Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all articles
Browse latest Browse all 425

முகநூல் பதிவுகள் சில!

$
0
0

அப்புச்சி வழி- வாஞ்சையான மனிதர்களின் நெகிழ்வான வாழ்வியல்கள்.

எழுத்தால் வாசகனை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமானால், எழுத்தாளனுக்கு அதுவொரு வரம். வா.மு.கோமுவுக்கு அது அநாயசமாக வாய்த்திருக்கிறது.அப்புச்சிவழி புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்காருகையில், ஏதோ பாட்டன் முப்பாட்டன்களின் தொன்மங்களையும், வாழ்வியல்களையும் பிரித்து வேய்ந்து,தொகுத்திருப்பாரென, ஊகிக்கத்தான் என் சிற்றறிவுக்கு முடிந்தது.ஆனால் தன் தாய்வழித் தாத்தனுக்கு ஏற்பட்ட காம இதழ்களின் வாசிப்புக் காதலையும்,அதன் தொடர்ச்சியாக மூப்பெய்திய
அக்கிழவனுக்கு,கோமுக்குஞ்சு செய்து கொடுத்த நிறைவேற்றலையும் 
படிக்கும்போது எழுத்தாளரின் எதார்த்தம் நம் மனதை இடைமறித்து எக்காளமிடுகிறது.

எல்லோருக்கும் அவரவர் சுற்றத்துடன் இணக்கமான உறவு உண்டு.அது
அவர்களது மனநிலைகளைப் பொறுத்தது.அதில் சில சுவாரசியங்களும்,
சில பிணக்குகளும்கூட நடந்தேறியிருக்கும்.ஆனால் நாமதில்பிணக்குகளையே நம் மூளைப்பெட்டியில் பூட்டிப் பத்திரப் படுத்திக் கொள்கிறோம்.சுற்றங்கள் நம்மை அணுகும் நேரங்களில், அப்பிணக்குகளையே நினைவிலிருந்து, மெல்லத் திறந்து பார்க்கிறோம்.அவர்கள்மீது அம்புகளை தொடுக்கிறோம்.எதிர்வரும் அம்புகளால் புண்பட்டு நோகிறோம்.சுற்றத்திற்கும் நமக்குமிருக்கும் ஏராள சுவாரசிய நிகழ்வுகள் பெரும்பாலும் நம்மில் நுழைவதே இல்லை.

சண்டை போட்ட பக்கத்துவீட்டு பங்காளியிடம், முற்பொழுதுகளில், கூடிப்பேசிக் களித்திருப்போம்.ஒரே தட்டில் உணவருந்தியிருப்போம்.கம்மாய்க்கரடுகளில் விளையாடி மகிழ்ந்திருப்போம்.அந்த ஹாய்ஸ்யங்களை, நம் மூளை அழுந்தப் பிடித்திருக்குமேயானால், சாலையில் எதிர்வரும் பங்காளியிடம், ஒரு சிறு புன்முறுவல் சமாதானம் விடுத்து, உடனே பிணக்கைத் தீர்த்திருக்கலாம்.கோமு அத்தகைய காரியவாதி.சுற்றங்களை அவ்வளவு கொண்டாடியிருக்கிறார். பிணக்கற்ற ஓர் இனிய பயணத்தில் அவர் பயணப் படுகிறாரென அவதானிக்கிறேன்.

அவரது எள்ளல் பொதிந்த எழுத்து, இந்நூலுக்கு ஆகப்பெரும் பலம்.தான்சார்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் காண்கின்ற, வெள்ளந்தித் தனங்களை முடிந்தவரை, உண்மையாய் பதிவு செய்திருக்கிறார்.சில புனைவுகளும் கண்களுக்கு புலப்படுகின்றன.அது சுகர்கோட்டட்சுவாரஸியத்துக்காக தேவைப்பட்டிருக்கலாம். அது கோமு அவர்களுக்கே வெளிச்சம்.

புத்தகத்தை எடுத்து, முதல் அத்தியாயத்தைப் புரட்டுகையில்,கோமுவின்
மனதை நீங்கள் ஓரளவு கற்று விடலாம்.புத்தகத்திலுள்ள ஒவ்வொருஅத்தியாயமும், ஒரு சிறுகதைக்குப் பஞ்சமில்லாத கருப்பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.நான் இந்தப் புத்தகத்திலுள்ள இழவுவீடுசெல்லும் நண்பன் மற்றும் அட்டக்கத்தி அரவிந்த்சாமியையெல்லாம் படிக்கும்போது,என்னையறியாமல் குபீரென சிரித்தேன். நல்லவேளை, நான் புத்தகம்  படிக்கையில், வீட்டில் யாருமில்லை. இருந்திருந்தால்,நான்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு,சிரித்த சிரிப்புக்கு என் குடும்பம்என்னை கோடங்கியிடம் அழைத்துச் சென்றிருக்கும்.

புத்தகத்தில் அச்சுமை வாசனையோடு,டாஸ்மாக் பாரின் முடைவாசனையும் அதிகளவில் நம் மூக்கைத் துளைப்பது சிறு நெருடல்.ஓர் ஆகச்சிறந்த காமெடிப் படம் பார்த்த திருப்தி, இப்புத்தகத்தின் வாயிலாக, அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும.

-சபரிமயில்வாகனன்.
  7708754280.

தூங்கப்போகையில்அம்முவிற்கு
நான்சொல்லும்கதைகள்எல்லாம்
அப்பாருசொன்னபழங்கதைகள்அல்ல!
அம்முவிற்குநான்சொல்லும்கதைகள்
அனைத்திலும்அம்முவேநாயகி!
உசிதப்பட்டணம்அப்படின்னுஒருஊரு
என்றுஆரம்பித்தால்அம்முஊரின்பெயரை
சிறுவலூர்என்றேமாற்றிச்சொல்லசொல்வாள்.
சிறுவலூரில்அம்முஎன்றொருகுட்டிபாப்பா
இருந்துச்சாம்! அதுஎல்லாநாளும்தயிர்
சோறேதான்சாப்பிடுமாம்! அதுக்குபல்லு
விளக்க, குளிக்க, பவுடர்பூச, பொட்டுவைக்க,
ஜடைபோடஎப்பவுமேஒருஆளுவேணுமாம்!
-போப்பாநீவேறகதைசொல்லு!
சிறுவலூர்ங்கறஊர்லரெண்டுஅம்முஇருந்தாங்களாம்!
ஒருஅம்முஉம்முனாமூஞ்சியாம்! தூங்கிட்டியா?

000000000

திருட்டுஉறவுக்குஏங்கிநிற்கும்இந்த
கவிதையைநீங்கள்வாசித்து
வயிற்றுப்போக்கில்சிரமப்படவேண்டாம்!
அவன்பெயரைகண்ணன்என்றுஇப்போதைக்கு
வைத்துக்கொள்வோம். –கண்ணன்
சீதாலட்சுமிவீட்டின்மதில்சுவறோரம்
அர்த்தஜாமத்தில்குந்தவைத்திருந்தான்.
சீதாலட்சுமிகையில்பிடித்தாலேவழுக்கிநழுவும்
உடல்வாகுபெற்றவளாகஇப்போதைக்குவர்ணிப்போம்!
அவள்கணவனுக்குஆஸ்துமாதொந்தரவு
இருந்ததாகவைத்துக்கொண்டால்சரிப்படும்!
மருந்துகளின்வீரியம்கூடஅவனைஅன்று
தூங்கவிடாமல்சதாலொக்கிக்கொண்டிருந்தான்.
சிதாலட்சுமிக்குகாமம்கடலளவுஇருந்ததுஅன்றுபார்த்து!
கண்ணனைஅன்பொழுகஅழைத்தவள்அவள்தான்!
இதற்கும்முன்பாகபலமுறைஅவர்கள்
திருட்டுஉறவுகுஜாலாககழிந்திருக்கிறது! –ஊர்
முழுக்கவும்இவர்கள்தொடர்பைப்பற்றிபேசி
வாய்ஓய்ந்துஇப்போதுபுதிதாய்வேறுவிசயம்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்! நேரம்செல்லச்செல்ல
சீதாலட்சுமிவருவதற்கானஅறிகுறிகொஞ்சமும்
இல்லாததால்கண்ணன்தன்னையே
நொந்துகொண்டுஎழுந்துகிழக்குவீதியில்
நடைபோட்டான்ஒன்றிரண்டுநாய்கள்குரைக்க!
ஒருவழியாய்கணவன்அமைதியானதருணத்தில்
சீதாலட்சுமிகதவுநீக்கிவெளிவந்துசந்தைப்பார்த்து
மெலிதாகசீட்டிஅடித்தாள்! அவளின்மணிதான்
சாப்பாடுகிட்டுமோஎன்றுவாலைஆட்டியவண்ணம்
ஓடோடிவந்தது! ’சித்தேகுக்கியிருக்கமாட்டானா?’
காறித்துப்பிவிட்டுசீதாலட்சுமிகதவைதாழிட்டுவிட்டு
படுக்கப்போனாள்! –அடுத்தநாள்கண்ணன்கூப்பிட்டான்.
நேற்றையவயித்தெரிச்சலில்சீதாலட்சுமி
இன்னிக்கிவேலைஇருக்குஎன்றாள்!
சீதலட்சுமிஆசைமிகுதியில்அழைக்கையில்
கண்ணன்ஜோலிஇருக்கு! என்றான்! இந்த
இரவுவிளையாட்டைஇருவருமேஒரு
கட்டத்தில்முடித்துக்கொண்டார்கள்! – ஊர்
அடுத்தவிசயத்தைபேசிக்கொண்டிருந்தது!
இந்தக்கண்ணன்பயல்லட்சுமியப்புடுச்சுட்டானாம்!
அந்தசீதாஇப்பசும்மாதான்காட்டை
வெதைக்காமபோட்டிருக்கா”!

0000000000

திருவிழாகாலத்துக்கெனஆத்தாவுக்கு
வளர்க்கப்படும்கிடாய்கள்ஊட்டச்சத்து
ஊட்டப்பட்டுவளர்க்கப்படுகின்றன
நமக்காககொஞ்சலுடன்!

0000000

-காளான்தேடிப்போனாவிரியன்பாம்புகிடக்குபூட்டுக்குள்ளன்னுபக்கத்துவீட்டுபெரியப்பன்சொல்லுதுப்பா!

-அவன்சரியானபுளுகன்டா! அந்தக்காலத்துலயேஅஞ்சுதலைநாகனைகருப்பராயன்கோயல்லபார்த்ததாஊரையேநம்பவச்சவன்!

-எங்கண்ணுக்குஏம்ப்பாமசக்காளான்மட்டும் சிக்குது? உனக்கென்னடான்னாபைக்குலபோவப்போவபார்த்துகண்டுபுடிச்சுவண்டியநிறுத்திடறே?

-கண்ணைநெத்திக்கிகொண்டாந்துதேடணும்! புரட்டாசிபோயிடுச்சு! அதனாலகாளான்சரியாபொடைக்கலை! பாப்பம்வெயில்வரட்டும்!

-சரிநாலுகேளானைவச்சுகொழம்புபண்ணமுடியாதா?

-எப்பிடியும்இந்தவாரத்துலவச்சிடுவோம்!

-கொழம்புஎப்படிப்பாசெய்யுறது?

-எப்பவும்போலத்தான்கறிஆக்கமொளகாட்டிசெய்யுறாப்லதான். ஆனாகடைசிலகொதிவந்துஇறக்குறப்பஉங்கோயாகையைகத்திலஅறுத்துரத்தம்ஊத்துவாகொழம்புக்குள்ள!

-போப்பா! கொழம்பும்வேண்டாம்ஒன்னும்வேண்டாம்!

0000000000000

இந்தக்கவிதைக்குள்ரேஷ்மாதான்
முண்டுகட்டிக்கொண்டுவந்திருக்கவேண்டும்!
கடவுளின்பிரார்த்தனையும்அதுதான்.
ஆனால்ஷகீலாதான்குட்டேட்டன்களின்
கரகோசங்களுக்கிடையில்சிற்றோடை
நோக்கிவந்தாள்! கையோடுகொண்டுவந்திருந்த
மஞ்சள்துள்பொடியைஆற்றில்நனையவிட்டு
அக்குள்களில்பூசிக்கொண்டுதிரையைவெறித்தாள்!
குட்டேட்டன்களின்போதாமையைநிறைவு
செய்யஇயக்குனர்உண்ணியங்பாய்ஒருவனை
ஷகீலாஅமர்ந்திருந்தஸ்பாட்டுக்குஅனுப்பி
அவளுக்குமுதுகுதேய்த்துவிடஅனுமதித்தார்.
இந்ததியேட்டர்காரசண்டாளப்பாவிகள்அடுத்தகணமே
சண்டைக்காட்சிக்குதாவிவிட்டார்கள்என்று
குட்டேட்டன்கள்கொந்தளித்துபெஞ்சுகளைதூக்கி
வீசிஎறிந்துவிட்டுகிளம்பியகாலம்மலையேறி
வைகுந்தம்போய்விட்டதுசகோதரா!

00000000000







Viewing all articles
Browse latest Browse all 425

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


எவடே சுப்பிரமணியம்?


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


ஆசீர்வாத மந்திரங்கள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>