தாழி (சிறுகதைகள்)
நந்தன்ஸ்ரீதரன்
எறும்புகளின்வாழ்விடங்கள்யானைகளின்கண்களுக்குத்தெரிவதில்லை. யானைக்குகால்தடம்என்பதுஎறும்புகளுக்குபேரழிவாகஇருக்கக்கூடும். தாம்நடந்ததுஎறும்புகளின்குடியிருப்புஎன்பதைக்கூடஅறியாமல்யானைகள்பாட்டுக்குநடந்தபடிதான்இருக்கின்றன.
தேனிமாவட்டக்கதைகள்பலஎனக்குஏற்கனவேஅறிமுகப்பட்டிருந்தாலும்நினைவில்வைத்திருக்கும்படியாகஎதுவும்அமையவில்லைஎன்றநிலைமையைகாலகாலத்துக்கும்மறக்கஇயலாதகதையாகசெல்லக்கிளியின்தம்பிஎன்கிறகதைஇத்தொகுப்பில்அமைந்துவிட்டது!
மொத்தமேஏழுவாழ்விடங்களில்நந்தனுக்காகநடத்தப்பட்டநாடகங்கள்போன்றுஇவைகள்துள்ளியமாகநடத்தப்பட்டிருக்கின்றன! நடந்துமுடிந்தும்விட்டிருக்கின்றன. நந்தனுக்குதன்படைப்பாற்றலைவைத்துசொல்லஇன்னும்ஏராளமானவிசயங்கள்அவர்வாழ்வில்நடந்தேறியிருக்கலாம். படைப்பாற்றலைத்தரும்சம்பவங்களைமட்டுமேஅவர்தேர்ந்து, மிகநிதானமாகஏற்கனவேஅவர்வாசித்திருந்தபலகதைசொல்லிகளின்தன்மையிலிருந்துவிலகியும்விடாமல்சொல்லிவிடும்தன்மையைகைவரப்பெற்றிருக்கிறார்.
எந்தத்தொகுப்பையும்முதல்கதையிலிருந்துவாசிப்பவனல்லநான்! சிறுகதைதொகுதிஎன்றால்பின்னிலிருந்துமுன்னுக்குவருபவன். இந்தப்பழக்கம்என்னைஎக்காலத்திலும்விடாதுபோலிருக்கிறது. ஆனாலும்இத்தொகுதியைகையிலெடுக்கையில்ஒருதலைக்காதல்கதைஎன்றதலைப்புஎன்னைஈர்க்கவேமுதலில்அங்குஓடிவிட்டேன். காதல்கதைகள்எக்காலத்திலும்படிக்கசுவாரஸ்யம்குன்றாதவைகள்! காதல்வெற்றிபெறுவது, தோல்விபெறுவதுஎன்பதெல்லாம்பிரச்சனைஅல்ல! நான்ஆழ்ந்தவாசிப்பில்இறங்கியதருணம்‘அதுஒருநிலாக்காலம்’ ஸ்டெல்லாபுரூஸ்நாவலைவாசித்ததருணம்தான். கூடவே’தொட்டால்தொடரும்’ பி.கே.பி. இந்தஇரண்டையும்மீறியஒருபடைப்பைஇன்றுவரைநான்காதலாகிகசிந்துருகிவாசித்ததில்லை! ராம்குமார்மாதிரிநல்லசட்டைஅணியமுடியாதபருவத்தில்சுகந்தாக்களைதேடிஅலைந்தகாலமது! மீண்டும்திரும்புகிறேன்என்தொட்டிலுக்குஎன்பதுபோலஎனதுபடைப்புகளில்இலக்கியம்என்றுஎன்னவென்னவீரியங்கள்இருந்ததோஅதற்கானசொல்லுமிடமோகேட்குமிடமோஇல்லாதமண்ணில்என்னஎழுதுவது? இலக்கியம்வரலாற்றின்பதிவுஎன்பதெல்லாம்இனிவேலைக்காகாது! இந்தமண்ணில்யாரிடமாவதுஅனுமதிபெற்றுத்தான்எழுதவேண்டும்என்றநிலைமைவந்துவிடும்அபாயத்தைநெருங்கிக்கொண்டிருப்பதுகண்கூடாகத்தெரிகிறது! காதல்கதைகள்இந்தவன்மங்களுக்குள்எக்காலத்திலும்சிக்காது!
மீண்டும்என்தொட்டிலுக்குதிரும்பும்சமயத்தில்நந்தனின்இந்தகாதல்கதைநிஜமாகவே‘அருமெ’ சொல்லவைத்துவிட்டது! ஆண்தான்காதலுக்காகபெண்ணின்பின்னால்சுற்றுவான். அதுதான்அழகானதும்கூட! இங்குபுஷ்பாக்காசெந்தட்டியின்காதலுக்காகஅவனைதுரத்துகிறாள். அந்தகாதல்உண்மையானதுஅல்லஎன்பதையும்நந்தன்முன்பேநமக்குசொல்லிவிடுகிறார். வகுப்பில்பயில்பவர்களில்பணக்காரன்செந்தட்டி! அவ்வளவுதான். எழுதும் வரிகளை நகையாடலுடன் சொல்வதற்கு நிரம்ப மெனக்கெட வேண்டும் ஒரு எழுத்தன். இவரின் மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் இக்கதையில் நகையாடல் அதிகம் தான்.
திரைப்படங்களில் பார் சீன்கள் வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகி வருவதும் கண்கூடு! குடி அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. திரையில் குடிகார்ர்களை ஒரு பாரில் காட்டுகையில் அரங்கில் எந்த பெண்களும் கூட முகத்தை சுழிப்பதில்லை! காலமாற்றம் என்பதை விட அதன் வழி பயணப்படுதல் என்பது அரங்கேறி விட்டது! வாடகை கதை அப்படியான இடத்தில் துவங்குகிறது! நாயகனின் குடி பற்றிய அறிமுகங்களை நமக்குத் தந்து விட்டு அவன் தாய் வீட்டு வாடகைக்காக திருடிக்கொண்டு மகனுடன் பேருந்தில் பயணிப்பதில் முடிகிறது! அழுத்தம் மேலும் சேர்ந்திருக்க வேண்டிய கதை தகவலாக முடிகிறது!
பெரு நகரங்களில் வாடகை வீட்டில் தங்கியிருப்பவன் சிரமங்களை தொகுதியில் இரண்டு கதைகள் அழுத்தமாய்ச் சொல்கின்றன. மேலே இருந்து கொட்டும் சொற்கள் கதையை விட தேய்ந்த நிலாக்களின் காலம் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது! நந்தன் என்ற படைப்பாளியும் வெற்றி பெற்றிருக்கிறார். கிழங்களின் தாக்குதல்கள் வார்த்தை வடிவிலோ, செயல் வடிவிலோ எல்லா ஊர்களிலும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. வாழ்க்கையை கிழங்கள் கொண்டாட்டமாய் அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சாணிகரைசல் தலையில் விழுவதெல்லாம் தூசிக்குச் சமானம்! சாவுக்கான அழைப்பை நோக்கி அவர்கள் மகிழ்ச்சியாக பயணிக்க தேர்ந்தெடுக்கும் வழி தான் பலருக்கும் சிரமங்களை தருகின்றன.
‘செளந்தர்யா அப்பா வந்து கேட்டதும், பிரதர் வந்து கேட்டது மாதிரி இருந்துச்சு சார்!’ மனதின் பலவீனங்கள் வாழ்க்கையை பலவீனமாக்கும் முதல் கதை ஒரு போக்கு என்றால் இது வேறு மாதிரி! முதல் கதை எனக்கு ஏற்புடையது தான் என்றாலும் புதிதாக வாசிக்கும் சிலர் புத்திமதிகளை நந்தனுக்கு வழங்கலாம்! அதை அவர் வழக்கமான புன்னகையோடு கடந்தும் செல்வார்!
மொத்தத்தில் ஒரு நிம்மதியான வாசிப்பு அனுபவத்தை தந்த தொகுப்பாக நந்தன் ஸ்ரீதரனின் இந்த முதல் தொகுப்பை வரவேற்கலாம்!
(இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் மேட்சில் கிடந்திருப்பேன்.. நல்லவேளை 9 மணிக்கு அண்ணன் தவான் துச்சமாக இங்கிலாந்து தடுப்பாளர்களை பார்த்த பார்வையின் போதே மின்சாரம் போய்விட்டது)
-நிலமிசை வெளியீடு- பேச : 99626 03151 – விலை -99