்கொள்கிறாள். அழகற்ற பெண் அழகான வடிவம் பெற்று காதலிக்க வலிய அவந்து பேசும் ஆண்களை ஒதுக்குபவளாக மாறுகிறாள். சம்பளப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடுவதில் வாழத்துவங்குகிறாள். தனிமை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் வைத்து விடுகிறது சில நேரங்களில்.

தொகுப்பில் கேவல் என்ற கதை வாசிப்பவர்கள் எல்லோருக்குமான கதையாக இருக்கிறது. ஆசிரியர் முன்பொரு காலத்தில் எழுதியிருக்கலாமோ என்னவோயாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு? என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல்!நகரம் தாறுமாறான ஒரு கலாச்சாரத்தை அங்கு பணிபுரியும் பெண்ணிடத்தில் திணித்திருப்பது பெருநகர சர்ப்பம் கதையில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்பட்ட வடிவ நேர்த்தியில் வேறு ஒரு தளத்திற்கு நிலாரசிகனைபயணிக்க வைக்கும் கதையிது.

சிறுகதைகளுக்கு என்று வடிவ நேர்த்திகள் பலவுண்டுநவீனத்தின் பாதையில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு விசயத்தையும் சொல்ல முற்படாத கதை கூட நேர்கோட்டில் சிறுகதைக்குண்டான வடிவ நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருந்தாலே போதும் அது சிறந்த கதை தான்சினிமாவில் சின்னச் சின்ன கட் ஷாட்டுகள் வருவது போல இரண்டுபாராகிராப் தாண்டியதும் பெட்டி வைத்து வேறு இடத்திற்கு தாவுவது வாசிக்க ஏதுவாக அமையவில்லை! இந்த இடத்தில் கவிஞனாக இருந்து சிறுகதைக்கு வந்த பாலைநிலவனின் கதைகளின் சொல்முறை அழகு ஞாபகம் வருகிறது எனக்கு.

நிலாரசிகன் கதைகளில் டைனோசர்களும், தேவதைகளும், கன்னிகளும் தொடர்ந்துவரட்டும். நிதானமாகச் சொல்ல வேண்டிய கதைகளை ஏனோ மிக விரைவாக முடித்து விடுகிறார் சொல்ல அவ்வளவு தான் என்று. எழுத எழுதத் தான் அது கைவரும் என்பது போல நிலாரசிகனின் சிறுகதை முயற்சிகளை வரவேற்போம்!


 விலை : 80 - பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - பேச : 90955 07547, 98422 75662.

அன்புக்கு பஞ்சமில்லை -புத்தகப் பார்வை

$
0
0

பாவையர் மலர் என்கிற மாத இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வந்து கொண்டிருக்க அதன் ஆசிரியரின் உழைப்பே என்று இன்றென்ன எப்போதும் சொல்லலாம்! இதழுக்கான படைப்பாக்கங்களை தேர்வு செய்வது என்பது சாமானிய காரியமல்ல! ஒரு இலக்கிய இதழ் என்றால் நான்கு கவிதைகள், ரெண்டு சிறுகதை, ஒரு தலையங்கம், ரெண்டு புத்தக விமர்சனம், ஒரு கட்டுரை! அவ்வளவுதான். ஆனால் கமர்சியல் தன்மையோடு மாதம் தவறாமல் படைப்புகளை பெற்று தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்புவது வரை ஆளை கிடையில் கிடத்தி விடும் வேலை அதுதவிர ஆசிரியர் வேறு தொழிலில் முனைப்புடன் இருப்பவர்.

பாவையர் மலரில் என் சிறுகதைகளும் சிலவும் ஆறு மாத தொடர் ஒன்றும் வந்திருக்கிறது. நண்பர் பாக்கியம் சங்கரின்தேனீர் இடைவேளைஎன்கிற வெற்றி பெற்ற தொடர் பாவையர் மலர் இதழில் வெளிவந்தது. பதிப்புத் துறையிலும் அதன் ஆசிரியர் ம.வான்மதி இறங்கியிருப்பதை நாம் பாராட்டுவோம். அவர் தன் பாவைமதி வெளியீடு என்கிற பதிப்பகத்தின் வழியாக இந்த வருடம் இரண்டு புத்தகங்களை கொண்டு வந்துள்ளார். புத்தகத் தயாரிப்பு என்கிற விசயத்தில்  மிக கவனமாய் அட்டை வடிவமைப்பிலிருந்து எல்லாமே மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது.

அன்புக்கு பஞ்சமில்லை என்கிற இந்தப்புத்தகம் ஆசிரியர் பாவையர் மலர் இதழில் ரோகிணி என்ற பெயரில் தொடராக சொல்லி வந்த விசயங்கள் தான். தொடராக வருகையிலேயே பலரின் பாராட்டை பெற்றது என்பதைஅதன் வாசகர்கள் அறிவார்கள்ஆசிரியர் தான் சந்தித்த, தனக்கு தெரிந்த பெண்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற படிக்கல்லாய் இருந்தவர்கள் பற்றியும் மிக நேர்த்தியாகச் சொல்கிறார். சொல்லும் முறையில் பாலகுமாரனின் சாயல் இருந்ததை சில இடங்களில் கவனித்தேன். நன்றாக வழுக்கிச் செல்லும் எழுத்து முறைமை.

புத்தகத்தை வாசித்தோர் சாலையில் பணிக்குச் செல்லும் எந்தப் பெண்ணையும் பார்க்கையில்,வாழ்வில் வெற்றிக்கு உழைக்கும் பெண்ணாகவே  பார்த்து வாழ்த்துவர். அப்படி வாழ்வில் போராடும் பெண்களை இந்தப்புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கும் தோழியோ, தந்தையோ, பின்னால் இருக்கிறார்கள். சுயமாக வெற்றி பெற்ற பெண்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கான உழைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

காதலனை நம்பி ஏமார்ந்த பெண்ணின் கதையும், கோழைக்கணவனைப் பெற்ற பெண் தன்னை விட வயது குறைந்த மற்றவனை மணந்து நிம்மதியான வாழ்வை வாழும் வாழ்க்கைகளும் நிரம்பியே இருக்கின்றன. போக ஆண்களால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவதும் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயலையும் சொல்லி முடிக்கிறார். இந்த உலகில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நிகழும், நிகழத்தான் செய்யும்அதை நோக்கி போராட பெண்களுக்குள் துணிவும் வேண்டுமென அதை ஊட்டும் புத்தகமாகஅன்புக்கு பஞ்சமில்லைபுத்தகம் வந்திருக்கிறது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!


அன்புக்கு பஞ்சமில்லை -.வான்மதி  விலை -120  பேச : 9380164747
















கண்ணாடி நகரம்- கவிதை தொகுப்பு பற்றி

$
0
0

கவிதைத் தொகுப்புகளின் படையெடுப்பு தமிழில் புற்றீசல் போல எப்போதும் கிளம்பி வந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான். மழைக்காலங்களில் தான் கிராமங்களில் ஈசலை நாம் புற்றுக்களில் பிடிக்க முடியும். அதற்கொரு லாந்தர் விளக்கே போதுமானது! ஆனால் கவிதைகள் என்று கிளம்பும் ஈசலை நாம் பிடிக்க நட்பு என்ற விளக்கை பயன்படுத்துகிறோம் என்றே நினைக்கிறேன்எழுதத் துவங்கும் யாரும் முதலில் செய்வது கவித் தொகுப்பு தான். முன்பெல்லாம் தொழில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் தான் சின்ன அட்டை வடிவில் கார்டு கொடுப்பார்கள். அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ன எண்ணில் இருக்கிறார்? போன்ற விவரங்கள் அதில் இருக்கும். இன்று புத்தக வடிவில் கவிதைகளை தங்களுக்கான அறிமுக விசயங்களாய்  கவிஞர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள். சினிமாத்துறையில் நுழைய முயற்சிக்கிறேன் என்பவர் தன் தொகுப்பொன்றைத்தான் அடையாளமாக தருகிறார். கவிதை தொகுப்புகளை இப்படி அறிமுக கார்டுகளாய் எல்லோருக்கும் வழஞ்கிய கவிநெஞ்சுடையவர்கள் பிற்பாடு அதிலிருந்து நழுவி நல்ல வேலையில் செட்டிலான பிற்பாடு திருமணம் முடித்து பிள்ளைகுட்டி பெற்று என்று வாழ்வில் செட்டிலாகிறார்கள். ‘அந்தக்காலத்தில் நாங்கள் எழுதாத கவிதையாடா இன்னிக்கி எழுதிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்?’ வசனங்களோடு ஒரு அற்புத வாழ்வு நிறைவடைகிறது!

கவிதை தொகுப்புகள் பலகாலமாகவே வாசகர்களுக்கு இலவயமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பதிப்பகங்கள் கவிதை தொகுப்புகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு கவிஞர்களே காரணிகளாகி விட்டார்கள்! காசு இருப்பவர்கள் இன்று ஒரு தொகையை தொகுப்புக்கு கொட்டி பிரதிகளை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் இலவயமாக தருகிறார்கள். அதுவும் நண்பர்கள் கூட்டம் முடிந்தபிறகு வீட்டின் பரணில் தூங்குகின்றன. ஒவ்வொரு ஐந்து வருட காலத்திற்கு ஒருமுறை கவிதைகளின் வடிவங்கள் வேறு மாறி விடுகின்றன. குயில், நிலா, மரம், காந்தி தாத்தா, கடல், என்று தலைப்பிட்டு அதற்கு மெனக்கெட்டு பாடிய கவிப்புத்தகங்கள் புதைக்கப்பட்டு விட்டன. காதலனின் வரவை எதிர்நோக்கி தினமும் தேய்கிறாயோடி நீ? என்று நிலாவுக்கு கவிதை எழுதினால் இன்று திரும்பி நின்று சிரிப்பார்கள். பின்பாகசிவப்பு மலர்கள் பூக்கட்டுமென்றுகவிதைகளின் கடைசி வரிகள் அரங்கேறின. சிவப்பு சிந்தனை தாங்கிய கவிதைகளை தவிர்த்து எதை எழுதினாலும் வேடிக்கைப்பொருளாகின. அதற்கும் அதே நிலைமை சில காலம் கழித்து வந்தது.

எப்படியிருப்பினும் கவிஞர்கள் நிதான மனமுடையவர்களாகவும், சில சமயங்களில் கோபக்காரர்களாகவும் இங்கு வெளிப்பட்டு தங்கள் முகத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இன்று முகநூலில் எல்லோருமே கவிஞர்கள் தான். பத்து கவிதைகளுக்கு இடையே ஒரு நல்ல கவிதையை அவர்கள் தந்து விடுகிறார்கள். நான்கு தொகுப்புகளை வாசித்த ஒருவன் தானும் எழுத முற்படுகிறான். அந்த வடிவம் அவனுக்கு இலகுவாக இருக்கிறது. கவிதைகளை சாகடிப்போம் என்று கிளம்பியவர்கள் வரிசையிலும் சிலர் இருந்தார்கள். அவர்களின் தொகுப்புகளும் இங்கு பல கவிஞர்களின் பார்வைக்கு கிட்டத்தான் செய்தன. வரிகளை மடித்துப்போட்டு எழுதுவது கவிதை என்று பலரும் நம்பி வேலை செய்கிறார்கள். நகரப் பேருந்தில் அருகிலிருப்பவன் கவிஞனாய் இருக்கிறான். நகரத்தில் தெரியாமல் மோதி சாரி கேட்பவன் கவிஞனாய் இருக்கிறான். கழிவறையின் வரிசையில் தாங்க முடியாத வயிற்று வலியில் நிற்பவன் கவிஞனாய் இருக்கிறான். மதுபானக்கடையில் சகமனிதனால் அடிபடுவன் மூன்று தொகுப்புகள் போட்டவனாக இருக்கிறான். கவிஞர்களை மதிக்கும் தேசம் இதுவல்ல! என்று கொந்தளிக்கிறான்.

போக தான் வேலை செய்யும் கம்பெனியில் எஜமான் நூறு பிரதிகள் வாங்கிக்கொள்வார். போக வேலையாட்கள் இரநூறு பேரும் வாங்கிக் கொள்வார்கள் என்பதற்காக கவிஞராய் அவதாரமெடுக்கும் பாரதிகளும் இங்குண்டு!

நீண்டகாலமாக கவிதை எழுதி வரும் ஜெயதேவனின் ஐந்தாவது தொகுப்புகண்ணாடி நகரம்’.  காலமாற்றத்தில் கவிஞர் தன் சட்டையை உரித்து புதிய அரிதாரம் பூசி வந்திருக்கிறார். கவிதைகள் நவீன சாயலை கொஞ்சம் கைப்பற்றி வந்திருக்கின்றன. இழந்து கொண்டு வந்திருக்கும் வாழ்வும்,புதிதாய் பெற்றிருக்கும் வாழ்வும் அவரது பாடு பொருள்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை அவரை சித்தம் கலங்கச் செய்யவில்லை. கிராமிய வாழ்வியல் மீதான ஏக்கங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போவது பற்றி இனி கவிஞர்கள் தான் வருத்தப்பட வேண்டுமோ! என்ற அச்சமும் பிறக்கிறது! எது எப்படியிருப்பினும் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்குமான  விசயங்களை சொல்லி முடிக்கும் ஒரு தொகுப்பாக இந்த தொகுதி அமைந்திருக்கிறது. நவீனத்துவ கவிதைகள் பல இப்படிச் சொன்னவை என்றாலும் அனைவருக்கும் புரியும் விதத்தில்எளிய வடிவில் கவிதைக்கான குணங்களோடு பேசும் சொல்முறையில் ஜெயதேவன் வெற்றி பெற்றிருக்கிறார். படித்தவுடன்புரியவும், வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவும் வைக்கும் கவிதைகள் இவைகள்!

ஜெயதேவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமான விசயமாகப் படுகிறது எனக்கு! ஏனெனில் கவிதை இன்னும் சாகவில்லை என்பதை இப்படியான தொகுதிகளும் சிலசமயம் நிருபணம் செய்து கொண்டேயிருக்கின்றன!


கண்ணாடி நகரம் (கவிதைகள்) ஜெயதேவன் -அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம். விலை -70. கவிஞரோடு பேச : 94869 26886

000000000

2015 திருப்பூர் புத்தக திருவிழா புகைப்படங்கள்!

$
0
0
                             
                                                       அனுஷ், லெனினுடன்!


                 
                                    மனுஷ்யபுத்திரன், சுப்பிரபாரதிமணியனுடன்!


                                        மலைகள் சிபி, லெனின், ராசுவுடன்!


                                         கெளரிசங்கர், லெனின், ராசுவுடன்!





                                        அடுத்து ஆவாரங்காடு நாவல் வெளியீடு!




              பாரதிவாசன், அரங்கன் தமிழ், ரத்தினமூர்த்தி, சதீஷ்,வீடு சுரேஷ்!






                                                                   நன்றி!





நடுகல் வெளியீட்டில் வந்த “எலி” நாவல்!

$
0
0


நடுகல் கொண்டு வந்த நாவல்!


லக்கி லுக் படிப்பவன் இவன். அதைக்கூட இவன் படிக்கும் சமயம் நான் பார்க்கவும் இல்லை. டெக்ஸ் வில்லரின் ரசிகனான எனக்கு அவரின் புத்தகங்கள் சொய்ங்கென வந்து விடும். அதை கையால் கூட தொடமாட்டான். எஸ்.ராமகிருஷ்ணனின் அண்டசராசரம், சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் இரண்டையும் இவனுக்காகத் தான் உயிர்மையிலிருந்து எடுத்து வந்திருந்தேன். அண்டசராசரம் 75 அகவைசாப்பாட்டு பிரியர்  டீக்கடையில் வேலை செய்யும் பையனை வைத்துக் கொண்டுதுப்பறியக் கிளம்பும் கதை. என்ன காரணமோ அது குழந்தைகள் வாசிக்க இயலாத கதையாக போய் விட்டது. சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் சிறுவன் நூலகம் சென்று புத்தக வாசிப்பில் இறங்குவதை சொல்கிறது. கூடவே மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து ரகசிய நூலகம் ஒன்றிற்குள் சில கட்டுதிட்டங்களுடன் நுழைகிறான். அங்கு ஆடுகள் பேசுகின்றன வாசிக்கின்றன. இப்படி செல்லும் கதை இன்றைய குழந்தைகள் வீடியோ கேம்ஸ் என்று அதிலேயே அமர்ந்து நேரத்தை வீணடிப்பதை கடுமையாக கண்டிக்கிறது. வாசிப்பு பழக்கத்தை ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு நிலா காட்டி சோறூட்டுவது போல ஊட்ட வேண்டியிருக்கிறது.

எங்கள் ஏரியாவில் அரைமணி நேரம் கேம்ஸ் விளையாட பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். நல்லவேளை நான் குறுநகரில் இல்லை. என்னுடன் இணைந்து வருபவன் வாரத்தில் மூன்று முறையேனும் கேம்ஸ் விளையாட நுழைந்து விடுவான். அருகில் ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கிறது. அதில் அமர்ந்திருப்பவர் என் நண்பர் தான்அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் தினமும் இவனை இப்படி கேம்ஸ் விளையாட விடாதீங்க! என்றார். எனக்கு அது புரியவில்லை. நான் சிறுவனாய் இருக்கையில் எனக்கு இப்படியான உலகம் இல்லை! இவனுக்கு வாய்த்திருக்கிறது. பிள்ளை வளர்ப்பு என்பது ஆசிரியருக்கு மகனாக பிறந்தவனுக்கு மட்டும் தான் துள்ளியமாகத் தெரியும். தொட்டதிற்கெல்லாம் தடி எடுத்தவரின் மகனல்லவா நான். அதனால் தான் இப்படி வெளங்காமல் காலையில் அமர்ந்து பெரிய அதிசயத்தை சொல்வது மாதிரி இதை தட்டிக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏழாவதில் படிப்பவன் ஒரு ரூபாயை இவரிடம் கொடுத்து பத்து ரூவா குடுங்க, நான் கேம்ஸ் விளையாடப் போகணும் அப்பா மருந்து வாங்க வர்ப்ப அவர்கிட்ட பத்து வாங்கிக்கங்க!’ என்று நின்றானாம் வெகு நேரம். பின் அழுகை! மற்றொருவன் வீட்டில் 100 ரூபாயை திருடிக்கொண்டு வந்து அது தீரும் வரை கேம்ஸில் அமர்ந்து விளையாடியிருக்கிறான். அவ்வளவு வெறி கேம்ஸின் மீது!

இந்த விசயங்கள் எனக்கு சற்று அதிர்ச்சியே தான். நான் விளையாட்டு போக்கில் இவனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நாளை இவனுக்கும் வெறி ஏறி விட்டால்? கத்தி நீட்டி கூட பைசா குடு என்பான்!
நேற்று மாலை வண்டியில் இருவரும் வந்து கொண்டிருக்கையில், உனக்காக புத்தகம் வாங்கி வந்திருப்பதாக விசயத்தை ஆரம்பித்தேன்.

துரை : படக்கதையாப்பா?

நான் : இல்ல! இது நாவல்டா, கொழந்தைகள் படிக்கிற மாதிரி.

துரை : போப்பா, படம் இருந்தா படிக்கிறக்கு ஜாலியா இருக்கும்.

நான் : படிச்சு பழகுடா, ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா போகும். நீ டெக்ஸ் வில்லரை ஏன் படிக்க மாட்டீங்கறே?

துரை : கலர்ல இருந்தாத்தான் படிக்க முடியும்பா. அதென்னமோ கறுப்பு வெள்ளையா இருக்குது.

நான் : சரி நடுகல் புத்தகம் வந்துடுச்சாம் திலீபன் சொன்னான். எலி அப்படிங்கற நாவல் படிக்கிறியா?

துரை : அதென்னப்பா கதை? (என்றவனுக்கு இப்படி இப்படி என்று கொஞ்சம் சொன்னேன்)

துரை : இது படிக்கலாமாட்ட தான் இருக்குதுப்பா!


தீர்வு : ஒருவனை வளைக்குள் இழுத்து போட்டு கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட மெனக்கெடல்கள் கெட வேண்டி வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு புத்தகங்களை பார்க்கையில் இந்த வருடம் நானும் குழந்தைகளுக்காக புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணமும் வந்து சேர்ந்திருக்கிறது.
                                                                       
                                                                        00000

முதலாக கி.ச. திலீபனுக்கு ஒரு வணக்கத்தை போட்டுக் கொள்வோம்! 
சென்னையில் இந்த புத்தகத்தை அச்சடிக்க ஆசைப்பட்டது நான் தான்.
புத்தக தயாரிப்பில் உள்ளவர்களால் மட்டுமே சிறப்பாக அதை கொண்டு 
வர முடியும். அந்த வகையில் மணி ஆப்செட் எங்களின் நேரத்தைப் 
பொறுத்து அதை சிறப்பாக செய்து விட்டார்கள். சென்னையில் எனக்கு 
இதை கவனித்துக் கொள்ள நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களை 
சிரமப்படுத்தும் ஆசை எனக்கு இல்லை!. திலீபன் என் முகநூல் குருநாதன்.
அவனுடய பதிப்பகத்தில் வரும் புத்தகமாக எண்ணி காரியத்தை (பெரிய) 
ஆற்றியிருக்கிறான். இதற்கெல்லாம் கைமாறு நான் செய்யும் சமயம்
உண்டு! எதையும் எதிர்பார்த்து என் நண்பர்கள் எனக்கு உதவுவதில்லை! 
அவர்களின் உதவிகளை நான் மறப்பதும் இல்லை!


எலி, ரம்ஜான் சாமி கைவிடல இரண்டு புத்தகங்களையும் தமிழில் முதன் 
முறையாக திலீபனே வெளியிட்டு திலீபனே பெற்றுக் கொண்ட நிகழ்வை 
நாம் யாரும் பார்த்து ரசிக்க இயலாவிட்டாலும் அவனே வெளியிட்ட
பிற்பாடு எனக்கு அன்போடு அனுப்பி வைத்த வெளியீட்டு நிகழ்வை 
பகிர்ந்து கொண்டான்! டேய்! நீ நண்பேன்டா!
                                                000


நடுகல் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்!

$
0
0

நடுகல் பதிப்பகத்தின் ஏழாவது வெளியீடாக வந்த செல்வக்குமார் பழனிச்சாமியின் “எலி’ சிறுவருக்கும், பெரியோருக்குமான நாவலை சாரு வெளியிட செல்வக்குமார் பெற்றுக்கொண்ட நிகழ்வு. (திருப்பூர் புத்தக கண்காட்சி 2015)

வீடு சுரேஸ்குமார், ரத்தினமூர்த்தி, லெனின், சாரு இவர்களுடன்!

பிரவீன், ராசுவுடன்!

எதிர் வெளியீடு சா.அனுஷ் நடுகல் வெளியீட்டின் ஆறாவது புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு!

சாருநிவேதிதாவிடம் எக்ஸைல் பிரதியை பெறுக்கொண்ட போது!


000

நாங்க பாத்துக்கறோம்!

$
0
0

எழுத்தாளர்களை என் காதுபட திட்டாதீர்! நாங்களே

பார்த்துக் கொள்கிறோம்!

தமிழில் புத்தகங்கள் வாசிப்போரின் எண்ணிக்கை குறைவுதான் என்று எழுதும் அனைத்து புதின எழுத்தாளர்களுக்கும் தெரியும். பதிப்பகம் அச்சடித்த பிரதிகள் விற்று முடிய மூன்று வருட காலங்கள் ஆகலாம். அப்படி உடனே விற்றுத் தீர்ந்து போக வேண்டுமென்றால் எழுத்தாளன் கோமாளித்தனம் ஏதாவது செய்ய வேண்டும். எழுத்தாளன் செத்து விட்டான் என்று அறிவிக்க வேண்டும். இது நன்றாக வேலை செய்ததை எல்லோரும் கண்முன்னே கண்டார்கள். பிடிஎப் ஃபைல் வடிவில் இதுவரை 2000 வாசகர்களுக்கும் மேலாக வாசித்திருக்கிறார்கள். தேடல் இன்னமும் இருக்கிறது.

எங்கிருந்தார்கள் இத்தனை வாசகர்கள்? இதுவரை என்ன படித்துக் கொண்டிருந்தார்கள்? அதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள இப்படி பைத்திய நிலையில் போன் மேல் போன் போடுகிறார்களே! ஐயோ! படிக்காவிடில் மண்டை சுக்கு நூறாகி விடுமோ? என்ற தவிப்புடன் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள் இன்னமும் ! அடுத்ததாக எழுத்தாளன் தூக்குப் போட்டு செத்தால் தான் இது போல நடக்கும் இங்கு. முகநூலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் பட்டியலில் பலர் இருக்கிறார்கள். ஆனால் இது உச்சம்.

தமிழில் முதலாக வந்த சமையல் குறிப்பு புத்தகம் இன்று வரை விற்றுக்கொண்டே இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். வேடிக்கையோ என்று விசாரிக்கையில் அது உண்மைதான் என்றார் மற்றொரு நண்பர்இப்போது சமையல் குறிப்புகளில் வீட்டில் செய்யவே முடியாத ஐட்டங்கள் பற்றியெல்லாம் எழுதி விட்டார்கள். களிமண்ணால் செய்யப்பட்ட சட்டியை நாம் இன்று டிவி சேனல்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் அடுப்பு மூட்ட மூன்று பெரிய கற்களை எடுத்து போட்டுக்கொண்டு அதில் காட்டில் கைக்கு கிடைக்கும் குச்சிகளை வைத்து அடுப்பை மூட்ட வேண்டும். பின்பாக வடைச்சட்டியை எடுத்து திடீர் அடுப்பு மீது வைத்து சூடேற்ற வேண்டும். பின்பாக காட்டில் எண்ணெய்க்கு நீங்கள் தவிக்காமல் கையோடு பறித்து வந்த துக்குடி இலைகளை அதனுள் போட வேண்டும். (துக்குடி இலைகள் அமேசான் காடுகளில் மட்டும் கிடைக்கின்றன என்பது வெறும் வதந்தி தான். நம்மூர் காடுகளில் இசிபட்டுக் கிடக்கின்றன) இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். தலைப்பு மட்டும் புதுவித காட்டுச் சமையல் என்று போட்டு விட வேண்டும். இம்மாதிரி புத்தகங்களுக்கு விளம்பரம் மற்றும் விமர்சனக் கூட்டம் போட வேண்டியது அவசியமில்லை.

தமிழில் ரொம்பகாலமாக நான் எழுத ஆசைப்படும் புத்தகம்சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது எப்படி?’ எப்போது வேண்டுமானாலும் இதை எழுதி விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது என் மீதே! ஒரு வார்த்தை எமது நடுகல் சுரேஷிடம் சொன்னால் போதும்.. ‘எழுதுங்க நீங்க, அங்கங்க கோட்டுப்படம் டிசைன் பண்ணி கொண்டு வந்துடலாம்என்பார்.

இங்கு நான் சொல்லவரும் எழுத்தாளர்  நீண்ட நெடுங்காலமாகதான்வசித்து நகரம் மாசுபடுவது பற்றியும், நொய்யல் நாசமானது பற்றியும்,சுற்றுச்சூழல் கண்டமானிக்கி பாதிக்கப்படுவதையும், வல்லுறவு செய்யப்பட்ட பெண் போல ஒரு போர்வை கிடப்பதையும், புட்டம் பெருத்த பெண் காபி கொடுக்க தன்னிடம் வருவது பற்றியும், மாதவிடாய் பெண் சிறுநீர் கழித்ததால் தான் அணை வற்றிவிட்டது என்றும்  தகவல்களை தன் புத்தகங்களில் நிரப்பி சமூக ஆர்வலர் என்ற பெயரை பெற்றவர். அவரது முகத்தின் புன்னகை என்னை எழுத விடாமல் தடுக்கிறது என்றாலும் ஒரு கவனத்திற்கு அவர் எப்போது வருவார்? என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. பரிசுகள் ஒரு எழுத்தாளனை  ஊக்குவிக்கும் வேலை செய்து விடுமா? என்றால் ஆமாம் என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது. எனக்கு எங்கெங்கே என்னவென்ன பரிசுகள்  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. சிலர் பரிசுகளை மனதில் வைத்து திட்டம் போட்டே எழுதி அனுப்பி பரிசு பெற்று மகிழ்கிறார்கள். 89ல் கோவையில் பரிசுக்கதை என்று 15 ரூபாய் கொடுத்து மாலைமுரசு என்னை ஊக்குவிக்கும் வேலையை செய்தது. திருப்பூர் ஓடி வந்து விட்டேன்.

கண்காட்சியில் என் நண்பர்கள் இருவர் கண்டபடி ஒரு எழுத்தாளரை திட்டியபடி வந்தனர். யார்? என்ன? என்று நான் விச்சாரிக்க முடியாதபடி வேறு நண்பருடன் உரையாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தேன். அதாவது வெளியே பேருந்து நிறுத்தம் நோக்கி! பெல்! பெல்!என்ற சப்தம் இடையிடையே அவர்கள் பேச்சில்கேட்கவே என்னவென விசாரித்தேன்.

 ”20% தள்ளுபடின்னு என் கையில ஸ்டால்ல வேற புக்கு எடுக்குறப்ப திணிச்சு உட்டுட்டாருங்க! சரி பெரிய மனுசன் திணிக்கிறாரேன்னு ஒன்னும் சொல்லாம வாங்கிட்டேன்! இதையெல்லாம் என்னால படிக்க முடியாதுங்க! இப்பத்தான் இவரு சொல்றாரு.. பெல்பெரிய எழுத்தாளராம். இவரு கையிலயும் திணிச்சிருக்காரு அதே புத்தகத்தைஇப்பத்தான் என் நண்பர்கள் மதுரையில இருந்து  கண்காட்சிக்கி வந்தாங்க உள்ளார போறப்பவே சொல்லிட்டேன்.. அந்த ஸ்டால் பக்கம் போயிடாதீங்கன்னு!”

சரி நீங்க எனக்கு வேண்டாமுன்னு சொல்லிட வேண்டியது தானே அவர்ட்ட!”

பழக்கமில்லீங்களே.. ஆசிரியரா வேற போயிட்டேன் நானு

அப்ப ஆசிரியர் தண்ணி போட மட்டும் டாஸ்மார்க் போலாமா?”

இந்தூர்ல என்னை யாருக்குங்க தெரியும்? அதான்கொஞ்சம் ஜாலியா இருக்கேன்!

அந்த புக்கை எனக்கும்தான் குடுத்தாரு! கழிவெல்லாம் என்கிட்ட சொல்லுல! பழக்கத்துக்கு மொத்த கழிவுல எனக்கு குடுத்திருக்கணும் அவர். ரெம்ப நாள் ஆச்சு அவரு கதை படிச்சுன்னு கொஞ்சம் உள்ள போனேன். சிரமம் தான். பேப்பர் கட்டிங்கெல்லாம் வெட்டி வச்சதை உள்ளார எழுதியிருக்காரு அவரு!”

ஐய்யோ அப்படிங்களா? என் வீட்டுக்கு தந்தி, தினகரன் டெய்லியும் வந்திருமுங்க. பேப்பர் செய்திகள் எல்லாம் என்னிக்குமே நாவலாகாதுன்னு யாரும் சொல்றதில்லியா?

‘’அப்ப நீங்க படிக்க வேண்டிதே இல்லியே! நைஜீரியாக்காரர்கள் திருப்பூர்ல வந்து வாடகை வீடெடுத்து தங்குற விசயம் யாருக்குமே தெரியாதுங்கற போக்குல சொல்லியிருக்காருங்க! சிக்கல் என்னன்னா அவருக்கு நைஜீரியகாரங்களை ரொம்ப பிடிச்சிருக்குது போல! அந்த ஒடம்பு அவர்ட்ட இருந்திருந்தா பொடிப்பய நானெல்லாம் இப்படி சொல்லுவனா? சி.ஆர்.ரவீந்திரன் ரொம்ப சிறப்பா தன்னோட நாவல்ல திருப்பூர் வாழ்க்கையை பதிவு பண்ணியிருக்காரு. சுமங்கலி திட்டம் அப்படிங்கறதை ரொம்ப விரிவா சொல்லியிருக்காரு. ஆனா யாருக்கும் தெரியாது. சரி யார் யாரோ எழுதுறாங்க. அதுல இதுவும் ஒன்னு. என்ன இருந்தாலும் அவரு எங்க ஊர்காரரு. இல்லீங்க என்னால படிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வந்திருக்கணும் நீங்க! அதை உட்டுட்டு இங்க வந்து அவரை பெயர் சொல்லி திட்டக்கூடாது. அவரு தன்னோட எழுத்தை அனைவரும் வாசிச்சு திருப்பூரு இப்படி குப்பைக்காடா போகுதேன்னு வருத்தப்பட்டு எல்லா மக்களும் போராட திருப்பூர் வரணும்னு நினைச்சி குடுத்திருப்பாரு!’’ என்றதும் நண்பர் திரு திருவென விழித்தார். போராட நாளைக்கே பெல்தலைமையில் இறங்கி விடுவேனோ? என்ற பார்வை தான் அது! அப்போது கூட வந்த நண்பர் களம் இறங்கினார்.

நீங்க கூட திருப்பூர்ல பனியன் கம்பெனிக்கி வர்ற பெண்கள் அனைவரும் தவறான பாதையில போறாங்கன்னு எழுதி எழுதி வச்சுடறதா அவரு வருத்தப்பட்டு பேசினாரே அன்னிக்கி மீட்டிங்குல!”

அவரு எம் பேரை சொல்லலியே! எழுதுறாங்க சிலரு அப்படின்னு பொதுவா தான சொன்னாரு! அப்புறம் அவர்ட்ட நான் சொல்லிட்டேன். நீங்க என்னை திட்டுங்க! நான் உங்களை திட்டுறேன். அப்பத்தான் ரெண்டு பேர்த்தையும் தமிழ் வாசக உலகம் என்னடாதுன்னு திரும்பி பாக்கும்! நான் ஆரம்பிக்க போறேன்னு சொல்லிட்டேன். இனி அவரு என்னை படறப் புடிப்பாரு பாத்துக்கங்க! அப்புறம் அடுத்த மீட்டிங்குல நாங்க கட்டுமாரு கட்டிக்குவோம். முகநூல்ல போயி நான் எழுதுவேன். அவரு என்னை அடிச்சி வச்சிட்டாரு. நான் குத்திட்டேன்னு! எப்டி ஐடியா!”

திருப்பூருகாரவுக எல்லாம் லூசுகளா இருப்பீக போல!”

ஸ்டோரி ரைட் பண்ணுற எல்லாருமே மெண்டலுக தான். இது தெரியாம வாத்தியாரா இருந்துஎன்னத்த பிள்ளைங்களுக்குநீங்க  சொல்லிக் குடுப்பீங்களோ? எனக்கு தெரிஞ்சு ஒரு எழுத்தாளரு இருக்காருங்க! அவரு இங்க திருப்பூரு வரலை. ஒரு பதிப்பகத்துல புத்தகம் ஒன்னு கொண்டாந்தாரு. வரே புக்ஸ்டால்ல போயி போட்ட 20 புத்தகத்தையும் வாங்கி கொண்டி வீட்டுல போட்டுட்டாரு. மறுக்கா எனக்கு அந்த புத்தகம் தேவைப்படுதுன்னு வந்தேன். ஸ்டால்ல புக்கு இருக்கான்னு கேட்டேன். பெரிய பிரச்சனைங்க இந்த பதிப்பகத்துகாரங்களோட! என்றவர் பதிப்பக உரிமையாளருக்கு ஸ்டாலில் இருந்தே போன் போட்டாரு, இங்க ஸ்டால்ல என் புக்கு ஒன்னுமே இல்லீங்கன்னு! அவரு போன ஒடனே ஸ்டால்ல இருந்த பையன் சொல்றான் என்கிட்ட, ‘நேத்து இவரே எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டு இப்ப பந்தா காட்டுறாரு பாருங்கன்னு

வரு கூட புது எழுத்தாளர். ஒரு ஆர்வத்துல பாஞ்சுட்டாருன்னு சொல்லலாம். இங்க எழுதிட்டு இருக்குற எல்லா இலக்கியவாதிகளுக்கும் மூத்தவர் நம்ம ஆள். ஆனா இலக்கியத்துல எப்படி சுஜாதாவை இன்னிவரைக்கும் சேர்த்திக்க மாட்டீங்கறாங்ளோ அப்படி இவரையும் இலக்கியத்துல சேத்திக்க மாட்டிங்கறாங்க! இலக்கியம்ங்கறது வேறன்னு இன்னமும் இவருக்கு தெரிய மாட்டேங்குது! புலியப்பாத்து பூனை சூடு போட்டுக்கிட்ட வேலையும் பண்ணி பாத்தாரு. யாரும் கண்டுக்கலை! தன்னை முன்னிருத்தி பேப்பர்ல செய்தி வரணுங்கறதுக்கு தானே,பெல்பேசினார்னு எழுதி காசு கொடுத்து பட்டாஸ் கிளப்புவாரு. எதுக்கு இந்த விளம்பரம்? எனக்கு புரியவே இல்லீங்க! ஒருவேளை அகாடமி விருது நோக்கி நகரும் நகர்வாக இதை பார்க்கலாம்! அகாடமி விருதுக்கு தேவைப்படும் ஒரே சொல் அமைதி! அமைதியாக தானுண்டு தன் படைப்புலகம் உண்டென இருந்தால் நாலு பேர் சிபாரிசு கிட்டும். நான் சிபாரிசு செய்கிறேன் நம் ஆளை. சீக்கிரம் அதையும் குடுத்துடுங்க! ஏனெனில் பூராம் சொந்தக்காசு போட்டு செலவழிக்கும் விசயம்.

அப்பப்ப நான் பெல்லைமறந்துட்டாலும் எங்கள்  படைப்புலகம் வேறுவேறானவைகள் தான்நண்பர்களே!யாரையும் திட்டுவதென்றால் ஓரம் பாரம் போய் வாய் வலிக்க தனிமையில் நின்று திட்டுங்கள். பக்கத்திலிருப்பவன் காது பட எழுத்தாளனை திட்டாதீர்கள்அதை இன்னொரு எழுத்தாளன் கேட்பது சங்கடமாக இருக்கிறது. ஆகவே நாங்களே இந்த விசயத்தை பார்த்துக் கொள்கிறோம்.

என்னை திட்ட சில டிப்ஸ் :

என்னாரமும் பாலியல் எழுதுகிறான், அல்லது பியர் குடிக்கிறான். இவனது கதைகளில் பெண்கள் எந்த நேரமும் அதற்கு தயாராக நிற்கிறார்கள். பெண்களில் நல்லவர்களே இல்லியா? ஆண்கள் ஏன் எந்த நேரமும் நீட்டிக்கொண்டே செல்கிறார்கள், செல்போனை இப்படியா பயன்படுத்துவார்கள்?

000






காப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை

$
0
0

ப்ரென்ஸ் காப்கா-வின் உருமாற்றம்

மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாச்சார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்-அமரந்தா.

தமிழ் நாவல்களில் இருக்கும் போதாமைகளை எப்போதும் மொழிபெயர்ப்பு நாவல்களே பூர்த்தி செய்து வருகின்றன. இப்படி இருக்க தமிழ் உரைநடையில் பெரும் மாற்றங்கள்  சமீபகாலங்களில் நடந்தேறி வருகின்றன. வித்தியாசமான கதைக்களன்களில் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இலக்கியம் பல வடிவ மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. இதுவெல்லாம் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையால் நடந்தேறியவைகள் தான்.

தமிழ் இலக்கியம் தேக்கமில்லாத இந்த சமயத்தில் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையும் அதிகப்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பு புத்தகங்களை கொண்டுவருவதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புகளை தேடியெடுத்து வாசிக்கும் வாசிப்பாளர்களும் பெருகியிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு இது  பட்டாடை உடுத்தியஅலங்காரம் தான்.

காப்காவை வாசித்தல் என்பது வாசிப்பாளனுக்கு சவாலான வேலையாக இருக்கிறதுஎன்னிடம் 1992-ல் க்ரியாவில்வெளிவந்தவிசாரணைஇன்னமும் படித்து முடிக்கப்படாமல் இருக்கிறதுகாரணம் அந்த அளவு வாசிப்புத் திறன் என்னிடம் இல்லாமல் போனதால் தான். போக மொழிபெயர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக என்னால் வாசிக்க இயலாத புத்தகங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அது அப்படியல்ல! என்பதை சமீபத்தில்நிழல்களின் உரையாடல்’  மார்த்தா த்ராபா வின் புத்தகம் அமரந்தா மொழிபெயர்ப்பில் 1997ல் வந்த புத்தகத்தை சமீபத்தில் தான் முழுதாக வாசிக்க முடிந்தது. இத்தனை காலம் நான் வாசிக்ககொடுத்தனுப்பிய நண்பர்களாலும் வாசிக்க இயலாத புத்தகம் அது. போக தமிழில் வெளிவந்த முதல் லத்தீன் அமெரிக்க நாவல் அது.

80களின் இறுதியில் கெளதம சித்தார்த்தன் தன் உன்னதம் முதல் இதழைக் கொண்டு வந்த போது அதில் காப்காவின் உருமாற்றம் கதையின் ஒரு பகுதியை கொண்டு வந்தார். மீதம்அடுத்த இதழில்  என்ற அறிவிப்பை பார்த்து எனக்கு ஏமாற்றம் தான். இருந்தும் அது  புத்தகமாக வருகையில்  தேர்ந்த வாசகர் ஒருவர் என்னிடம், கரப்பான் பூச்சியா மாறிடறான்டா இதுல ஒரு மனுசன்! என்றே அறிமுகம் செய்தார். என் அப்போதைய வாசிப்பில் கரப்பான் பூச்சி தான் மனதில் இருந்தது.

யாரும் இந்த சிறுகதையில் (இது சிறுகதை தான்! குறுநாவலும் அல்ல) கரப்பானாகவோ, வண்டாகவோ மாறவேயில்லை என்பது தான் இப்போது நான் புரிந்து கொண்டதுபோக எதிர்வெளியீடு தற்போது கொண்டு வந்திருக்கும் உருமாற்றம் புத்தகம் காப்காவை முன்னுரையில் மொத்தமாக, சுத்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தொகுதியில் ஆறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

வளை என்கிற சிறுகதை இத்தொகுதியின் உச்சம். படிப்போர் வளைக்குள் ஓடிக்கொண்டே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விலங்காகவே மாறி விடுகிறார்கள். கதை செல்லச் செல்ல இது என்ன விலங்காக இருக்கக் கூடும் என்ற கேள்வி வாசகனை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் மனதில் இதுவாக இருக்க கூடுமோ? என்று யோசிக்கையில் அந்த விலங்கும் அல்ல என்பதை விலங்கின் நடவடிகைகள் சொல்லிச் சென்று கொண்டே இருக்கிறது. உடும்பாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்துப் படித்துக் கொண்டிருக்கையில் அதுவும் மாறுகிறது.

வளை என்றால் பெரும்பாலும் எலியைத் தான் யோசிப்போம்எலியை வாயில் ஒருமுறை கவ்வியிருப்பதாகவும், ஏற்கனவே எலி பயன் படுத்திய பழைய வளை என்றும் வருகிறது. இறுதியாக எதிரியை நேருக்கு நேர் சந்திகையில் பற்களைக் காட்டி, என்று வருகையில் எல்லாமும் மாறுகிறது. காப்கா,பிரச்சனைகளை சந்திப்பவை அனைத்தும் விலங்குகளாக வைத்து விலங்குகளின் பார்வையில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது? எத்தனை சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை சொல்ல முயல்கிறார். ஆனால் அவரின் விலங்குகள் யாவையும் விலங்குகளே அல்ல! எல்லாமே உருவகப்படுத்தப்பட்ட விலங்குகள் தான். எல்லாமே தான் தங்கியிருக்கும் வீட்டைப் பாதுகாப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தான். எதிரிகளிடமிருந்து வீட்டை பாதுகாத்தல்! தேவையான உணவு வகைகளை வீட்டினுள் பத்திரப்படுத்துதல். சுறுசுறுப்பாக இயங்குதல்.
காப்கா தன் கடைசி காலகட்டங்களில் காசநோயினால் அவதிக்குள்ளாகியிருக்கிறார். அந்த அவதியின் நான்கு வருட காலகட்டத்தில் அவர் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் அவரது நோய்க்கூறுகளின் தீவிரத்தையும், ஓடியாடி உழைத்து சேமித்திருக்க வேண்டிய வாழ்க்கைத் தேவைகளையும் பற்றியே எழுதிச் சென்றிருக்கிறார். இப்போது  அவரது கதைகளை வாசித்து உள்நுழைவதற்கான வாசல் திறக்கிறது.

எல்லா விலங்குகளும் காப்கா தான். ராட்சத மூஞ்சூறு, ஒரு நாயின் ஆராய்ச்சி,வண்டுஇவை யாவுமே. தன்னுடைய பதட்டம், தனிமை, தந்தை மீது தனக்கிருந்த மரியாதை, வேலைப்பழு, ஆசை, நோய்க்கூறு, துன்பத்தில் ஆழ்த்தும் உடல் வலி இவைகளே இக்கலைஞனுக்கு போதுமானவைகளாக இருந்திருக்கின்றன அவனது படைப்பாற்றலுக்கு. படைப்புகளில் இருக்கக்கூடிய நிதானம் கூட, அல்லது திரும்பத் திரும்ப ஒன்றை சொல்வதின் மூலமாக அவரது நோய்க்கூறுகளின் அவஸ்தை காரணமாக இருந்திருக்கலாம். அதற்காகவே அவர் அதீத கற்பனை வடிவத்தை ஆசையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அதிலும் அவருக்கு போதாமை இருந்திருக்கிறது என்பதை வாசிக்கையில் நாம் உணருகிறோம்.

உருமாற்றம் கதையில் வெளிஉலகம் செல்ல வேண்டும், தன் குடும்ப நிலையை உழைத்து சம்பாதித்து உயர்த்த வேண்டும் என்ற ஆசையை நினைவுகள் வாயிலாககிரிகர் வெளிப்படுத்துகிறான். ஆனால் அவன் நோயின் தீவிரப்பிடியில் படுக்கையில் கிடக்கிறான். அவனது தந்தை அவன் நோய் பற்றி எந்த வருத்தமும் அடைவதில்லை. பதிலாக சொற்களால் விரட்டுகிறார். அந்த சொற்களில் ஒன்று தான் ஆப்பிள் வடிவில் அவன் முதுகில் ஆறாத வடுவாக ஒட்டியிருக்கிறது. அம்மா அவன் நோய்க்காக கண்ணீர் சிந்துகிறார். தங்கை வேறு வழியில்லாமல் அண்ணனுக்கு உதவுகிறாள்.

கிரிகர் தன் உடல் உபாதைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உணவின் மீதும் ஆசையில்லை. அவனது அறை அவனுக்கான உலகமாகி விடுகிறது. அவன் அறையிலிருந்து வெளியேறினால் தந்தை விரட்டியடிக்கிறார் அறைக்குள்ளே அவனை. வீட்டை மாற்றிச் செல்லலாம் என்றால் நோவுக்காரனை இழுத்துக் கொண்டு எங்கு அலைவது? என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. கிரிகர் இறந்த பிறகு அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்த முனைகிறார்கள் என்று முடிகிறதுஇதில் ஒரே விசயம் அவனது நோய்க்கூறுகளைப் பற்றியோ, அதை சரிப்படுத்துவது பற்றியோ வீட்டார் எதுவும் செய்வதில்லை. அவன் அப்படியே கிடக்கட்டும் என்று மட்டு விடுகிறார்கள். எல்லாமே குறீடுகள் தான்.

2009-ல் நான் எழுதிய சிறுகதை நல்லதம்பியின் டைரிக் குறிப்புகள். அது ஒரு பிற்பகல் மரணம் தொகுதியில் வெளிவந்தது. அதை எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை. ஒரு பத்திரிக்கை காப்காவின் உருமாற்றத்தை ஞாபகப்படுத்துகிறது என்றது. அருமை! எனக்கே அப்போது தான் உறைத்தது. பூரான் கடியை சிறுவயதிலிருந்தே வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் கதைப்போக்கில் பூரானாக மாறி விடுவது. இதில் எந்த நோய்க்கூறுகளையும் நான் ஒளித்து வைக்கவில்லை. நேரடியாக சொல்லப்பட்ட கதை கொஞ்சம் வேடிக்கைகளை சேர்த்து. இனி அது திரும்பவும் திருத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

நல்ல சிறுகதை என்பது ஒரு பூடகக் கவிதை போன்று நாவல் வடிவங்களிலிருந்து வேறுபட்டது தான். சிறந்த சிறுகதை ஆன்மரீதியில் நாவலை விட நெருக்கமாக இருக்கத்தான் செய்கிறது. சிறுகதை தரம் கூட வேண்டுமானால் கெட்டிப்படுத்துதல் வேண்டும். வளையில் வரும் விலங்கு தன் பணியில் ஒன்றாக சுவற்றை கெட்டிப்படுத்தும் செயல் அதன் மூக்கருகில் ரத்தம் வருகையில் தான் உணருகிறது சுவர் கெட்டிப்பட்டு விட்டதென்பதை. பல்வேறு விதமான போக்குகளைப் பற்றி நுணுக்கமான பகுப்பாய்வுகள் எளிய முறையில் ஒன்றை விளக்க துணை புரியும்.

வாசிப்பு என்ற செயல் வேகமான ஒன்றல்ல. படைப்பாளியோடு கைகோர்த்து இறங்கும் அல்லது பங்கு கொள்ளும் செயல். மேலோட்டமான வாசிப்புக்கு புத்தகங்கள் பல இருக்கின்றன. உண்மையான வாசிப்பைக் கோரும் புத்தகங்களாக மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. கவனமும் அக்கறையுமான வாசிப்பு மொழிபெயர்ப்புகளை வாசிக்கையில் தேவைப்படுகிறது. அப்போது தான் அதன் முழுவீச்சும் நமக்கு புலப்படும். இலக்கியம் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்துகொண்டே தான் இருக்கும்.

உருமாற்றம் (ஃப்ரன்ஸ் காப்கா)
தமிழில் : பேரா.ச.வின்சென்ட்.
எதிர் வெளியீடு. விலை : 200. தொலைபேசி : 04259 226012.








சும்மா இரண்டு போட்டாக்கள்.

$
0
0

பிரச்சனைகள்புதுப்புதுவிதமாய்ஊருக்குள்நடந்துகொண்டேதான்இருக்கும்! நேற்றிரவுஇவன்மாடியில்கிடந்தான்காவலுக்குகீழேஇராமல். சரிசெயினைமீண்டும்அத்துவிட்டுஆடுகளைதுரத்தஓடிவிட்டானோ? என்றுதான்நினைத்தேன். அப்படியல்லஊருக்குள்மசைபிடித்தநாய்சிலரின்நாய்களைமண்டைக்கவ்வுகவ்விவிட்டதாம். ‘நாம்பிரச்சனையபாத்துக்கறேன்தள்ளிஅக்கட்டாலபோங்கடா!’ என்றுமுன்னால்செல்வான்இவன்! அதனால்தான்இவன்டைகர். இன்னமும்அந்தநாயின்நடமாட்டமிருப்பதால்பாதுகாப்பானபகுதியில்இப்போதைக்குஇவன்இருக்கிறான். எட்டுபோட்டுலைசன்ஸ்வாங்கிடலாம்னாராஸ்கல்எட்டுபோடமுழிக்கிறான். சொல்லிக்கொடுக்கையில்சரியாகபின்னால்ஓடிவந்துஎட்டுபோடுகிறான். அதிகாரிமுன்பாகசொதப்புகிறான். லைசென்ஸ்இல்லாமல்நான்படும்வேதனை…!!!!
000

விசயமங்கலம் சந்தைக்கடுவு வாரம் ஒரு முறை செவ்வாக்கெழமை கூடுவது. அன்று மாலை ஐந்தரை மணியளவில் அருகிலிருக்கும் ஏரி மேல் நான் ஏன் சென்றேன் என்பதை சொல்லமாட்டேன். போக என் செல்போன் இப்படி அழகாய் எடுக்கும் என்பது அப்போது தான் தெரியும். சந்தை இன்னும் உள்ளே இருக்கிறது. இது வெளிப்புறம். அடுத்த படம் நூலகம் அருகில் நின்று சும்மா ஒரு தட்டு!





0000

இனிய உதயம் செவ்வி 2015 பிப்ரவரி

$
0
0


வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம்

வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து 

ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை

எழுதியிருக்கும் இவர், மண்ணின் மொழியுடன் நவீன மொழியைக் கலக்கிறவர். 

சர்ச்சைக்குரிய எழுத்தாளராகவும் பார்க்கப்பட்டுவருகிறார் வா.மு. கோமு.               

வா.மு. கோமு இதுவரை "கள்ளி', "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்', "எட்றா

வண்டியெ', "மங்கலத்து தேவதைகள்', "57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம்', "மரப்பல்லி', 

"நாயுருவி', "சயனம்', "ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி', "சகுந்தலா வந்தாள்

என்கிற பத்து நாவல்களும்.. "மண்பூதம்', "சேகுவேரா வந்திருந்தார்', "தவளைகள் குதிக்கும் 

வயிறு', "பிலோமி டீச்சர்', "என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்', "ஒரு பிற்பகல் 

மரணம்'என்கிற சிறுகதை தொகுப்புகளும் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார். "சொல்லக் 

கூசும் கவிதை'என்கிற கவிதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.  அவரை "இனிய 

உதய'த்திற்காக நாம் சந்தித்தபோது...


சமீபத்தில் உங்கள் சிறுகதைகளை அதிகம் பார்க்கமுடியவில்லையே! ஏன்?

கடந்த வருடம் முழுமையாக நான் சிறுகதைகள் என்று நான்கு கதைகள் மட்டுமே

எழுதினேன். அவை பத்திரிகையில் வெளிவந்தன. அதற்குக் காரணம் நான்

நாவல் எழுதுவதில் கவனம் செலுத்தியமையால்தான். சென்றவருடம் ஆகஸ்டு ஈரோடு

புத்தகத் திருவிழாவுக்கு என் ஐந்து புத்தகங்கள் பதிப்பகங்கள் வாயிலாக 

வெளிவந்தன. அவற்றில் மூன்று புத்தகங்கள் நாவல்கள். சொல்ல வேண்டிய 

விசயங்களை விரிவாய்ப் பேச நாவல் என்கிற களம் தேவையாய் இருக்கிறது. 

எழுத்தாளர்களின் மனநிலை மாறிக் கொண்டேதான் இருக்கும். நாவல் என்கிற 

வடிவம் திடீரென சலிப்பை உருவாக்குகையில் சிறுகதை, கவிதை என்கிற மற்ற

வடிவங்களுக்குத் தாவிவிடுவார்கள். என் தற்போதைய மனநிலை யில் மீண்டும்

சிறுகதை எழுதுவதில் ஆர்வம்வந்து அதில் இறங்கிவிட்டேன். எழுத்தை நான் 

காதலித்துக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கும். வடிவ 

மாற்றங்கள் ஒரு பிரச்சினையல்ல!


நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்?


85-லேயே நான் எழுதிப் பழக ஆரம்பித்து விட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும்

ஞாபகம் இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான்

ஒருவன். படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்றுவிடுவானோ என்று

தோன்றும்விதமாக நகர்த்திச் சென்று, அவன் வீடு சென்று பொம்மை ஒன்றைக் 

குத்திக்கிழித்து வீசுவான். குழந்தை ஆசையில் மனைவி பொம்மை வைத்துக்கொண்டு 

முத்தம் கொடுத்த படியே இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்! நண்பர்கள் அருமை 

என்றார்கள்.

அப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர் சேமிப்பில் இருந்தன.

டேபிள்மீது கிடக்கும் "பிரக்ஞை', "கசடதபற', "'இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல்.

ஒன்றும் புரியாது. கதைகள் தென்பட்டால் வாசித்துவிடுவேன். கல்லூரி சென்ற சமயம்

"ஆனந்த விகடன்'வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின் 

"தொட்டால் தொடரும்தொடரைக் கிழித்து பைண்டு

செய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.


பதிப்புத்துறையிலும் கால்வைத்திருக்கும் நீங்கள் நடுகல்’ 

என்கிற பதிப்பகத்தை துவங்கி புத்தகங்கள் 

கொண்டுவருகிறீர்கள். எழுத்தாளர்கள் ஏன் பதிப்புத்

துறையை தேர்ந்தெடுக்கிறார்கள்?


பதிப்புத்துறையில் எழுத்தாளர்கள் கால் வைப்பது

ஆரோக்கியமான விசயம்தான். எழுத்தாளர்களுக்கான 

வாசகர்கள் அதிகரிக்கவும், புத்தக விற்பனையை 

மையப்படுத்தியுமே பதிப்பகங் கள் இயங்குகின்றன. 

எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களுக்கான ராயல்டியின் 

சதவிகித தொகை குறைவாக இருக்கிறது. தவிர புத்தகங்கள் எந்த அளவு

விற்பனையாகின்றன? என்ற தகவல் எதுவும் எழுத்தாளனுக்கு தெரியவருவதும் 

இல்லை. வேறு தொழிலில் இருக்கும் எழுத்தாளர்கள் ஒரு புத்த கத்தை எழுதினோமா.. 

கொடுத்தோமா.. வந்துச்சா.. சரிவிடு என்ற மனநிலையில் இருக்கிறார்கள். முழுநேர 

எழுத்தாளர்கள் அப்படி இருக்க வாய்ப் பில்லை. தமிழில் இலக்கியம் என்ற

வகைமை ஐநூறு பிரதிகளில்தான் நிற்கிறது. இதை அதிகப்படுத்து வதற்கான 

வழிவகைகளை முயற்சித்து தோற்றும் போய்விட்டார்கள்.

கால வளர்ச்சியில் புத்தகங்களை அச்சிடுவதற்கான தொகையும் குறைந்திருக்கிறது

. ஆன்லைனில் புத்தக விற்பனை வந்துவிட்டது. இந்த வளர்ச்சியை எழுத்தாளர்கள் 

முடிந்தமட்டிலும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தவறில்லை. நடுகல்பதிப்பக 

வாயிலாக தஞ்சை ப்ரகாஷின் "கள்ளம்'’ கொண்டு வந்திருக்கிறோம். தவிர திறன்வாய்ந்த

 இளம் எழுத்தாளர்களுக்கான களமாக நடுகல்பதிப்பகம் செயல்படும். 


இலக்கிய உலகில் சமீபத்தில் பெருமாள் முருகனின்‘"மாதொருபாகன்'’ நாவல்மீது 

பலத்த சர்ச்சை எழுந்திருக்கிறதே?


இது கொங்கு மண். இங்கு ஆர். சண்முகசுந்தரம் என்கிற படைப்பாளி மட்டும் முன்பு

இலக்கிய உலகில் பேசப்பட்ட எழுத்தாளர். அடுத்ததாக சி.ஆர். ரவீந்திரன், சூரியகாந்தன்

போன்ற படைப் பாளிகள் மண்ணின் எழுத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து இந்த மண்ணில் இலக்கிய உலகில் பேசப்பட்ட எழுத்தாளர் 

பெருமாள்முருகன். இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கி வந்தவர். 



திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வு ‘"மாதொருபாகன்'’ என்கிறார். கள ஆய்வுகளை

கட்டுரை வடிவிலேதான் நாம் பார்த்துப் படித்திருக்கிறோம். நாவல் வடிவில் கதையாகச்

சொல்கிறார். இந்த மண் கடவுள் நம்பிக்கையின்மீது தீராத பற்றுக்கொண்டது. ஒவ்வொரு

குலத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம். கோவில் அமைக்க வசதியில்லாத குலம்கூட

குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சாமிக்கு பூஜை, பொங்கல்,

படையல் என்று இட்டுப் போவார்கள். கள ஆய்வுகள் யாரையும் காயப் படுத்தக்கூடாது

 தான்.

"எழுத்தாளன் செத்துவிட்டான், அவன் படைப்புகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறான்!

என்று அவர் அறிவித்துவிட்டு ஒதுங்கிச்சென்றது பெரும் தவறு! அதை முகநூலில் அவர்

போட்டு விட்டுச் சென்றதுதான், மற்றைய படைப்பாளி களுக்கு என்ன இது? என்ன 

நடக்கிறது?’ என்ற கேள்விகளை உருவாக்கி அவருக்கு ஆதரவான கரங்கள் கூடின. 

திருச்செங்கோடு அவர் சொந்த ஊர். உள்ளூரில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எழுத்தே 

வேண்டாம் என்று முடிவுசெய்ததும், பிழைப்பே போதும் என்று முடிவுசெய்ததும் அவரது

சொந்த விசயமாகி இருக்கும்.
 

பெருமாள்முருகன் இப்பிரச்சினைகள் முடிந்து எழுதவந்தாலும் அது அவரது 

எழுத்தாக இனி இருக்காதுதான். இப்பிரச்சினையால் நான் சொல்ல வருவது திரும்பத்

திரும்ப ஒன்றேதான். இனி இந்த மண்ணில் இலக்கியத்தில் ஒரு படைப்பாளி 

காத்திரமாய் வெளிப்பட வாய்ப்பே இல்லை! அது போக முன்பே சொன்னாற்போல

முன்னூறு, நானூறு பிரதிகள் விற்கும் இலக்கியச் சூழலில் ஆய்வு நாவல்கள்

என்றால் மட்டும் நூறு பிரதிகள் அதிகம் விற்றுத் தீர்ந்துவிடுமா? கலைகளுக்கான

ஆய்வு மையம் ஆவணங்களை சேகரித்து எதை இந்த காலத்துக்குச் 

சொல்லப்போகிறது? 


பிரச்சினைகள் நடப்பதும் நல்லதுதான். வேறு கதவுகளும் திறக்கின்றன. பச்சோந்திகள்

இடத்திற்கு தக்கதாய் வர்ணத்தை மாற்றிக்கொள்ள வல்லவை. இடம் அப்படியாய் 

இருக்கையில் வர்ணங்களை எப்படியேனும் பூசி வாழ்வதும்கூட வாழ்க்கைதான். போக 

கோழைத்தனம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதும் இல்லை! ஒருசிலர் 

வரலாற்றில் மறக்கப்படுவதும், மறக்கடிக்கப்படுவதும் நடப்பது ஆடிக்கு ஒருமுறையும்

அமாவாசைக்கு ஒருமுறையும் தான்.


சினிமா துறை எப்படி இருக்கிறது? நீங்கள் ஏன் அத்துறைக்கு வர 

முயற்சிக்கவில்லை?


சிறுநகரங்களில் இன்று தியேட்டர்கள் பொருள்களைக் கிடத்தும் குடோன்களாகவும்,

காம்ப்ளெக்ஸ்களாகவும் மாறிவிட்டன. முடிந்தது சினிமா என்றார்கள். அப்படியெல்லாம்

இல்லை என்பதுபோல அதன் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது. குறுநகரில்

தொழில் ரீதியில் வெற்றி பெற்றவர்கள்கூட தயாரிப்பாளர் களாய் மாறிவருகிறார்கள்.

எத்தனையோ சிரமப்பட்டு தவித்த உதவி இயக்குனர்கள் பலருக்கும் நம்பிக்கை

வெளிச்சம் கிட்டியிருக்கிறது. 

குறைந்த பட்ஜெட்டில் வரும் பொழுதுபோக்குப் படங்கள் பார்வையாளர்களை

 மகிழ்ச்சிப்படுத்து வதில் தோற்றுப்போவதேயில்லை. ஒரு படம் செய்வது குதிரைக் 

கொம்பாய் இருந்த காலம் மலையேறி விட்டது. இயக்குனர்கள் ஒரு வாரத்திற்கு எல்லா

ஊர்களிலும் தியேட்டர்கள் கிடைத்தால் போதும் என்ற பார்வைக்கு வந்துவிட்டார்கள்.

திரைத்துறையில் எழுத்தாளர்களுக்கான பணி, வசனப் பகுதி மட்டும்தான். அதை 

சிறப்பாக செய்து எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் 

பெயரும் அடைந்திருக்கிறார்கள். நானும் உள்ளே வந்துவிட்டேன். ஆவலுடன் காத்தும் 

இருக்கிறேன் மற்ற இயக்குனர்களிடமிருந்து வாய்ப்பையும்.


இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக உள்ளதா?


சிற்றிதழ்கள் ஒரு காலத்தில் இலக்கிய மேம்பாட்டிற்காக அயராது பணியாற்றின. 

அவற்றின் பணியை இன்றும் வாசகர்கள் பதிவுசெய்தபடிதான் இருக்கிறார்கள்.

தஞ்சாவூரிலிருந்து இன்றும் வந்துகொண்டி ருக்கும் "சௌந்தர சுகன்'சிற்றிதழின் பணி

என்னை மலைக்கவைக்கிறது. அது தனி மனிதனின் இலக்கிய தாகம். சுகன் கண்டறிந்த

படைப்பாளி நான். அவர் தன் இதழில் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தார். அந்த 

சுதந்திரத்தை இன்று வரை என் எழுத்தில் பயன்படுத்துகிறேன். அந்த இதழ் 

இல்லையெனில் வா.மு. கோமு இன்று தொழிலாளியாகவோ, வியாபாரியாகவோ

காணாமல் போயிருப்பான். 

இன்று முகநூலின் வருகையால் சிற்றிதழ் களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன.

எழுதப்படும் கவிதைகள் உடனடியாக முகநூலில் அரங்கேறுகின்றன. விருப்பங்களும் 

கருத்துகளும் உடனுக்குடன் பார்க்கையில் கவிஞன் அப்பாடா! என்று மனநிம்மதியடைந்து

விடுகிறான்.


அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? செய்யப் போகும் பணிகள் என்ன?

ஐம்பது சிறுகதைகள் இந்த வருடம் என்னால் எழுதி முடிக்கப்பட வேண்டும் என்பதுஒரு 

கணக்கு! அது நிச்சயம் நடந்தேறிவிடும். முடியாதவற்றைப் பற்றி நான் பேசுவதேயில்லை

."நடுகல்'வெளியீடுகளை சிறப்பான வகையில் சந்தைப் படுத்துவது பற்றி யோசித்துச்

செயல்பட வேண்டும்.


படைப்பாளிகளின் சண்டைகள், சச்சரவுகள் பொதுவெளிக்கு வருகையில் என்ன 

மாதிரி யோசிக்கிறீர்கள்?

படைப்பாளிகளுக்குள் இதுகாலம் வரை கருத்துரீதியான சண்டைகள், ஆளைக் கண்டால்

ஒதுங்கிச் சென்றுவிடுவது என்றெல்லாம் நடந்து வந்தன. முகநூல் வந்தபிறகு 

எல்லாரும் எழுத்தாளர்களோ என்ற ஐயம்வேறு எழுத்தாளர்களுக்கு வந்துவிட்டது. 

நினைத்த மாத்திரத்தில் முகநூலில் சண்டையை ஆரம்பித்து விடுகிறார்கள். 

எழுத்தாளர்கள் என்றால் ஏதோ கொம்பு முளைத்தவர்கள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து

நொறுங்கியிருக்கிறது. எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள பெரும் படைப்புகளை

உருவாக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறான்.


படைப்பாளிகளின் சண்டைகள் மதுக்கூடங்களில் துவங்கிவிடுகிறது! இது முகநூல் 

வழியாக வெளியேவருகிறது.  இது எந்தவிதத்திலும் ஆரோக்கியமான நிகழ்வல்ல.

யானை தன் தலையிலேயே மண்ணை வாரித் தூற்றிக்கொள்ளுமாம். அந்தப் 

பழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது. வாசகர்கள் எழுத்தாளர்களை ரொம்பவே 

மதிக்கிறார்கள். அந்த மதிப்பை கெடுத்துக்கொள்ளும் வகையில் படைப்பாளர்கள் 

நடந்துகொள்ளலாமா? இதுதான் என் ஆதங்கம். கதை, நாவல்களில் வருகிற கேரக்டர்கள் 

சரியில்லை என்றால் கொதிக்கும் சமூகம், இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் கேரக்டர்களைப்

பார்த்தால், கூர்ந்து கவனித்தால் என்ன ஆகும்? ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்

வாசகர்கள் இன்று எழுத்தாளர்களைவிட ஒரு படி மேலே சிந்திக்கிற வர்களாக 

இருக்கிறார்கள்.


-நன்றி : இனிய உதயம் மாத இதழ் 2015 பிப்ரவரி

0000

இரண்டு பழைய புத்தகங்கள்!

$
0
0

கலைக்க முடியாத ஒப்பனைகள் என்கிற சிறுகதை தொகுப்பு வண்ணதாசனின் முதல் சிறுகதை தொகுப்பு. இது எப்படி எடைக்கு போடாமல் விட்டேன் என்றால் இதன் தயாரிப்புக்காக! பிருந்தாவனம் அச்சகம் சேலத்தில் பரந்தாமன் அவர்களால் வெகு சிரமத்திற்கிடையில் நடத்தப்பட்டு வந்தது  எழுபதுகளில். அவர் ஃ என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். லினோ கட், வுட் கட் என்கிற வகைகளில் ஓவியங்களை கீறி ட்ரெடில் மிஷினில் அச்சடித்து புது விதமாக அவர் தன் இதழ்களை கலை நயத்துடன் கொண்டு வந்தார். அக் பிரதிகள் எடைக்கு போட்டாகி விட்டது. இருந்தும் அதன் கடைசி இதழ் அவரது துக்ககரமான இலக்கிய தாகத்தை பேசி வந்த இதழ் கைவசம் கிடக்கும். பஞ்சம் பிழைக்க போகிறேன் என்று அதில் கடைசியாக குறிப்பிட்டிருந்தார். ஃபரந்தாமன் என்றே அழைக்கப்பட்டவர். எனது நடுகல் இதழில் லாரி டியூப்பை கீறி வெட்டி ஓவியமாக்கி அதை ட்ரெடில் மிஷினில் ஏற்றிசில ஓவியங்கள் செய்து ஓட்டி கொண்டு வந்தேன். அக்காலகட்டத்தில் ப்ளாக் தயாரிப்பு செலவுகள் அதிகம் என்பதால் இப்படியான முயற்சிகள் சிற்றிதழ்களில் நடந்தேறின. அஃ இதழ் இவைகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!


கலைக்க முடியாத ஒப்பனைகள் 1976 பிப்ரவரியில் வந்த புத்தகம். இந்த தயாரிப்புக்கு பரந்தாமன் டெல்லியில் பரிசு பெற்றார்வண்ணதாசன் இந்த புத்தகத்தை கண்ணில் பார்ப்பதற்குள் பொறந்த நாள் கண்டு விட்டதாக (அப்படித்தான்) கூறுகிறார் தன் கடிதங்கள் வாயிலாக! இருவருக்குமான கடிதப் போக்குவரத்து பெருந்தன்மையாக நடந்திருக்கிறது புத்தகம் கைக்கு வரும் காலம் வரை. தயாரிப்புக்கு 2 வருட காலங்கள் ஆகியிருக்கிறதுபரந்தாமனின் ஒரு வார்த்தை.. “எனக்கு பசித்துக் கொண்டே இருக்கிறது’’.  ஒன்றை இப்போது கவனிக்கிறேன். புத்தகத்தில் பக்க எண்களே இல்லை! இருந்தும் அப்போதைக்கு இது பெரிய விசயம் தான்

000


ரமேஷ் : பிரேம் என்ற பெயருக்கு அவர்கள் தாவும் முன்பாக ப்ரேதன் : பிரேதா என்கிற பெயரில் எழுதிய முதல் நாவல். கிரணம் வெளியீடு 1992. சமயத்தில் கிரணம் சிற்றிதழ் வாசகர்களை மிரட்டிக் கொண்டே வந்ததுவிசயம் என்னவென்றால் உள்நுழைந்து வாசிக்க இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்பது தான். ஆனால் ஒரு கவர்ச்சி இருக்கிறது இந்தப் புத்தகத்தில். அதாவது வாசிக்க முயற்சி எடுக்கச் சொல்லி கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறதுநாவலில் வரும் கவிதைகள் தான் எனக்கு ஒரு வித ஒவ்வாமையை தந்து கொண்டே இருக்கிறதுகபாலம், பிரக்ஞை, மூர்ச்சை, கருதிரவம், சூன்யம், அரூபம்,ஜீவ நிணம், பிம்பங்கள், சூன்யக் குமிழிகள், ஆதி புலம்பல், அணுவின் உட்சிதை, உருவுகளின் உலகில், இப்படி வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்!! இதன் இரண்டாவது பதிப்பு வந்ததா?

1985ல் ஆக்கம் செய்யப்பட்டு மறு ஆக்கம் 90ல் ஒருமுறை என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது!

000

வரலாற்றின் கதைகள்!

$
0
0


முட்டையில இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா? மனுசனைக்கூட குரங்குல இருந்து வந்துட்டதா சொல்லிட்டாங்க! மேலே உள்ள கோமாளித்தனக் கேள்வியை சினிமா கூட தத்தெடுத்துக் கொண்டது முன்பாக! இந்த புத்தகத்தின் மூல ஆசிரியருக்கு சிறுவயது முதல்க் கொண்டே கேள்விகள் தான். பண்டைய மனிதர்களின் வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கற்பனைகள். கேள்விகளுக்கான விடைகளை ஆசிரியரிடமோ, ஆய்வாளர்களிடமோ  கிடைத்து விடும். இந்தப்புத்தகம் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை என்று முன்பாகவே குறிப்பிட்டு விடுகிறார் ஆசிரியர். போக, கதை மாந்தர்கள் கற்பனை தான் எனினும் அறிவியல் பூர்வ வரலாற்று உண்மையோடு விடைகாண முயன்றதாகவும் முகப்பில் சொல்கிறார் த.வெ.பத்மா.

தமிழில் ஜே.ஷாஜஹான் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை மிக எளிதாக வாசிக்கும்படியான சரளமான மொழிபெயர்ப்பு இது. புத்தகத்தில் ஒவ்வொரு கதைகளையும் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. மூலநூலில் ஓவியங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை. ஓவியங்கள் பிஞ்சு விரல்களால் வரையப்பட்டன போன்ற அமைவில் உள்ளன. அது அழகும் கூட! (ஓவியங்கள் - பி.சரவணன் )கி.மு-வில் இரண்டு கதைகள் நடப்பதாகவும், கி.பி-யில் எட்டு வித கதைகள் நடப்பதாகவும் ஒரு முழுத் தொகுதி அமைந்திருகிறது.

மனிதன் நாயை எப்போது ஏன் எப்படி தன்னோடு இணைத்துக் கொண்டான்? நாய் ஏன் மனிதனோடு நட்பு பாராட்டுகிறது? என்ற கேள்விக்கு பதிலாக முதலாக வேட்டையாடச் செல்லும் வாலிபன்  வனத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் பதில் சொல்கிறார். தவிர கதை சொல்லும் முன்பாக முன்னோர்கள் வேட்டையாடிகளாகத்தான் திரிந்து பின் குழுக்களாக வாழத் துவங்கினர் என்பதை அனுமானிக்கத்தான் முடிகிறதாகவும். குழுவில் முழு மனிதனாக தன்னை நிரூபிக்க இளைஞர்கள் சாகசம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய முயற்சியில் சென்ற இளைஞனின் கதை என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது.

நகரத்தில் ஒரு கிராமத்தான் கதை கி.மு. 2300 -ல்! சிந்துச் சமவெளி நாகரிகம் வளமுற்று விளங்கிய சமயத்தில் அவர்கள் எழுத்துகளை வாசித்தறிய முடியாததால் அந்நாளைய வாழ்வை அறிய சிக்கலாக இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் நகரமும் கிராமமும் இருக்கிறதாக வைத்து மொகஞ்சதாரோ நகருக்கு கிராமத்திலிருந்து சிறுவன் தன் தந்தையோடு சென்று வருவதாக கதை பின்னப்பட்டிருகிறது. ஒவ்வொரு கதைகளுக்கான குறிப்புகள் இவை தவிர புத்தகத்தின் பக்கங்களில் இது வரையிலான அகழ்வாராய்ச்சி முடிவுகள் பொடி எழுத்தில் கதைகளை ஒட்டியே வருகின்றன.

பின் வரும் கதைகள் அனைத்தும் கி.பி என்பதால்  வரலாற்றுத் தகவல்களோடு குறிப்புகள் தொடர்கின்றன. இந்தியாவில் கிரேக்கர்கள் ‘யவனர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.  யவனர்கள் இந்தியப்பெண்களை மணந்தனர். அத்தகைய கலப்பின தம்பதியினரின் மகன் அகாசிலஸ். அகாசிலஸ் ஒரு சிற்பி! உயர் குலத்தவரின் மகன் இவனை ‘உன் நாட்டுக்குப் போ, பூனைக்கண் யவனா!’ என்றே வசை பொழிகிறான். இருவருக்கும் சண்டையும் நடக்கிறது. அகாசிலஸின் தந்தை வந்து இருவரையும் பிரித்து விடுகிறார். அகாசிலஸ் தன் தந்தையிடம் கேட்கும் கேள்வி.. ‘என் தேசத்தில் நான் ஒரு அந்நியனாக உள்ளேன். உங்களால் எப்படி புன்னகைக்க முடிகிறது?’ தந்தை அவனுக்கு விளக்கங்கள் சொல்கிறார். ‘அன்பை மறந்த கலைஞனால் எப்படி புத்தபிரானை செதுக்கிட முடியும்?’ முடிவில் சுபமாக முடியும் இச்சிறுகதை ஒரு காலகட்டத்தையே தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.

கதைகள் நீதிகளை சொல்லி முடிப்பது போன்று அமையப் பெறலாம். அல்லது கதைகள் கதைகளாகவே கூட முற்றுப் பெறலாம். இந்தத் தொகுப்பு வரலாற்றின் தகவல்களை தன்னுள் வைத்துக் கொண்டு பல காலகட்டங்களை சிறுவர்களை வைத்து சொல்கிறது சிறுவர்களுக்காக! தமிழில் சிறுவர்களுக்கென வந்த புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகமாகப் படுகிறது. ஒவ்வொருவர் இல்ல நூலகத்தில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம்!

இந்த புத்தகத்தை என் கிராமப் பள்ளிக்கு கொடுத்து விடுகிறேன்!

கனவினைப் பின் தொடர்ந்து..
எதிர் வெளியீடு - பொள்ளாச்சி. பேச : 04259 226012 - விலை : 100.

0000

கல்குதிரை இதழ் வழி!

$
0
0


கல்குதிரை முதல் இதழை என் தந்தையார் அமரர் முத்துப்பொருணனுக்கு பத்துப் பிரதிகள் அனுப்பி வைத்திருந்தார் கோணங்கி. ஆண்டு 89. தனியிதழ் விலை ஐந்து ரூபாய் தான். பிரதிகள் சிலவற்றை விற்றுத்தருமாறு கடிதம் இருந்தது. என் தந்தையார் அவற்றை யாரிடம் கொடுத்தார்? கோணங்கிக்கு பிரதிகளுக்கான பணம் அனுபினாரா? இவைபற்றி தெரியாது. பின்னர் கல்குதிரை இரண்டாவது இதழ் ஒரு பிரதி வந்து சேர்ந்தது. எனக்கு ரிசல்ட் தெரிந்து விட்டது. மூன்றாவது இதழ் நாட்டுப்பூக்கள் சுயம்புலிங்கத்தின் படைப்புகளை தாங்கி வந்தது. பின்னதாக கல்குதிரை வீடு வருவது நின்று போகவே தந்தையார் கோவைவிஜயாவில் நுழைந்து  எண் வரிசைப்படி சேகரம் செய்தார். ஆப்பிரிக சிறப்பிதழில் இருந்து நான் அதை வாங்க ஆரம்பித்து விட்டேன்.

கல்குதிரை 10 தற்கால உலகச் சிறுகதைகள் என்று 92-ல் 50 ரூபாய் விலையில் வெளியிட்டது. அச்சமயத்தில் என் தினக்கூலியே 20 ரூபாயாக இருந்திருக்க வேண்டும்ஆசை யாரை விட்டது? 28 உலகக் கதைகள். எல்லாப் பெயர்களும் எனக்கு புதிதாக இருந்தது. எல்லா நாட்டு கதைகளும் கிட்டத்தட்ட இடம்பெற்றிருந்தன அதில்மயானத் தங்கம்- அன்னாபாவ் சாத்தே மராட்டிய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர். எஸ்.வி.ராஜதுரை, .கீதா மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதையை மிரட்சியோடு படித்த ஞாபகம்! இன்னமும் பல கதைகள் படிக்காமல் இருப்பது இப்போது தான் தெரிகிறது. அதற்குள் காப்ரியேல் கார்சியா மார்க்குவஸ் சிறப்பிதழ் என்று கல்குதிரை 12 வேறு. ஆண்டு 1995. விலை 100.  போங்கப்பா நீங்களும் உங்க இலக்கியமும் என்று முடிவெடுத்த பிறகு என் தந்தையார் எங்கிருந்தோ கவ்வி வந்து விட்டார். ஒரு நூற்றாண்டு கால தனிமை வாசம்  நாவலில் சிறுபகுதியும் அவரின் படைப்புகள் பலவும் வந்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ என் படைப்பு எழுச்சிக்கு உறுதுணையாய் இருந்த கல்குதிரை இதழ்களை நான் எடைக்கு போடாமல் பைண்டு செய்து வைத்திருக்கிறேன்.

சமீபத்திய கல்குதிரை இதழ்கள்  எல்லாமே மிரட்டல்!






000
000


நடுகல் நினைவலைகள் -1

$
0
0


எமது நடுகல் முதல் இதழ் ஆவணி 91ல் திருப்பூரில் இருந்து வெளிவந்தது. சர்ரியலிசம் சாம்பார்ரசம் கதைகள் எல்லாம் அதில் எழுதிப் பழகினேன். நண்பர்களின் ஒத்துழைப்பு இந்த இதழுக்கு இருந்தது. தமிழகம் முழுக்க படிக்கத் தெரிந்தவர்களுக்கு சும்மா  போஸ்ட் செய்தோம். முதல் இதழ் மூன்று ரூபாய். கோவை விஜயாவில் பத்து புத்தகம் கிடத்தினோம். அடுத்த மாத புத்தகத்தை கொண்டு சென்ற போது வேலாயுதம் காசுக்கு புத்தகம் எடுத்துக்கங்க! என்று அன்போடு சொல்லி விட்டார்.

முதல் ஆறு இதழ்கள் இத்தன பைசா என்று விலை போட்டிருந்தோம். பொறவு அது எதுக்கு சும்மா போடணும்னு விட்டுட்டோம். யூமா வாசுகி ஒருமுறை திருப்பூரில் அவர் நண்பரின் ஸ்கிரீன் ப்ரிண்டிங்கில் தங்கியிருக்கையில் குதிரை வீரன் பயணம் கொண்டு வந்தார். அவரை வைத்து ஒரு நடுகல் இதழ் அட்டை வடிவமைப்பு செய்தோம். அதற்கும் முன்பாக லாரி டியூப் வெட்டி அட்டை ஓட்டினவன் நான். அவைநாயகன் கடிதம் ஒன்றை சில்வர் இங்க்கில் கறுப்புத் தாளில் அச்சடித்துப் பார்த்தேன்.

பத்து இதழ்களுக்கும் மேலாக வந்த இதழ்கள் அனைத்திலும் தஞ்சாவூர் படைப்பாளிகள் களம் இறங்கி விட்டார்கள். அனைவரும் கவிஞர்கள். தஞ்சை ப்ரகாஷ் சந்தோச மிகுதியில் கவிதைக் கூட்டத்தையே அனுப்பி வைத்தார். ஒரே முறை நட்சத்திரன் நடுகல் வளர்ச்சி நிதி என்று நூறு ரூபாயை என் பாக்கெட்டில் தள்ளினான். அதை நான் பமீலா ஒயின்ஸில் ஓரமாய் நின்று காலி செய்தது பெருந்துறையில்! 23 இதழ்கள் வந்த இந்த சிற்றிதழ் பல வருடங்கள் கூடித்தான் அந்த எண்ணிக்கையை தொட்டது. இதழின் அளவுகள் யாரும் பைண்டு செய்து பாதுகாக்க முடியா வண்ணம் பல வடிவங்களில் வர நான் அச்சக தொழிலாளியாக இருந்ததே காரணம்!

தந்தையார் இறந்த பிறகு அவரின் கவிதைகளோடு நினைவஞ்சலி இதழாக வந்து தன் மூச்சை நிறுத்திக் கொண்ட இந்த சிற்றிதழ் தற்போது பதிப்பகமாக வளர்ந்து நிற்க நண்பர்களின் ஆதரவே காரணம்! நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே சுகமானது தான்!

000

இறக்கை ஞாபகம் -1

$
0
0


இறக்கை இதழ் நான் நடத்திய மூன்றாவது சிற்றிதழ்! நாற்பது இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதியாக 100 பிரதிகள் தமிழகம் முழுக்க இலவச பிரதியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அது எழுத்தோடும் எழுத்தாளர்களோடும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே! சில சிற்றிதழ்கள் பரிமாற்றுப்பிரதிகளாக வீடு வந்து கொண்டிருந்தன. சமயத்தில் ஹரிகிருஷ்ணன் வீடு தேடி வந்த போது அதை அச்சில் கொண்டு வரும் யோசனையை சொல்கையில் நான் மறுக்கவில்லை! உங்களோடு என்கிற தலையங்கம் வாசகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது! அதற்கு காரணம் என் மொழி! உங்களோடு முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான தொனி அதில் இயல்பாக இருந்தது. நன்றாக ஒரு இதழ் அனைவராலும் பேசப்படும் போது செத்து விடுவது நல்லது தான்.

 53 இதழ்கள் வந்த இறக்கை (எங்கு வேண்டுமானாலும் பறக்கும்) தன் புதை குழியை தேடிக் கொண்டது. பின்பாக எதை நோக்கி இப்படி சிற்றிதழ்களை நான் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தேனோ அதை நோக்கி படியேறி விட்டேன்! இனி சிற்றிதழ் நடத்தும் எண்ணமும் என்னிடம் இல்லை! ஒன்று இப்போது தெரிகிறது! என்னை யாரும் சிறப்பாக எழுதுகிறான் என்று என் முந்தைய எழுத்தாளர் யாரும் குறிப்பிடவேயில்லை! எனக்கான சரியான விமர்சனத்தை கூட யாரும் முன் வைத்ததுமில்லை! அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதுமில்லை! எனக்கான போராட்டத்திலேயே வந்தவன் நான். எனக்கும் ஹரிக்கும் பயங்கர சண்டை. அதனால் தான் ஹரி மணல்வீடு என்று தனிப் பத்திரிக்கை ஆரம்பித்து ஓடி விட்டான், என்றெல்லாம் பேசினார்கள். ஒரே தமாஸ் தான்

பாதைகளை அடுத்தவர்க்காக திறந்து விடுதல் என்பதை சண்டை என்று பேசி இன்புற்றார்கள்! நான் ஆசைப்பட்டு என் மண்பூதம் சிறுகதை தொகுதியை என் எழுத்தாள முன்னோடிகளுக்கு அனுப்பி எங்காச்சும் எழுதுவார்கள் என்று ஆசைப்பட்டு காத்திருந்தேன். அவர்கள் மூச்சு விடாமல் ஒரு வருடம் கழித்து என்னிடம் பேசுகையில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டீட்டு இருக்கேன் கோமு! அதுல கட்டுரை கொடுக்க வேண்டி இருக்குது! இதுல சிறுகதை ஒன்னு கொடுக்க வேண்டி இருக்குது...! பிரதிகளை நான் நண்பர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்! இனி நான் தான் நண்பர்களின் புத்தகங்களுக்கு எனக்கு தெரிந்தவரையில் எழுத வேண்டும் என்ற நிலைக்கும் வந்து விட்டேன்ஒரு தனி மனித போராட்டம் நினைத்துப் பார்க்கையில் சந்தோசம் தான்!


000

சுத்தம் -சிறுவர் நாடகம்

$
0
0


சிறுவர்நாடகம்வா.மு.கோமு.
5-ம் வகுப்பு அல்லது 6-ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்காக!

சுத்தம்

பாத்திரங்கள் : மாணிக்கம், அம்மா, கயல்விழி

காட்சிஒன்று

மாணிக்கம்பள்ளிக்குச்செல்லதன்புத்தகப்பையைதோளில்போட்டுக்கொள்ளுதல்.

மாணிக்கம் : அம்மா! நான்ஸ்கூலுக்குபோயிட்டுவர்றேன். பஸ்ஸுக்குடைம்ஆயிடுச்சு!

அம்மா : இருடாமாணிக்கம். நேற்றேதலையைவாறாமல்அவசரமாய்ஓடிவிட்டாய். இன்றாவதுதலையைவாறியிருக்கிறாயா?

மாணிக்கம் : அதெல்லாம்ஆச்சும்மா! தின்னீருகூடஇட்டாச்சு!

அம்மா : சரிதண்ணிகேன்எடுத்துக்கிட்டியா?

மாணிக்கம் : போம்மா, எப்பப்பாருதண்ணிக்கேனுதண்ணிக்கேனுட்டு!

அம்மா : நம்மஊர்லநிலத்தடிநீர்மாசுபட்டிருக்காம்டா! சொன்னாபுரியுதாஒன்னாஉனக்கு!

மாணிக்கம் : பள்ளிக்கூடத்துலயேதண்ணிஇருக்கும்மா! வெட்டியாகேன்லசுமந்துட்டுபோகணுமாநானு? வேண்டாம்மா!

அம்மா : சுடவெச்சதண்ணியஆறவெச்சுகேன்லஊத்திவச்சிருக்கேன்டாமாணிக்கம். அம்மாஉன்நல்லதுக்குதானசொல்வேன். பன்னிக்காய்ச்சல், யானைக்காய்ச்சல்னுவிதம்விதமாவருதுடா!

மாணிக்கம் : அதெல்லாம்எனக்குவராதும்மா!

அம்மா : நோய்எதிர்ப்புசக்திஇருக்குறவங்களுக்குவராதுடா! உனக்குத்தான்எப்போப்பார்த்தாலும்எதோஒன்னுவந்துட்டேஇருக்கே! அதனாலதான்சொல்றேன்கேனைஎடுத்துட்டுபோ!

மாணிக்கம் : அம்மாநீங்கவீணாபயப்படறீங்கம்மா! எல்லாரும்பள்ளிக்கூடத்துலகுடிக்கிறதண்ணியத்தான்நானும்குடிக்கிறேன். எனக்குஅப்பப்பசளிபிடிச்சுக்குது. அதுக்குநோய்எதிர்ப்புசக்திஇல்லேன்றீங்களா?

அம்மா ; சரிபஸ்சுக்குநேரமாச்சுகிளம்பு! டாட்டா!

மாணிக்கம்அம்மாவைப்பார்த்துடாட்டாசொல்லிவிட்டுகிளம்புதல்.

காட்சிஇரண்டு

பள்ளியில்இடைவேளைசமயத்தில்மாணிக்கமும்கூடவேபடிக்கும்கயல்விழியும்பேசிக்கொண்டிருத்தல்.

கயல்விழி : என்னமுட்டைக்கண்ணாஎன்னைப்பார்த்துஇன்றுதிருதிருவெனமுழித்துக்கொண்டேஇருக்கிறாய்? (முட்டைக்கண்ணன்பள்ளிபட்டப்பெயர்)

மாணிக்கம் : இல்லையேபூனைக்கண்ணி, உன்பூனைக்கண்ணுக்குஅப்படித்தெரியும்போலஇருக்கிறது.

கயல்விழி : ஏன்நீஇடைவேளையில்வெளியேபோனவுடன்ஓடிவந்துவிட்டாய்முட்டைக்கண்ணா?

மாணிக்கம் : நீஎன்னஎன்னைஎப்போப்பார்த்தாலும்முட்டைக்கண்ணாஎன்றேகூப்பிடுகிறாய்? டீச்சர்அன்றுவகுப்பில்பட்டப்பெயர்வைத்துயாரும்யாரையும்கூப்பிடக்கூடாதுஎன்றுசொன்னார்கள்அல்லவா?

கயல்விழி : நீயும்தானேஎன்னைபூனைக்கண்ணிஎன்கிறாய்!

மாணிக்கம் : நீதானேஎன்னைமுதலில்முட்டைக்கண்ணன்என்றுகூப்பிட்டாய்! அதனால்தான்நானும்கூப்பிட்டேன்.

கயல்விழி : சரிஇருவரும்இனிமேல்அதைவிட்டுவிடுவோம்மாணிக்கம்.

மாணிக்கம் : சரிகயல்விழி. நீதண்ணீர்கேன்கொண்டுவந்திருக்கிறாயல்லவா.. எனக்குதண்ணீர்தாகமாய்இருக்கிறதுகுடேன்.

கயல்விழி : என்அம்மா, எனக்குநோய்எதிர்ப்புசக்திகுறைவாகஇருக்கிறதுஎன்றுஒருவாரமாகவேசுடுதண்ணிஊற்றிக்கொடுத்தனுப்புகிறதுமாணிக்கம். அதுஎனக்குமட்டும்மாலைவரைசரியாகஇருக்கும்.

மாணிக்கம்: இல்லை. இப்படிநீசொல்லக்கூடாது. எனக்குமிகவும்தாகமாகஇருக்கிறதுஎன்றுதான்கேட்கிறேன். வெளியேபள்ளிடேங்கில்மின்சாரம்இல்லையென்பதால்தண்ணீர்வரவில்லை.

கயல்விழி : மதியம்சாப்பிட்டுவிட்டுநான்தண்ணீர்குடிக்கவேண்டும்.

மாணிக்கம் : அதற்குள்டேங்கில்தண்ணீர்நிரப்பிவிடுவார்கள்கயல்விழி. அதைஉன்கேனில்நான்பிடித்துத்தருகிறேன்.

கயல்விழி : ஐயோ! அதுமட்டும்முடியாது. ஏற்கனவேநம்நிலத்தடிநீர்மாசுபட்டிருப்பதாகஅன்றுடீச்சர்சொன்னாங்கஇல்லையா! அவங்கதானேதண்ணியைசுடவச்சுகுடிக்கசொன்னாங்க!

மாணிக்கம் : சொல்றவங்கஆயிரம்சொல்வாங்ககயல்விழி, இப்பஎனக்குதண்ணீர்தருவாயாதரமாட்டாயா?

கயல்விழி : என்னால்முடியாது.

மாணிக்கம் : போயும்போயும்உன்னிடம்கேட்டேன்பார்நான். எச்சிக்கையாலகாக்காய்விரட்டமாட்டீல்லநீ!

கயல்விழி : அப்படிச்சொன்னாய்என்றால்நான்டீச்சரிடம்சொல்லிவிடுவேன்.

மாணிக்கம்அமைதியாகிஎழுந்துவெளியேதண்ணீருக்காகசெல்லுதல்.

காட்சிமூன்று

மாணிக்கம்வீடு. மாணிக்கம்அம்மாடிபன்கேரியரில்சாப்பாடுஎடுத்துக்கொண்டுவீட்டைபூட்டிக்கொண்டிருக்கையில்கயல்விழிஅங்குவருதல்.

கயல்விழி : அம்மாவெளியேகிளம்பிவிட்டீர்கள்போலிருக்கிறதே! மாணிக்கம்எங்கேகாணோம்?

அம்மா : மாணிக்கத்திற்குஇரவில்காய்ச்சல்வந்துசிரமப்படுத்திவிட்டது. இன்றுசனிக்கிழமைநீபள்ளிக்குகிளம்பாமல்இங்கேஎங்குவந்தாய்?

கயல்விழி : இன்றுபள்ளிவிடுமுறைநாள்அம்மா. மாணிக்கம்இப்போதுஎங்கே?

அம்மா : அவன்அப்பாஇரவிலேயேமருத்துவமனையில்சேர்த்திவிட்டார். அவர்களுக்குசாப்பாடுஎடுத்துக்கொண்டுசெல்கிறேன்இப்போது.

கயல்விழி : அம்மாநானும்உங்களுடன்மருத்துவமனைவரட்டுமா? எனக்கும்மாணிக்கத்தைபார்க்கவேண்டும்போல்உள்ளது.

அம்மா ; சரிவாஇருவரும்செல்வோம்.

(இருவரும்மருத்துவமனைகிளம்புதல்)


காட்சிநான்கு

மருத்துவமனையில்படுக்கையில்மாணிக்கம்படுத்திருத்தல். அம்மாவிடன்வரும்கயல்விழியைக்கண்டுபுன்னகைத்தல். அம்மாடேபிளில்சாப்பாட்டுகேரியரைவைத்துவிட்டுமாணிக்கத்தின்அப்பாவிடம்பேசிக்கொண்டிருத்தல். மாணிக்கமும்கயல்விழியும்பேசுதல்.

மாணிக்கம் : வாகயல்விழி!

கயல்விழி : எல்லாம்என்னால்தானேஇப்படிஉனக்குஆகிவிட்டது.

மாணிக்கம் : அப்படியெல்லாம்இல்லைகயல்விழி. எல்லாம்சொல்பேச்சுகேட்காதஎன்னால்தான்.

கயல்விழி : நீதண்ணீர்கேட்டபோதுநான்கொடுத்திருந்தால்உனக்குகாய்ச்சல்வந்திருக்காதுஇல்லையா! நீசொன்னதுபோலநான்எச்சிக்கையால்காக்காவிரட்டமாட்டாதவள்தான்.

மாணிக்கம் : நீகொடுத்துநான்குடித்திருந்தாலும்நீதண்ணீருக்குமளிகைகடைதான்சென்றிருப்பாய். உனக்குகாய்ச்சல்வந்திருக்கும்கயல்விழி. நல்லவேளைஅப்படிநடக்கவில்லை.

அம்மாஇடையில்நுழைந்து : இவனுக்குஇதுபடிப்பினையாகஇருக்கட்டும்கயல்விழி. நானும்பலநாட்களாகசுடுதண்ணிகேனைஎடுத்துப்போகுமாறுசொல்லிவிட்டேன்இவனிடம். கேட்கவேயில்லை.

கயல்விழி : இப்போதுகாய்ச்சல்உனக்குபரவாயில்லையாமாணிக்கம்?

மாணிக்கம் : இப்போதுகாய்ச்சலேஇல்லைகயல்விழி. என்னஇரண்டுஊசிகள்டாக்டர்என்இடுப்பில்போட்டார். அதுதான்வலியாய்இருக்கிறது. ஊசிஎன்றாலேஎனக்குபயம்தான். அதற்காகவேணும்நான்இனிசுடவச்சதண்ணீரையேகுடித்துக்கொள்கிறேன்.

(அனைவரும்சிரித்தல்)

0000


காடோடி மற்றும் செத்த போன்

$
0
0

காடோடி - நக்கீரன்

பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியளார் என்றே அறியப்பட்டவர். காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி. கட்டுரையாளர்கள் நாவல் என்ற வடிவத்திற்குள் வருகையில் தொய்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் சொல்லக் கூடிய விசயம் தீவிரத் தன்மை கொண்டமையால் தொய்வுகள் வாசகனுக்கு தெரிவதில்லை.

நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. அன்னா,பிலியவ், பார்க்,ஒமர்,ரலா போன்ற கதாபாத்திரங்கள் நாம் நாவலில் தான் பயணிக்கிறோம் என்ற நினைவை அடிக்கடி நமக்கு தந்து உதவிக் கொண்டிருக்கின்றன. அதுவும் பிலியவ் என்ற கதாபாத்திரம் நாவலின் மையமாக ஒரு அமானுஷ்ய சக்தியுடன் செயல்படுகிறது.

வனம் என்ற பிரமாண்டம் ஒன்றே நம்மை இந்த நாவலுக்குள் பயணிக்க வைக்க வல்லதாயிருக்கிறது. ஆனால் வனத்தின் அழிவைப்பற்றி இந்த நாவல் போன்று இதுவரை தமிழில் எந்த நாவலும் பேசவில்லை. ஒவ்வொரு மரம் வீழ்கையிலும் நம் இதயம் ஒருகணம் அந்தக் கட்டி வைக்கப்பட்டிருந்த கோழி கத்துவது போல துடித்தே நிற்கிறது. இந்த புத்தகத்தை முடிக்கும் தருவாயில்  எனக்கென நான் வளர்த்திக் கொண்டிருக்கும் முருங்கை, எலுமிச்சை என்ற சின்ன வகை மரங்களின் மீது ஒரு தனி பாசம் ஏற்பட்டத்தான் செய்தது. போக தாய்மரம் வெட்டப்பட்ட பிறகு கதை சொல்பவர் அதன் மடியில் தலை சாய்த்து அழுவது எனபது கண்ணீரை வரவழைத்த இடம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது. கொஞ்சம் நிலபுலன் வைத்திருக்கும் காட்டாளன் யாரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் போவதில்லை என்பது தமிழுக்கான சாபக்கேடு!

இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு என்று  வாசகர்களுக்கு சொல்வது  கூட என் அறிவீனத்தின் ஒரு பகுதி தான்.

காடோடி,  அடையாளம் வெளியீடு,  விலை 270.  பேச ; 04332 273444

000


Late Fee shall be leavied in the next bill @2% of the outstanding amount pending after payment due date. Minimum late fee is 10/-.

மாதகட்டணம் 180.00, பயன்பாட்டுகட்டணம் 43.00 தள்ளுபடி -1.00, சேவைவரி 27.00. மொத்தம் 249.00.

அம்மா: ஒருமாசம்பேசவேஇல்லடா! போனும்வாங்கிகுடுத்துட்டே! இந்தபோனுசெத்தேகெடக்குதுஒருமாசமா! வேலைசெய்யஆளேஇல்லியாம். பேசாமஇதைகட்டாமட்டுடலாமா?

அடியேன்: இதுஎப்பயும்நடக்குறதுதானே! இப்பஎன்னபுதுசா? 2000 ரூவாஅட்வான்ஸ்குடுத்துவாங்குனதுஎப்பன்னுஎனக்குமறந்தேபோச்சே! அப்புறம்இந்தகிராமத்துலஒருத்தருஒருஇருவதுஊட்டுலபத்துரூவாவசூல்செஞ்சுபோய்கட்டீட்டுவந்துட்டுஇருக்காரே! அவருக்குசங்கடமாஇருக்குமே!

அம்மா: என்னபண்ணலாம்னுகேட்டாநாயம்பேசுறான்.

அடியேன்: இப்பயும்செத்துகெடக்குது. யாரும்கூப்பிடவும்முடியாது.. நீயும்பண்ணமுடியாது.

அம்மா: அதுஎப்பசெத்துச்சுன்னேதெரியிலடா! சேவைவரி, மாசகட்டணம்னுபோட்டுதாக்கியிருக்காங்க! இங்கென்னகாசுவெளையுதா? நீபோன்பில்லுகட்டுனீன்னாதெரியும்வருத்தம்.

அடியேன்: ஐய்யய்யோ! செத்தபோனுசெத்ததாவேஇருக்கட்டும். பில்லுகட்டாதேஉடு!


இப்படியாகஒருகுடும்பநண்பராகஇருந்தஒருஉயிரற்ற…..!!!!

000

முக்குழிச்சான் கோழி அல் நீர்க்காக்கா

$
0
0

முக்குழிச்சான் கோழி என்கிறார்கள் இதை. நீர்க்காக்கா என்றும் இங்கே சொல்கிறார்கள். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அதுபாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. ஜோடியாக இதை பார்த்ததேயில்லை. ஊர் ஊரிற்கு பாறைக்குழி என்றிருந்தால் அங்கங்கே ஒன்று மட்டும் நீரில் முக்கு போட்டு தலை நீட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது.

8 வருடம் முன்பு ஊரின் அருகாமையில் இருக்கும் ஏரியில் நீர் வரத்து அதிகமிருக்கையில் டில்லி முற்களுக்கிடையில் முட்டைகள் வைத்து இனவிருத்திக்கு இவை ஏற்பாடு செய்தன. இரவு நேரத்தில் எளிதாக பிடித்து விடலாமென நண்பர்கள் சிலர் முடிவெடுத்து லாரி டூப்பில் காற்றடைத்து ஒருவன் மட்டுமே ஏரி நீருக்குள் சப்தமில்லாமல் சென்றான். திரும்பி வருகையில் அவன் கையில் சின்னச் சின்ன முட்டைகள் மட்டுமிருந்தன. கிட்டப்போனா டொபுக்குனு முக்குழி போட்டுட்டு போயிடுதுடா! என்றான். இதை சிரமப்பட்டேனும் பிடித்து சாப்பிட்டவனின் கருத்து : வெண்ணெய் ஒழுகுது!

இருந்தும் இது தனியாகவே பாறைக்குழியில் அங்கங்கே தென்படுவது ஏன்? என்பது புதிர் தான். (மறுபடியும் என் ஜூம் போட்டோ)

000


எழுதிக் கொண்டிருக்கும் சிறுவர் குறுநாவலான ‘டுர்டுரா’ நாவலுக்கு கதை நடைபெறும் களத்திற்கான மேப். துரையரசு வரைந்தது. அடுத்த படம் நானாக முயற்சியெடுத்தது.

000

பழைய விசயம் புதிய செய்தி 1

$
0
0

1989 -நண்பர் ஒருவரின் மகள் தொட்டிலில் கோவையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் பெயர் வானதி. அவருக்கு இப்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள். நண்பர் வரும் ஏப்ரல் 28ல் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகிறார். விசேசத்திற்கு கோவை அழைத்திருக்கிறார். அந்த முதல் குழந்தையின் பெயரில் உள்ளூரில் வானதி என்கிற கையெழுத்து மாத நாவல் துவங்கப்பட்டது. அப்போது ஊன்றுகோல் என்கிற சிற்றிதழ் என்னால் 300 பிரதிகள் அங்கு நடத்தப்பட்டது. (அவை பற்றியான தகவல்கள் மேலும் வரும்)

இப்போது இதை வாசிக்கையில் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இது போல கொலை, பேய், காதல், என்று 4 மாத நாவல் வந்தன. பத்திரமாக வைத்து கொடுத்து உதவிய நண்பருக்கு நன்றிகள் பல. ஓவியங்கள் பல நானே வரைந்தது.

டுர்டுரா இப்போது சிறுவர்களாக இருந்து பெரியவர்களுக்கான குறுநாவலாக மறுஎழுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 8-பக்கங்கள் மட்டுமே எழுதியவற்றை கி.ச.திலீபன் வாசித்து பார்த்து விட்டு மொழிபெயர்ப்பு நாவல் போல வருதே.. உங்க ஸ்டைல் இல்லியே! என்றான். என் ஸ்டைல் எதற்காக இருக்க வேண்டும்? எனக்கென ஸ்டைல் இருக்கிறதா என்ன?

கொங்கில் நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை வேறு பாதை நோக்கி இழுத்துப் போவது தவிர்க்க முடியாத விசயமாக மாறி வருகிறது. இருக்கட்டும் இப்படியும்!

பொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமர்வு

$
0
0



பொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமைப்பின் இரண்டாவது அமர்வு நேற்று நடந்தது. ஒரு பத்து நிமிசம் பேசுவனுங்க! நான் பேச்சாளரெல்லாம் கிடையாது, என்று சொல்லியிருந்தேன் அதன் அமைப்பாளர்களிடம். இப்படி கூட்டத்திற்காக சென்று சிறப்பு அழைப்பாளராக பேசுவதெல்லாம் இது வரை நடந்ததில்லை. முக்கால் மணிநேரம் பேசியதாக என் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த எதிர்வரிசை நண்பர் சொன்னார். எனக்கு பயம் பிடித்துக் கொண்டது. எங்கே இனி பேச்சு பேச்சு என்று மைக்கு வேண்டும் என்று மைக் மோகனாகி, இதயம் ஒரு கோவில்.. அதில் உதயம் ஒரு பாடல்! என்று பாட்டுக்கட்டி விடுவேனோ என்று!

நண்பர் ராசு மொக்கை போட்டீங்க! என்று வெளிநடப்பு செய்தது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. அதாவது அவரிடம் முன்னொரு காலத்தில் கோவிலில் அமர்ந்து பேசியவைகளைத் தான் பேசியதாகவும், அதனால் பாக்கெட்டிலிருந்த தேங்காயை உடைக்கச் சென்றதாகவும் கூறினார். திரும்பி அவர் வருகையில் மீட்டிங் முடிந்ததா? என்று கேட்கையில் அவர் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சிக்களை.. மறக்க இயலாதது. ஆக பேருரைகளை ஆற்றி கேசட் போடும் நிலைக்கு நான் செல்லாதிருக்க நண்பர்கள் ஆசி வழங்க வேண்டும்!


இதற்கும் முன்பாக நான் எமது நடுகல் புத்தக வெளியீடு, மற்றும் எமது புத்தக வெளியீடுகளில் மட்டுமே பேசி இருக்கிறேன் சுருக்கமாக! ஆரம்பத்தில் இருந்த பதட்டம் இப்போது கொஞ்சமாக விலகி விட்டது உண்மைதான். இருந்தும் பேச்சு எனக்கு பிடிப்பதில்லை. சமயத்தில் நாம் வாயில் வருவனவற்றை பேசி விட்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேலையெல்லாம் வந்து விடும். பொதுவாக நிதானத்தை கடைபிடித்து வருபவனும் அல்ல நான். இதுவே ஒரு 100 பேருக்கும் மேலானோர் கலந்து கொண்டிருந்த கூட்டமென்றால் மைக் வளையும் வரை பேசி நாலு பேரின் பாராட்டையும் நாலுபேரின் தூற்றலையும் வாங்கி வீடு வந்திருக்கலாம். பார்ப்போம்! தொடர்வோம்!

000
Viewing all 425 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>