Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all articles
Browse latest Browse all 425

கடலை - 6

$
0
0



























SC NO : 20
உள்ளூர் டீக்கடை (காலை நேரம்)

மாணிக்கம், சுப்பு,மணி, காளி டீக்கடை பெஞ்சில் வெளியில் அமர்ந்திருப்பது. டீக்கடையில் ஒரு பெரிய அட்டை எழுதி தொங்க விடப்பட்டுள்ளது! அதில் கடன் சொல்லாதீர் தயவு செய்து!” என்றிருக்கிறது. மணியும், சுப்புவும் சீரியசாய் பேப்பர் படிப்பதான பாவனையில் இருப்பது!

காளி : டீ சொல்லு பங்காளி! எவ்ளோ நேரம் தான் பேப்பரை புறட்டீட்டே இருக்கறது? மணியனைப் பாருடேய் எழுத்து மறஞ்சிடப் போவுதுடா! எப்பிடி கிட்ட வெச்சு படிக்கிறான் பாரு!

மாணிக்கம் : போர்டு பார்க்கலியா நீ?

காளி : அதான் வந்ததீம் பார்த்துட்டனே! அதை பிச்சு வீசிடவா?

கடைக்காரர் : அது மேல கைய வச்சா கையை ஒடச்சிடுவேன்!

காளி : என்ன பங்காளி இப்படி கொந்தளிக்கிறான்? ஒரு பூனை புலியாயிடுச்சோ? வெடிஞ்சு மூனு மணி நேரமாச்சு.. ஒரு டீக்கு வழியில்ல! பேசாம நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணிடட்டா?

கடைக்காரர் : கொஞ்சம் தூரமா போயிடு, கடைக்கிட்ட வேண்டாம்!

காளி : யோவ் கடைக்காரரே! எங்க பழைய கணக்கு எவ்ளோய்யா இருக்குது? ஒரு 100 ரூவா இருக்குமா எங்க கடனு?

கடைக்காரர் : யாருடைய கணக்கும் இல்ல! கணக்கு நோட்டை இன்னிக்கி தீயில போட்டுட்டேன்! இன்னைல இருந்து காசு கைக்கு வந்தா டீ போடுவேன்!

மாணிக்கம் எழுந்து ஒரு போன் போட்டு பேசி விட்டு வந்து அமர்வது!

மாணிக்கம் : மணி! நீ வண்டிய எடுத்துட்டு நம்ம ஆயாவை போய் பாரு! அது பணம் குடுக்கும். வாங்கிட்டு வா போ! (மணி மாணிக்கத்திடம் சாவி வாங்கி வண்டியை கிளப்பிச் செல்வது)

சுப்பு : எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் காளி!

காளி : சந்தேகத்தை மனசுலயே வச்சுட்டு வாத்தியார் அடிப்பாரோன்னு பயந்தே பெயில் ஆனவன்டா நானு! இப்பத்தான் தெரியுது தப்பு! நீ கேளு!

சுப்பு : பழனி மாமன் ஏன் உன்னை கண்டா மட்டும் கொந்தளிக்கிறாரு!

காளி : எத்தனவாட்டி பாத்திருக்கே அவரு கொந்தளிக்கிறதை! ஏன் இப்ப கேட்கத் தோணுச்சு உனக்கு!

சுப்பு : இல்ல பேப்பரை பூராவும் புறட்டியாச்சு! இனி போரடிக்குமுல்ல!

காளி : ! போரடிக்க கூடாதுன்னு கேக்குறே!

சுப்பு : ஆமா காளி, இப்பத்தான் வெடிஞ்சு மூனு மணி நேரமாயிருக்குஇனி எப்ப மத்தியானமாயி, எப்ப சாயந்திரமாயிஎப்ப இருட்டு கட்டறது? எப்ப கட்டல்ல நான் வுழுறது? ஒரு பொழுது ஓட்டறதுக்கு ஒம்பது குட்டிக்கரணம் போட வேண்டிதா போயிடுது காளி!

காளி : இவனை ஒரு அடி அடிச்சிக்கட்டா பங்காளி நானு! (மாணிக்கம் பேப்பர் படிப்பது)

கடைக்காரர் : சண்டைய தூரமாப்போயி வச்சுக்கங்க!

காளி : யோவ் காசு பைக்ல வருதுய்யா.. டீயப் போடு!

கடைக்காரர் : கைக்கு வரட்டும்!

காளி : அது வந்து சுப்பு ஒரு வருஷம் முந்தி பழனி மாமன் கெடா வெட்டு வச்சிருந்தார் வீட்டுல

CUT SHOT

எக்ஸெல் சூப்பர், அல்லது கியர் வண்டி பின்னால் பொட்டி கட்டியிருப்பது! (மரப்பெட்டி 2 ஆடுகளை கால்களை கட்டி உள்ளே போட்டு மேலே கயிறு கட்டி வருமாறு)
தனிசாலையில் காளி நடந்து சென்று கொண்டிருப்பது! எதிரே தூரத்திலிருந்து பழனி எக்செல் சூப்பரில் வருதல். இவனருகில் வந்ததும் நிப்பாட்டி

பழனி : காளி எங்கடா தனியா வந்துட்டு இருக்கே இங்கே?

காளி : பசங்க பந்தாட்டமாட வந்தாங்க மாமா! காட்டாம்பட்டிக்காரனுகளோட இன்னிக்கி மேட்ச்சுன்னு சொன்னானுக! வந்து பார்த்தா காட்டாம்பட்டில எதோ எழவு விழுந்திருச்சுனு அவனுக வரலை! நம்மாளுக இவனுகளே டீம் பிரிச்சு ஆடிட்டு இருக்கானுக! நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்!

பழனி : சரி இப்ப ஊடு போயி என்ன பண்ணப்போறே?

காளி : என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க? போயி படுத்து தூங்கோணுமல்லொ!

பழனி : இப்படி நீ பொறுப்பா பேசுறதுனால தாண்டா மாமனுக்கு எப்பயும் உன்னை பிடிக்கும்! பின்ன வெய்யில்ல பந்தாடி ஒடம்பு கறுத்துப் போச்சுன்னா…!

காளி : எங்க மாமா வண்டில பொட்டி கட்டி கிளம்பீட்டீங்க?

பழனி : ஒரு காரியமா கிளம்புனவங்கிட்ட எங்க போறீன்னு கேட்டுட்டியேடா காளி!

காளி : இல்ல ஆட்டு ஏவாரிக தான் பொட்டி வச்ச வண்டில சுத்துவாங்க! நீங்க எப்ப ஆட்டு ஏவாரி ஆனீங்க?

பழனி : நாளைக்கி நம்மூட்டுல கெடா விருந்துடா காளி! காட்டுக்கருப்பனுக்கு ரெண்டு குட்டி அறுக்குறேன்.

காளி : அழைப்பே போடுல!

பழனி : ஊருக்குள்ள முக்கியமான வீடுகளுக்கு மட்டும் தான் சாயந்தரமா அழைப்பு போடணும்! திடீருன்னு நேத்து எடுத்த முடிவுடா காளி. அதான் சந்தைக்கி போயி ரெண்டு புடுச்சார கிளம்பிட்டேன். நல்லவேளை நீ வந்தே!

காளி : நான் வந்தனா?

பழனி : துணைக்கி வாடா! தனியா போயிட்டு வர்றதுக்கு துணையிருந்தா ஆகுமில்ல!

(எக்செல் என்றால் முன்னால் அமர்வது, கியர் வண்டி என்றால் சவுரியம்)

வண்டியில் செல்லச் செல்ல..

காளி : ஏம் மாமா, உங்க பட்டி ஆட்டுலயே ரெண்டை அறுக்கறதை விட்டுட்டு சந்தைக்கி போகணுமா?

பழனி : காளி, பட்டி ஆடுக விருத்தியாகறதுக்கு தான் கெடா வெட்டே காட்டுச் சாமிக்கு வெக்கிறது! காட்டுல வெச்சு வெட்டி கொண்டாந்து ஊட்டுல சமைக்கிறது!

காளி : சந்தையில் ஒரு ஆட்டை யானை வெலை சொல்லுவாங்களே மாமா!

பழனி : அதெல்லாம் பாத்தா விருந்து போட முடியுமா காளி.

காளி : இன்னிக்கி சந்தை இல்லியே மாமா அங்க போயி?

பழனி : நம்ம ஆட்டேவாரி குப்புச்சாமி கிட்ட போனு போட்டு கேட்டுட்டு தான வர்றேன் ஆடுக எதாச்சிம் வந்திருக்கான்னு! இதார்றா கும்பிடு போட்டு வண்டிய நிறுத்துறது? (எதிர்க்கே சைக்கிளில் வந்த இருவர் இறங்கி கும்பிடுவது)

கூளையன் : கும்பிடப்போன தெய்வம் குறுக்கயே வந்த மாதிரி வந்துட்டீங்க சாமி!

பழனி : யாரு கூளையனா? கூட யாரு உன் பையனா?

கூளையன் : எம் பையந்தானுங்க சாமி! உங்களைப் பாக்கத்தான் வந்துட்டு இருந்தோமுங்க!

பழனி : நம்ம காட்டுல தட்டறுப்பு எல்லாம் முடிஞ்சு போச்சே கூளையா!

கூளையன் : நானு எம்பட சோலிக்கி உங்களை பாக்க வந்தனுங்க சாமி!

பழனி ; உம்பட சோலியா?

கூளையன் ; இவன் தங்கச்சிக்கி நேத்து பொழுதோடத்துல இருந்து மூச்சுச்தப்பு புடிச்சுக்கிச்சுங்க. நீங்க பண்டிதம் பண்ணுவீங்கன்னு தான் உங்களை கூட்டியார வந்தமுங்க!

பழனி வண்டியிலிருந்து இறங்கி காளி கையில் பத்தாயிரம் கொடுத்து ..

பழனி : ஆட்டேவாரி குப்புச்சாமி சந்தையில தான் இருப்பான். நான் சொன்னன்னு அவனை பார்த்தீன்னா ரெண்டு புடிச்சு குடுப்பான் காளி. எச்சுபுச்சா இருந்தாலும் வாங்கிக்க. பணம் நான் மீதத்தை  தந்துடுவேன்னு சொல்லி தூக்கி போட்டில போட்டு நல்லா கட்டி உடச்சொல்லி நேரா வீடு வந்துடு!

பழனி அவர்களோடு நடந்தபடி கிளம்புதல்! காளி வண்டியை கிளப்புதல்.

CUT SHOT

சந்தையில் இருவர் ஏழெட்டு ஆடுகளுடன் நின்றிருப்பது. காளி குப்புச்சாமியுடன் ஒரு ஆட்டேவாரி முன் நின்றிருப்பது!

காளி : ஆடெல்லாம் இந்த வாரம் என்ன வெலையில போகுதண்ணே?

குப்புசாமி : அது போறது இருக்கட்டும் ஆடு யாருக்கு?

காளி : ஏன் எனக்குத் தான்! என்னைபார்த்தா ஆடு வாங்க வந்தவன் மாதிரி தெரியிலயா?

குப்புச்சாமி : ஆடு திருட வந்தவனாட்ட தெரியறியேன்னு கேட்டேன்!

காளி : என் பார்வையே அப்படித்தான். சரி வெலையச் சொல்லுங்க!

குப்புச்சாமி : எந்தூரு நீயி மொதல்ல?

குப்புச்சாமி : ஏன் ஊருப்பேரு சொன்னாத்தான் ஆடு குடுப்பீங்களோ! நான் பல்லடத்துல இருந்து ஆடு கொஞ்சம் சல்லீசா கெடைக்குமுன்னு வண்டி எடுத்துட்டு வந்திருக்கேன்.

குப்புச்சாமி : கடையில அறுக்கறக்கா? வீட்டுல வளத்துறக்கா?

காளி : வளத்தறக்கு எவனாச்சிம் வண்டி எடுத்துட்டு வருவானா இவ்ளோதூரம்? கடைக்கி தான்! நாளைக்கி ஞாயித்துக்கிழமைல்ல.. வெலையச் சொல்லுங்க!

குப்புசாமி : உனக்கு எவ்ளோக்கு வேணும்?

காளி : எனக்கு ஆயிரத்துக்கு வேணும்!

குப்புச்சாமி : சரி குடுத்துருப்பா தம்பிக்கு! (மற்றொரு ஏவாரியிடம் பேசுதல்! அட! என்று காளி யோசித்தல்! (கேட்டதீம் சரின்னுட்டான்! அப்ப 500க்கு கேட்டிருக்கலாமோ!)  2000 கொடுத்து இரண்டு ஆடுகளை பிடிப்பது! 8000 த்தை நேக்காக ஜோப்பில் போட்டுக்கொள்வது)

SC NO 20 A

பழனி வீடு! வீட்டின் வெளிப்புறம் தென்னை ஓலை தடுக்கு வைத்து பந்தல் போட்டு மறைப்பு கட்டி இருக்க விருந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது! உள்ளூர் ஆட்கள் கூட்டமிருப்பது.

பழனி பந்தி பறிமாறிக் கொண்டிருக்குமிடத்தில் : எல்லாரும் வயிறு ரொம்ப சாப்பிடுங்க! கறி பத்தலின்னா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! (கொஞ்சம் பூஸ்ட்டில் இருத்தல்)

சாப்பிடுவர் ஒருவர் : கேட்டு வாங்கிச் சாப்பிடுன்னு சொல்றியே தவுத்து படக்குனு எடுத்தாந்து கறி வெக்க மாட்டீங்கறியே பங்கு!

பழனி : பரிமாறிட்டு இருக்காங்கள்ள! கேட்டா போடுவாங்க!

மற்றொருவர் : பொம்பளை பிள்ளைங்கல்லாம் வறுவலை எப்படி சப்பிடுவாங்க பழனி! பயங்கர காரம்! வாயில துளி சரக்கு நனைச்சுட்டம்னா சுருக்குனு காலி பண்ணிடலாம்!

அப்போது நான்கைந்து பேர் கையில் தடியுடன் வெளியில் ஓடுவது!

சப்தம் : அந்தச் சந்துல தான் ஓடியாந்துச்சு பாரு! உடாதே! மண்டைப்போடா போட்டுரு!

பழனி வெளியில் ஓடிவந்து : என்னப்பா ரவுசு?

ஓடுபவரில் ஒருவர் நின்று : மசை நாயி ஒன்னு ஊருக்குள்ள வந்துடுச்சு பழனியண்ணா! ரெண்டு நாயிகள வேற கடிச்சிப் போட்டுதாமா!

பழனி : அடிச்சு கொன்னு போடுங்கப்போ! ஆளுகளை கீது கடிச்சிடப் போவுது! (மீண்டும் உள்ளே வருதல்)

சாப்பிட்டு இலையை மூடும் ஒருவர் : என்ன பழனி சத்தம் அங்க?

பழனி : வெய்யில் காலமில்ல! மனுசனுக்கே மசை பிடிக்கறாப்ல தான் இருக்குது! நாயிக்கி மசை பிடிக்கறது சகசம் தான!

மூடியவர் எழுந்து விரலைச் சப்பியபடி : கொன்னு போட்டாங்களா?

(பெண் குரல் ஒன்று கேட்கிறது. சாமி ரோட்டுல போயி ஆடாத.. நாயி கடிச்சிப்போடும் ஓடியா இங்க)

பழனி : தடியோட போறங்க நாலு பேரு! திருப்தியா சாப்பிட்டீங்களாண்ணா! வெளிய வெத்தலை தட்டு வச்சிருக்கும் பாருங்க!

(வெளி படலோரத்தில் கை கழவ பெரிய அண்டாவில் தண்ணீர் இருப்பது! இந்தப்புறமாக கைதுடைக்க துண்டு படலில் கட்டியிருப்பது,)

அடுத்த பந்திக்கு இலை பரிமாறப்படுகிறது!

பழனி பையன் : சாப்பிடாதவிங்க எல்லாம் வாங்க! இலை போட்டாச்சு!

வெளியே சேர்கள் போடப்பட்டிருக்க அதில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து உள்ளே வருவது! காளியும் ,மாணிக்கமும் கூட்டத்தாரோடு வருவது!

காளி பழனியிடம் : மாமா நீ மட்டும் நனைச்சுக்கிட்டியாட்ட! எங்களுக்கு நனைச்சுக்க இல்லியா! கறிச்சாரை சும்மாதான் சாப்பிடணுமா! (பழனி உஸ்சென வாயில் விரல் வைத்து காட்டுவது)

பழனி : அத்தைகாரி காதுல விழுந்துச்சுன்னா கொந்தளிச்சுடுவா! அதெல்லாம் விருந்துக்கு வர்றப்ப நீங்களே பார்த்துட்டு வந்துடறதில்லியாடா பசங்களா! என்னமோ போங்கடா!

காளி : சரி மாமன் இருக்குது பாத்துக்கும்னு வந்துட்டோம்!

பழனி : மாமன் எனத்தப் பாப்பான் இத்தன செலவு பண்டீட்டு? யோசிச்சீங்களா? மாமன் செலவு பண்டி விருந்து வெக்குதே.. போறப்ப மாமனுக்கு ஒரு பாட்டிலாச்சிம் கொண்டு போயி குடுக்கணும்னு நெனப்பு வந்துச்சா உங்களுக்கு?

காளி : அய்யோ! மாமன் நம்ம கிட்ட நோம்பி கும்பிடப் பாக்குது! (சாப்பிட சென்று அமர்கிறார்கள் ஓரமாய் இருவரும். அப்போது வெளியே சப்தம்! கேட்டபடியே பழனி வெளியில் வருவது. நான்கு பேர் தடியுடன் மீண்டும் சாலையில்)

ஒருவர் : போட்டான்டா குப்பான் மண்டையிலயே ஒரு போடு!

பழனி ; என்னப்பா நாயை போட்டீங்களா?

மற்றவர் : போட்டாச்சுன்ணோவ்!

பழனி : நல்ல வேலை செஞ்சீங்கப்பா! சாப்பிட்டவங்க ஊடு போறதுக்கு கூட பயந்துட்டு நின்னாங்க இங்க!

ஒருவர் : இந்த நாயி பொள்ளாச்சில நேத்துல இருந்து சுத்துச்சாம்! மசை பிடிச்சுட்டா எங்க போறோம்னு தெரியாம ஓடறது தான!

பழனி : யாரையும் கடிக்கலீல்ல?

ஒருவர் ; நேத்து ஒருத்தரு ஆட்டுப்பட்டில நொழஞ்சு காத்தாலயே 12 உருப்படி ஆடுகளை கடிச்சுப்போட்டுதாம்!

பழனி ; அடப்பாவத்தெ! யாரு பட்டி ஆடுகளையாமா?

மற்றவர் : அது தெரியிலீண்ணா! கடிச்ச ஆடுகளை நேத்து பன்னண்டு உருப்படிகளையும் சந்தையில் வச்சி கொறஞ்ச வெலைக்கி வித்துப்போட்டானாமா பட்டிக்காரன்.

பழனி : அட! நாங்க வெட்டுனது அந்த ஆடுகளோ என்னமோ! (படக்கென பேசிவிட்டு நாக்கை கடித்துக் கொள்வது! திருட்டுத்தனமாய் எல்லாரையும் திரும்பிப் பார்ப்பது! காதில் விழுந்ததுமே காளி இலையிலிருந்து எழுந்து மாணிக்கத்தை இழுத்து பின்புறமாய் நழுவுவது! வெளியில் கூச்சல் ஆரம்பிப்பது! சிலர் குனிந்து ஜொல்லு விடுவது)

கூட்டம் : அடப்பாவி! விருந்துன்னு கூப்பிட்டு நாயி கடிச்ச ஆட்டை போட்டுட்டியேடா! நான்கைந்து பேர் சூழ்ந்து பழனியை அடிப்பது)

CUT SHOT    

டீக்கடை

நால்வர் கையிலும் இப்போது டீ டம்ளர். மேலும் இருவர் எதிர் பெஞ்சில் அமர்ந்திருப்பது!

சுப்பு : இதனால தான் பழனியண்ணன் உன்னை பார்த்தா பார்த்தா கொந்தளிக்கிறாரா! சரி மிச்சம் 8000 இருந்திருக்குமே அது என்னாச்சு?

காளி : நரி தின்ன கோழி கூவவா போவுது? நானும் பங்காளியும் அதை வச்சுட்டு ஒரு வாரம் கூத்தடிச்சோம்! பின்ன வச்சுப் பொழைக்கவா போறோம்?

சுப்பு : ஆமா அன்னிக்கி பழனி அண்ணன் கூட சந்தைக்கி நீ போயிருந்தாலும் அதே ஆட்டை தான பழனியண்ணன் வாங்கிட்டு வந்திருக்கும்?

காளி : ஆமா! பின்ன வேறென்ன நடந்திருக்கும்? இது உனக்கு தெரியுது! அவருக்கு தெரியலியே!

எதிரே அமர்ந்திருந்தவர் : ஏப்பா காளி ! நான் கதைய எடையில இருந்து தான் கேட்டேன்! நல்லா இருக்குமாட்ட முதல்ல இருந்து சொல்லு!

காளி : சொல்றென்! இன்னம் நாலு டீ சொல்லிடுங்க! (அவர் தலைய குனிந்து கொள்வது)

எதிரே அமர்ந்திருந்த மற்றொருவர் : ஏம் மாணிக்கம் உன் அத்தைக்கி ஒடம்பு செரியில்லியாமே! என்ன விசயம்?

மாணிக்கம் : இல்லியே! நல்லாத்தான இருக்காங்க!

அவர் : என்னப்பா நீ, குடியே அங்க போயிட்டியாமா! அங்க நடக்குற விசயம் தெரியாம இருக்குமா?

காளி : என்ன பங்காளி, அன்னிக்கி பஸ்டாப்புலயும் ரெண்டு பேரு இப்படி கேட்டாங்களே! உங்க அத்தைக்கி ஒடம்பு செரியில்லியான்னு! எதுக்கும் மாமனை கேட்டுப்பாரு நீ!

மாணிக்கம் : இவங்க வேற யாரையோ சொல்றாங்கன்னு நினைக்கேன்டா! ஆனா காலையில மாமன் வீட்டை விட்டு கிளம்புனன்னா இருட்டு கட்டி தான நான் அங்க போறேன்! பகல்ல என்னமோ நடக்குது போல!

காளி : பகல்ல பழனி மாமனும் வீட்டுல இருக்குறதில்லையே!

மாணிக்கம் ; சம்திங் ராங்!


-வளரும்

Viewing all articles
Browse latest Browse all 425

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கான பைரவரின் அருளை பெற


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடோனாக மாறிய சமூக நலக்கூடம்: மக்கள்...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>