Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all 425 articles
Browse latest View live

மயூராவின் ... மூன்றாவது துளுக்கு

$
0
0


தன் முதல் சிறுகதை 1998ல்  விகடனில் பிரசுரமானதாக மயூரா ரத்தினசாமி தொகுப்பின் முகப்பில் அறிவிக்கிறார்.  பலரையும் போல வெகுஜன இதழ்களின் வாசிப்பாளராக துவங்கி பிற்பாடாக சிற்றிதழ்களின் சிறுகதை வடிவங்களைக் கண்டு கதையானது முன்னைப்போலவே முடிவுகளைத் தாங்கியிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை என்பதை உணர்ந்தவராகிறார். ஒவ்வொரு கதையும் முடிவிலிருந்து ஒரு நீட்சியை கொண்டதாகவே உள்ளதை கண்டுணரும் சமயம்  ஒரு சிறுகதை எழுத்தாளாரக தன்னையே உனர்ந்து கொள்கிறார் மயூரா ரத்தினசாமி.

சுழற்சி என்கிற முதல் கதையை வாசிக்கத்துவங்குகையில் அவரது வெகுஜன எழுத்தின் வாசிப்புத்தன்மை அப்படியே அப்பட்டமாக அதில் இருப்பதைக் கண்டு இதை இப்போதைக்கு வாசிக்கலாமா? இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா? என்றே யோசித்தேன். சிறுகதைக்காக கதைக்களன்களை எழுத்தாளனே முடிவு செய்து துவங்குகிறான். அவன் எங்கு முடித்துக் கொள்ள யோசிக்கிறானோ அங்கு முடித்து வைத்து விட்டு அவ்வளவுதான் என்கிறான்.
இந்தத் தொகுப்பில் விகடனில் வெளியான கதைகள் அனைத்தும் எதற்காக கடைசி வரிசைக்குச் சென்றன? என்ற கேள்வியும் இருந்தது எனக்கு.

விகடனில் இம்மாதிரியான கதைகள் இப்போது வெளிவருவதில்லை என்பதே இப்போதைய நிலைமை. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெகுஜன இதழ்களும் சிறுகதைகளில் முற்றும் சொல்லும் கதைகளை நிராகரிக்கின்றன.
பச்சைக்கண்ணாடி என்கிற கதை குழந்தைகளின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. சித்தப்பனின் கண்ணாடி உடைந்ததற்காக கன்னத்தில் அடித்த சித்தப்பனை வெறுப்பாய் குழந்தை பார்ப்பதில்லை. ஆனால் அண்ணி சுடுசொற்களைக் கூறி  கதை சொல்பவனின் மனதை நோகடிக்கிறாள். குழந்தை தன்னுடைய உடையாத கலர் கண்ணாடியை சித்தப்பனுக்கு தருகிறது. விகடனில் இவர் எழுதிய கதைகளனைத்தும் வாழ்வியல் கதைகள்.  இதைப்போலவே காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை ஊடல்களை மிக அழகாக, பூட்டைத் தொலைத்து விடு கதை வாயிலாக சொல்கிறார்.

வெயிலைக் கொண்டு வாருங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி. வானசஞ்சாரக்கதை என்று அத்தொகுப்பின் முதல்கதையை வாசித்த பிரமிப்பில் இவரும் அதைப்போன்றே எழுத முயற்சித்திருக்கிறார். இதை, போலச் செய்தல் என்றே குறிப்பிடுகிறார். போலச் செய்தல் தவறில்லை என்றாலும் எந்த சுவாரஸ்யமும் இன்றி இது நீள்கதையாகி வாசகனுக்கு சலிப்பைத் தருமாறு அமைந்து விட்டது. இம்மாதிரியான முயற்சிகளை மயூரா ரத்தினசாமி தவிர்த்தல் நலம் என்றே படுகிறது.

மீண்டும் வருவார் தொகுப்பில் கடவுள் எழுந்தருளியதைப் பற்றி கதை பேசும் பகடி எழுத்து. இன்னமும் வேடிக்கை பலவற்றை சேர்த்திருக்கலாம். பல்லி வேட்டை இவரது மாற்று கதை சொல்லல் வடிவத்திற்கான முயற்சியாக  கொள்ளலாம்.  வாசிக்க உகந்த கதைகளை தாங்கிய தொகுப்பாக மயூரா ரத்தினசாமியின் முதல் தொகுப்பு இருக்கிறது.

இந்தத் தொகுப்பை முன்பாகவே வாசித்து நன்றாக இருக்கிறது கோமு என்று கூறிய விஜய் மகேந்திரனுக்கு இந்த இடத்தில் ஒரு நன்றியை சொல்லிவிடுகிறேன்.

மூன்றாவது துளுக்கு- விலை 130 - எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259-226012.

000

பதிவுகள்!!

$
0
0

நேற்றுபல்லடத்திலிருந்துமிதமாகபேருந்தின்இடதுகைஓரமாகஅமர்ந்துதிருப்பூர்நோக்கிபிரயாணம்செய்கையில்என்அருகில்அமர்ந்தவன்ஒருஹிந்திவாலாபொடியான். ’திருப்பூர்மேலேஜாத்தாஹே?’ என்றான்என்னிடம். ஆமாடாஆமாம்! என்றதும்புன்னகைத்தான். அந்தபேருந்துபூராவும்ஹிந்திவாலாபொடியன்கள்தான்நின்றிருந்தார்கள். பேருந்தின்கண்டக்டெக்டர்அரைகுறைஹிந்தியில்அவர்களைநொங்கெடுத்தார். அவர்வேதனைஅவருக்கு. ஹிந்திப்பயல்கள்தாங்கள்இறங்கும்இடத்தின்பெயரைசரியாகஉச்சரிக்காததால்அவர்அனைவருக்கும்ஒரே 10 ரூபாய்வசூல்செய்தார். வெளியேஒவ்வொருநிறுத்தத்திலும்ஹிந்திபெண்களிடம்ஹிந்திப்பையன்களின்ஓட்டங்கள்நடைபெறநான்அருகில்இருந்தபையனைப்பார்த்தேன். அவன்புன்னகைபலமொழிகளைஎனக்குகற்றுக்கொடுத்தது! திருப்பூர்எங்கேபிரயாணப்படுகிறது? அல்லதுஜாத்தாஹேபண்ணுகிறது?

000

கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்று எங்கிருந்து எப்படி வந்தது என்று அனைவரும் யோசித்தோமா? 1947-ல் அவர்கள் விடுதலை அளித்து விட்டு செல்கையில் ஒருவேளை கருத்துச் சுதந்திரத்தையும் கொடுத்துச் சென்றார்களா? இது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவும் நமக்கு அப்போது இருக்கிறது என்பதே அதன் உள்ளடக்கம்.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்திற்கு எழுதும் முன்பாகவே லட்சக்கணக்கில் தொகை பெற்று அவர்கள் என்ன செய்யச் சொல்லி தொகை கொடுத்தார்களோ அதற்கான முயற்சியில் இறங்கி நாவல் எழுதுவதால் அந்த எழுத்து, அதை எழுதும் ஆசிரியரியனுக்கு நிம்மதியான எழுத்தாக இருக்குமா? நீ சொன்னதை நான் எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வி இருக்காதா? பணம் எழுத்தாளனுக்கு தேவை தான் என்று வைத்துக் கொண்டால் அந்த எழுத்திற்கு ஒரு நியாயத்தை கற்பித்து வரிசைப்படுத்தலாமா?

போக சொந்தப் பிரச்சனையை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்படும் வசவுகளையோ, அடிதடிகளையோ அவர்களோடு போட்டியிட முடியாத, வெல்ல முடியாத நிலையில் எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்தால் எழுத்தில் பக்கத்து வீட்டாரைபற்றி குறை சொல்லி எழுதி வைப்பதும் கருத்துச் சுதந்திமா? அது நியாயம் தான் என்று வாசிப்பாளனுக்கு தோன்றுமா?

எழுத்திற்கு நேர்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா? இல்லை வரும் காலத்தில் இவைகள் அடியோடு போய்விடுமா?

000

தனது அங்ஙாடி புத்தகத்தை வாசகனுக்கு ‘20% தள்ளுபடி’ என்று பூமணி ஸ்டாலில் அமர்ந்து கையில் திணிக்கவில்லை! சு.வெங்கடேசனும் அப்படிச் செய்யவில்லை. நாஞ்சில்நாடனும் அப்படி செய்யவில்லை! முந்தைய எழுத்தாளர்கள் அப்படி செய்ததாக கேள்விப்பட்டதுமில்லை! 

சாருநிவேதிதா இங்கு வருகையில் தன் புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவதாக முன்பே சொல்லி விட்டு வந்தார். அவரிடம் அவரது புத்தகங்களை ஏற்கனவே வீட்டில் வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தும், ஸ்டாலில் இருந்து புதிதாக வாங்கியவர்களும் வந்து நீட்டி அவரின் கையெழுத்தை பெற்றுக்கொண்ட காட்சியை நான் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு எழுத்தாளனாக புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவதில் மகிழ்ச்சியடைந்தேன். 

புத்தகம் ஒரு பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்ட பின் அதன் விற்பனை சார்ந்த விசயங்களை பதிப்பாளர் அறிவார். அவருக்குத் தெரியும் அது விற்றுமுடிய இவ்வளவு காலம் ஆகும் என்று. ஒரு மினிமம் கேரண்டி எழுத்தாளரின் எழுத்தைத் தான் பதிப்பித்து இருக்கிறோமென தெரிந்து தான் அவர் புத்தகத்தை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறார். 

இதன் நீட்சி எங்கு போய் முடியும் என்று உங்கள் பலருக்கும் தெரியும் தானே நண்பர்களே! இருந்தும் ஒரு விளம்பரம் ஒரு பொருளுக்கு தேவைப்படுகிறது அல்லவா! ஆகவே நாம் புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் அந்த குளிர்பானத்தை வெய்யில் சீசன் என்பதால் அருந்தி மகிழ்வோம்!

000

ஆபரேஷன் நோவா-படித்த புத்தகம்

$
0
0

தமிழில் அறிவியல் கதைகளை வாசித்தது முன்பாக சுஜாதாவின் கதைகள் வழியாகத்தான். அறிவியல் கதைகளை அவரால் எளிதாக எழுத முடிந்தது. தமிழில் சரித்திரக் கதைகளைக் கூட எழுதுவதற்கு ஆட்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அப்படி அறிவியல் கதைகளை எழுத யாரும் முன்வராததற்கு அறிவின்மை என்பதே காரணமாக இருக்க வேண்டும். ராஜேஷ்குமாரின் நாவல்கள் பல அறிவியல் கதைக்களன்களை கொண்டிருப்பதாக நண்பர்கள் சொல்ல இப்போது அறிகிறேன். அவைகளில் சிலவற்றை சீக்கிரம் பிடித்து விடுவேன். இது போக வாசிக்க கையில் 6174 க. சுதாகரின் நாவல் இருக்கிறது.

தமிழ்மகன் எழுதிய ஆப்ரேஷன் நோவா பற்றி அ.முத்துலிங்கம் அருமையான அணிந்துரை வழங்கியிருக்கிறார். அது நாவலுக்குள் நாம் நுழைய போதுமான விளக்கங்களைத் தந்து விடுகிறது. வாசிக்கையில் அப்படியே சுஜாதாவை வாசிப்பது போன்றே இருந்தது நாவல் முடியும் மட்டும். சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாத அறிவியல் புதினம் இது. இடையிடையே நக்கலும் நையாண்டியுடனும் அப்படியே அவரின் பாணி!

விஞ்ஞானக் கதைகளை வாசிக்கையில் ஒரு விதமான மலைப்பு வாசகனுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில் அவைகள் எளிதில் நம்மோடு ஒட்டுவதில்லை. அதுபற்றித் தெரிவதும் இல்லை. விஞ்ஞானக்கதைகளை வாசிக்கையில் வாசகன் அந்தந்த இடத்தில் தானும் இருப்பதாக நினைத்துக் கொள்வதும் நடப்பதில்லை. அது தான் இந்த நாவலிலும் நடந்திருக்கிறது.

 000


புத்தகப் பார்வைகள் சில!

$
0
0

எனது இந்தப் பக்கத்தில் அவ்வப்போது நான் வாசித்த புத்தகங்களுக்கு எழுதிய சிறு குறிப்புகள் அனைத்தையும் இந்த லிங்க்கில் நீங்கள் ஒரு பார்வை பார்த்துக் கொள்ளலாம்! இந்தப் பணி தொடரும் இனிமேலும்!

http://www.pratilipi.com/vaa-mu-komu/puthaga-parvai

கவிதையை தொகுதியாக வாசிக்க!

$
0
0
http://www.pratilipi.com/vaa-mu-komu/pudhu-kavidhai-thogudhi
ஐந்து பெயர் கொண்ட விலை மாது! என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை நீங்கள் இந்த லிங்கில் சென்று வாசிக்கலாம் நண்பர்களே!
000

காதல் கவிதைகளை வாசிக்கலாம்!

$
0
0

http://freetamilebooks.com/ebooks/devathainpoluthupoku/

இந்தத் தளத்தில் நீங்கள் டவுன்லோடு செய்து வாசிக்க நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல புத்தகங்கள் உள்ளன. அங்கு என் சிறு முயற்சியாக கவிதைகள் வடிவில் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் கவிதைகளாக ஆயினவா என்பது வாசித்த உங்களுக்குத்தான் தெரியும்! 
000

எருது -ஒரு பார்வை

$
0
0

உலகச் சிறுகதைகளை ஆங்கிலத்தில்வாசிக்கும் நண்பர்களைப் பெற்று ,எழுத்தாளனாய் வேறு நான் இருப்பது  ரொம்ப ஜீரணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. மரப்பல்லி நாவலை ஆரம்பித்தபோது நண்பர் சொன்னார்.. ’கேவெல்லாம் அங்க எழுதி முடிச்சு புதுசுக்கு போயிட்டாங்க! இப்ப போயி மரப்பல்லின்னு லெஸ்பியன்களை பத்தி எழுதுறீங்களே? என்று நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜ் பேசினார். போக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் நாவல் இப்படி பயணிக்கிறதென சொல்லிக் கொண்டே செல்கையில் வறக்கிணறு அருகில் தென்படுமா என்று தேடிக் கொண்டிருந்தேன் குதிக்க! இருந்தும் ஆங்கில வாசிப்பிற்கு செல்லாமலிருப்பதும் நல்லது தான். அங்கிருந்து ஐடியாக்களை சுட்டு மசக்காளிபாளையத்தில் அப்படியாக்கும் என்று எழுதாமல் இருக்கிறேனே!

அவ்வப்போது உலகச் சிறுகதைகளை சிற்றிதழ்கள் வாயிலாக முன்பெல்லாம் வாசித்ததோடு சரி. ஆனால் அப்போது மிக முக்கியமான சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்து முடிந்த அளவு சுத்தமான மொழிபெயர்ப்பாக வெளியிட்டார்கள். அந்த வகையில் சிற்றிதழ்களின் அர்ப்பணிப்பு என்பது மிகப் பெரிய விசயம். மீட்சி, ங், கல்குதிரை போன்ற இதழ்கள் (இப்போதைக்கி ஞாபகம் வந்தவை) 90-களில் மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கென இயங்கின. பிரம்மராஜன் போர்ஹேவை தமிழுக்கு கொண்டு வந்தார். (இன்னமும் முழுதாக முடிவேனா? என்கிறது) அது மொழிபெயர்ப்பாளரின் பிரச்சனையாக இருக்காது என்று தான் நம்புகிறேன்காப்காவின் விசாரணையை 92-ல் வாங்கி வைத்து இன்னமும் பத்து பக்கத்தை தாண்ட இயலவில்லை. ஆக இதெல்லாம் என் குறைபாடு தான். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகளை இரண்டு நாளில் முடித்து விட்டதற்கு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியான விசயங்களை தொடர்ந்து மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் வாசிப்பாளர்களே உணர்வர்.

சீன எழுத்தாளர்  மோ யானின், எருது சிறுகதை தொகுப்பின் மிக முக்கியமான பலமான கதைசீனாவின் கலாச்சாரப் புரட்சி காலகட்டங்களில் நினைப்பதை வெளியில் பேசி விடாதே! என்ற அம்மாவின் அறிவுரையையே தன் புனைப்பெயராக அவர் வைத்து எழுதிய தகவல் அவர் பற்றியான குறிப்பில் வருகிறது. இது கதையை விட !!! மோ யான் என்றால்பேசாதேஎன்று பொருளாம்!

தந்தைக்கும் மகனுக்குமான உறவை அப்படி அழகாகச் சொல்லிக் கடக்கிறார் இந்தக் கதையில்.  தந்தை அவமானப் படுகையில் சிறுவனாக இருந்தாலும் கொந்தளிக்கும் உணர்வுடையவனாக மகன்  அப்பாவின் மெளனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்எல்லாக்குழந்தைகளுக்கும் தன் அப்பா ஒரு மிகச்சிறந்த நாயகர் என்றே தான் தோன்றும். அது இயல்பு தான். அவர்கள் அருகில் இரவு முழுதும் அடக்கி வைத்திருந்த சிறுநீரை லாவோ லான்  பெய்கையில் தந்தை அமைதியாகவே அமர்ந்திருக்கிறார்கடைசியாக லாவோ லானை எருது முட்டி விட துரத்துகையில் சிறுவனின் தந்தை அதன் கவனத்தை ரூபாய் நோட்டுகளின் மீது செலுத்துமாறு செய்து அதன் முதுகில் தாவி அதன் மூக்கில் தன் விரல்களை நுழைத்து அதன் மூக்கணாங்க கயிற்றைப் பற்றி மேல் நோக்கி இழுத்து அடக்குகிறார்.  மீண்டும் அப்பா ஒரு திறமைசாலி என்றும் தன்மீதான அவமானத்தை துடைத்தெறிந்து விட்டார் என்றும் மகன் நினைக்கிறான். இருந்தும் கடைசியில் அப்பாவும் லாவோ லானும் கைகலப்பில் ஈடுபடுகிறார்கள். அது இரண்டு எருதுகள் மோதிக் கொள்வது போன்றே அமைகிறது!

இக்கதை வாயிலாக சீன கிராமிய வாழ்வு கண்ணுக்கு முன் விரிகிறது! சிறிது நேரமே கதைக்குள் வரும் சிறுவனின் அம்மா யாங் யூஷென் தன்குடும்ப வாழ்வை  நகர்த்தும் விதம் கொண்டு கிராமிய பெண்களின் நிலைமை தெரிய வருகிறது.

வால்வோ என்ற கதை ரவுடியிசத்தை சொல்ல வருகிறது. ஒரு இடத்தில் பேசப்படும் ரவுடியின் ஆடம்பர வாழ்க்கையெல்லாம் சில காலம் மட்டுமே! அவன் மற்றொரு ரவுடியால் சிதைக்கப்படுவான் என்பதை கூற வந்த கதை. கதையாசிரியர் எட்மண்டோ பாஸ் சோல்டன். பொலிவியாவின் முக்கிய எழுத்தாளர். இந்த மொழியிலிருந்து ஒரு கதையை இத்தொகுப்பில் தான் முதலாக வாசிக்கிறேன். இஸ்ரேல் எழுத்தாளர் எட்கர் கெரத்தின் டாட் என்கிற கதை கதையை எழுதுபவரின்  சங்கடங்களைச் சொல்கிறது.  ’எனது நண்பன் டாட் பெண்களை அவனது படுக்கைக்கு அழைத்து வர உதவும் கதையொன்றை அவனுக்காக எழுத வேண்டுமென விரும்புகிறான்!’ என்றே இக்கதை துவங்குகிறது. சிறந்த கதையாக இதை கூற முடியாது என்பதே உண்மை!

ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே வின்  கவிஞன் என்கிற கதை  இசைக்காகவும் கவிதைக்காகவும் தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டவனின் கதையை தொல்கதை சாயலில் சொல்கிறது.

அமெரிக்க எழுத்தாளரின் சட்டமிடப்பட்ட சாளரம் , வேல்ஸ் எழுத்தாளர் ரைஸ் ஹ்யூக்ஸ்சின் கல்லறை சாட்சியம் இரண்டும் என் வாசிப்பிற்கு ஏற்ற ஆச்சரியப்படுத்தும் கதைகளாக அமைந்து விட்டன! அதிலும் கல்லறை சாட்சியம் கதை என்ன தான் சொல்ல வருகிறது என்று இன்னமும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். அது ஒன்றும் சொல்லா விட்டாலும் முன்பாக ஸ்பானிஷ் எழுத்தாளர் ஃபெர்னாண்டோ ஸோரண்டினோவின்ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்கிற சிறுகதை  தந்த ஆச்சரியத்தை தந்தது. அதாவது,புரியாவிட்டாலும் ரசித்து விடு! என்பதே அது.

மொழிபெயர்ப்பு தொகுப்பு வாயிலாக களமாட வந்திருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனை வரவேற்கிறேன்!

எருது (உலகச் சிறுகதைகள்) எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259 226012. 98650 05084.

000


ஆகாசமாடன் -சிறுகதைகள் ஒரு பார்வை

$
0
0

சிறுகதைகள் பல வித யுக்திகளால் கையாளப்பட்டு பல வித வடிவங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆகாசமாடன் தொகுதியில் இருக்கும் கதைகளும் அப்படித்தான். வடிவ நேர்த்தி என்ற ஒன்றை விஞ்சி வேறு ஒரு வடிவத்தில் நமக்கு பழக்கமான கதைகளே திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. கறுத்தடையான் கவிஞராகவும் இருப்பதால் கதைகள் சொல்கையில் கூட கவித்துவம் அங்கங்கே நுழைந்து விடுகிறது. சில கதைகளை அவர் இப்படித்தான் நான் சொல்வேன் நீ படி! என்று வாசகனிடத்தில் பேசுகிறார்இப்படியான எழுத்து வடிவத்தை கைக்கொள்வதற்கு அவர் ஏராளமான புத்தகங்களை வாசித்து தாண்டி வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. எழுத்தை சரளமாக எடுத்து வீசுகிறார்.

கடும்பு என்ற கதை அலைபேசி பேச்சிலேயே முடிகிறது. நாயகன் மூன்று பெண்களிடம் வெகு விரைவாக பேசி முடிக்கையில் ஒரு அப்பட்டமான வாழ்க்கை பதிவாகி விடுகிறது. மணல் வீடு இதழில் வெளிவந்த வேசடை கதை அப்படியே ஹரிகிருஷ்ணன் கதையை வாசித்தது போன்ற அமைவில் இருக்கிறது. பச்சோந்தியுடல் மாறியவன் தொகுப்பில் திருநங்கை பேசும் கதையாக ஏற்கனவே சொல்லப்பட்டு சலித்துப் போன விசயங்களை  விரைந்து சொல்லி வேறு விதமாய் முடிவடைகிறது. “என்னுடைய கவனிப்பை ஒரு கைக்குழந்தையாய் இடுப்பில் தூக்கிச் செல்கிறாள்!” ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வழியே நிறைய மனித மரங்களையும், கான்கிரீட் மனிதர்களையும், குழந்தைப் பூக்களையும்காண முடியுமென நினைக்கிறான். புதிய வரிகள் இந்தக் கதையில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

பால் சிறுகதை ஒரு பெண் தனக்கானவனிடம் பிரிந்து விடுவதைப் பற்றிப் பேசுவதிலிருந்து துவங்குகிறது! தொகுப்பில் மிக எளிமையான கதை என்றாலும் கூர்மையான சமகாலக் கதைஅது இப்படி முடிகிறது.. ஐஸ்கிரீமில் பால் சேர்க்கப்படுகிறது. பாலில் ஐஸ்கிரீம் சேர்க்கப்படுவதில்லை. பிறகென்ன அன்றும் கைத்துட்டு காலியானது வழக்கம் போலவே!

மூன்று கண்கள் சிறுகதை ஒரு வடிவ முயற்சி தான். ரன் ரோலா ரன் என்ற ஆங்கிலப்படம் போன்றே! முதற்கண் கணவனின் கண்ணிலிருந்து (அதாவது பார்வையிலிருந்து), நடுக்கண் புது மனைவியின் கண்ணிலிருந்து சொல்லப்படுவதாகவும், அறையின் ஜன்னல் திறந்திருப்பதால்  ஒரு இடுக்கண்.. பார்வையாளரால் சொல்லப்படும் பகுதியாகவும் அமைந்து வாசகனை அடடே! போட வைக்கிறது!

முடிவின் ஆரம்பம் மின் தொடர் வண்டியில் நடைபெறும் சம்பவத்தை சொல்ல வருகிறது. நிஜமாகவே முடிவில் தான் கதையே துவங்குகிறதுஇளநீரின் கடைசி மிடறை உறிஞ்சிக் குடிப்பது போல குடித்தான்முத்தத்தின் அழுத்தத்தை ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவும், உடனே நினைவுக்கு கமல்ராசின் முத்த முயற்சிகளும் ஞாபகம் வந்து போனது எனக்கு மட்டும் தானா?

பொஸ்தகம் சோறு போடுமால! ன்னு கேக்கும் அம்மாவுக்கும், கேக்காம போயிட்ட அய்யாவுக்கும், என்று புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார். இம்மாதிரியான இலக்கியக் கதைகள் சோறு போடாது என்றே சொல்லலாம். பேர் பெற்றுக் கொள்ளலாம் என்றால் அதை வைத்து ஓரமாய் அமர்ந்து தலை மயிர் ஒன்றிரண்டை பிடுங்கி நீளத்தை அளந்து கொண்டிருக்கலாம்!

2013 ஏப்ரலில் வந்த தொகுதியை தாமதமாக வாசிக்கக் காரணம் நண்பர்கள் வாசித்து முடித்து விட்டு திரும்ப கால தாமதம் ஆனது தான்.


வெளியீடு - மணல்வீடு,  (எனக்கு வந்த பிரதியில் விலை காணப்படவில்லைபேச -98946 05371.

000 

நொங்கு வேர்க்குருவுக்கு மருந்து!

$
0
0

நொங்குதின்னவன்ஒருத்தன்போயேபோயிட்டான்! நோண்டித்தின்னவன்கடைசியில்அகப்பட்டுட்டான்! –பழமொழிஒருகாலத்தில்.
பனைகளின்அழிவுக்குப்பிறகும்ஆங்காங்கேநொங்குவிற்பனைசாலையோரங்களில்நடந்துகொண்டுதான்இருக்கிறது. நான்நினைக்கிறேன்இவைகளைஎன்னகேரளத்திலிருந்தாஇறக்குமதிசெய்துகொண்டுவந்துசாலையில்போட்டுவிற்கிறார்கள்? பனங்கிழங்குஒருகாலத்தில்இசிபட்டுக்கிடந்தது. இருக்கும்கொஞ்சம்மரத்திலிருந்துநொங்குவேண்டுமெனநொங்கியபிறகுகிழங்குக்குவழியில்லை!

வீட்டின்சட்டகங்களுக்குபனைமரக்கைகள்ஒருகாலத்தில்பயன்படுத்தப்பட்டன. அவைகளில்கரையான்கள்ஏறுகின்றனஎன்றுஇரும்புக்குழாய்களுக்குவந்துவிட்டோம்.

தோட்டங்களில்இருந்தகிணறுகளில்தண்ணீர்இல்லாமல்போனதால்தென்னைகளைஇழந்தவர்கள்தங்களிடமிருந்தநிலத்தைஏக்கராவுக்குஇவ்வளவுஎன்றுவிற்றும்விட்டார்கள்.

ஆகவேசீக்கிரம்உங்கள்குழந்தைகளுக்குநொங்குவாங்கிக்கொடுங்கள்! அப்படின்னாஎன்னடாடி? என்றுகேட்காமல்இருக்க!




இரவுக்கழுகாரின் காமிக்ஸ்.

$
0
0


டெக்ஸ் வில்லரின்,  சிகப்பாய் ஒரு சொப்பனம்!”


காமிக்ஸ் வெறியர்களை எனக்கு சிறுவயது முதல்கொண்டே தெரியும். கோவையில் ஒருவன் தன் இல்லத்தில் காமிக்ஸ் பலவற்றை வைத்துக் கொண்டு ஊருக்கே பத்துப் பைசாவுக்கு ஒரு நாள் வாடகைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அன்று காமிக்ஸ் ஒரு ரூபாய் விலை தான்பத்துப்பேருக்கு கொடுத்தான் என்றாலே போட்ட முதல் கிடைத்து விடும். அவனிடம் பள்ளி விடுப்பு மாதத்தில் பைசா கொடுக்காமல் தூக்கி வந்து வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் என்னிடமும் அவனிடமில்லாத காமிக்ஸ் மற்றும் மாயாஜால புத்தகங்கள் இருந்தனஅவைகளை பண்டமாற்று முறையில் கொடுத்து வாசித்தேன். அவைகள் என்னிடம் இருக்க காரணம் என் அப்பிச்சி.

அவர் இந்துநேசன் நாவலில் இருந்து காமிக்ஸ் வரை கைக்கு கிடைப்பதை வாங்கி வாசிப்பவர். அவர் ராணுவத்திலிருந்து வெளிவந்து கோத்தகிரி மில்லில் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்தவர். இன்று மில்லும் இல்லை அவரும் இல்லை. காமிக்ஸில் மஞ்சள் பூ மர்மம் கதையை இன்றும் பேசுகிறார்கள். அதை நான் வாசித்திருந்தாலும் இப்போது நினைவில் இல்லை

இன்று சிறுவர்கள் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்திற்கு வரவே இல்லை. அவர்களுக்கு வேறு விதமான பொழுது போக்கு அம்சங்கள் பெருகி விட்டனபள்ளியின் பாடப்புத்தக வாசிப்புக்கு இணையாக போரான ஒன்றாக நினைக்கிறார்கள்அவர்களுக்கு மொபைல் போன்களில் விளையாட விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன.

சரி யார் தான் இப்போது காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்று பார்த்தால் அதே பழைய காமிக்ஸ் ரசிகர்கள் தான். இப்போது லயன் காமிக்ஸ் நிறுவனம் விலையைப் பற்றி கவலைப்படாமல் உயர்தர தாளில் வர்ணத்தில் புத்தகங்களை கொண்டு வருகிறது. அவைகள் மார்க்கெட்டில் உடனடியாக தீர்ந்தும் விடுகின்றது. வர்ணத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் வாசிக்கின்றன என்ற உண்மையை நானே நம்ம பயலை வைத்து கண்டறிந்தேன். கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் புத்தகங்களை வாசித்துப் பழகிய எனக்கு வர்ணம் ஒரு ஒவ்வாமையை தருகிறது என்பேன்அதில் ஒரு திருப்தி இல்லை.

பழைய காமிக்ஸ் ரசிகர்களே கண்ணில் தென்படும் புத்தகங்களை வாங்கி யாரேனும் கண்ணில் பார்த்தால் சிரிப்பார்களோ? என்ற பயத்தில் வீட்டில் வாசிக்க பழகியிருக்கிறார்கள்காமிக்ஸ் புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை எந்த வகையிலும் விளக்க முடியுமா? என்றால் அது முடியாதெனத்தான் தோன்றுகிறது. அது நிஜமாகவே ஒரு வகையான ஈர்ப்பு என்றே சொல்லலாம். காமிக்ஸ் புத்தகங்களை பிண்டு செய்து பாதுகாத்து வைத்தவர்களின் இறப்பால் அவைகள் பல பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போடப்பட்ட விசயங்களே நடந்தன.

என்னிடம் என் அப்பாவின் புத்தகங்களூக்கு இணையாக இரண்டு பெட்டிகளில் காமிக்ஸ்கள் இருந்தன. ராணிகாமிக்ஸ் ஆரம்பித்த காலத்தில் ஒரு இதழ் விடாமல் நான்கு வருட சேமிப்பு இருந்தன. இன்று வளைதளத்தில் சில பழைய புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றனஇப்பொழுது இரண்டு வருடகாலமாக டெக்ஸ் வில்லரின் புத்தகங்களை மட்டும் என் நண்பர் வருகையில் பெருந்துறையிலிருந்து அழைத்துச் சொல்வார். சென்று வாங்கி வரும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலங்களில் இரும்புக்கை மாயாவி புத்தகங்கள் என்றால் அப்படி விழுந்தடித்து சென்று வாங்கி வந்து வாசித்தவனுக்கு அவரின் கடைசிக் கதையை இரண்டு வருடம் முன்பாக ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு லயன் வெளியீட்டில் வாசித்த போது,அட சைத்தானே! என்றே தோன்றியது. அது அவ்வளவு போர். மீண்டும் வாசிக்க இயலாதோ காமிக்ஸ்களை என்று பயந்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேறு காமிக்ஸ் ரசிகர் என்று எங்கோ படித்தேன்கடைசிக்கு லக்கி லுக் என்னால் வாசிக்க இயலாவிடினும் பயலுக்காக பிடித்து விடுவது நடந்து விடுகிறது. வாசிப்பை பயல்களுக்கு மெதுவாகத்தான் நுழைத்து பயிற்சி கொடுக்க வேண்டும். முன்பெல்லாம் செல்ப்பில் இருக்கும் புத்தகங்களை என் தந்தையாரே வாசிக்க கொடுத்ததில்லை. நானாக வாசித்துப் பழகியது தான்.

ஆக நம்பயல் இறுதியாக தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டான். வர்ணத்தில் இருந்தால் மட்டுமே வாசிக்க இயலும் என்று. காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனை பரவலாக இலக்கிய அந்தஸ்து போல இப்போது ஆகிவிட்டது. இலக்கிய வாசிப்பாளர்கள் தொடர்ந்து காமிக்ஸ்களை வாங்குகிறார்கள். இது எதுக்கு வெட்டியா!? என்று காமிக்ஸ் ஸ்டாலை கடந்து அவர்கள் செல்வதில்லை. சென்ற வருடம் வியட்நாமிய போர்க்கால சம்பவங்களை வைத்து வர்ணத்தில் ஒரு புத்தகம் லயன் காமிக்ஸ் கொண்டு வந்தது. அது இலக்கிய வாசிப்பாளர்களை கவர்ந்தது நினைவிருக்கலாம்.

டெக்ஸ் வில்லரின் கதைகள் துப்பாக்கிச் சத்தங்கள் நிறைந்தது. இவரைப்பற்றி விளக்கமாய் சொல்ல நான் கூகிளில் தேடி எடுத்து சொல்லிப்போகும் எழுத்தாளனல்ல! சிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் வில்லர் அண்ட் கோ இணைந்து செவ்விந்தியர்களின் கொட்டத்தை அடக்கும் கதை. வழக்கமாக எல்லாமே அப்படித்தான் என்ற போதிலும் இந்தக் கதை செவ்விந்தியர்களும் அவர்கள் பிரிவில் இருக்கும் பல குழுக்களும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட இறங்கும் கதை. அதற்காக அவர்கள் துப்பாக்கிகளின் தேவையை உணர்ந்து கள்ளத்தனமாக சேகரிக்க இறங்கிய கதை.

தமிழில் துப்பறியும் நாவல்கள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறி மாறி வருவது போன்று டெக்ஸ்வில்லரும் அவரது உதவியாளன் டைகரும் ஒருபுறம் கிளம்ப, மறுபுறம் இரவுக்கழுகாரின் மகனும் அவன் மாமா கிட் கார்சனும் பயணப்பட கதை இருதிசையில் பயணிக்கிறதுகீழே வைக்க முடியாத விறுவிறுப்பு ! ஹூவால்பை மலைப்பகுதி செவ்விந்தியன் தேவதையோடு பேசி மக்களை ஒருங்கிணைப்பது என்பதெல்லாம் திரைப்பட பாணியே தான். ஆக ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்து ரசித்த நிறைவை நாம் அடைகிறோம்!

இரவுக் கழுகாரே! உம்மை சிலகாலம் வாசிக்கலாம் தான்.

-வா.மு.கோமு.

000

தாய்ப்பால் இங்கே கசக்கிறது -ஒரு பார்வை

$
0
0

உழைப்பு, நேர்மை, தாய்ப்பாசம் இவைகளோடு தான் கிராமம் கிராமமாக முன்பொருகாலத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது என்று நம் பிந்தைய தலைமுறையினர் வாசிக்கப் போகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் நாம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. முதியோர் காப்பகங்களின் எண்ணிக்கை அதை நிருபணம் செய்யும். நேர்மைக்கு இன்னமும் காப்பகங்கள் உருவாகவில்லை.

தாய்ப்பால் இங்கே கசக்கிறது.. என்கிற புத்தகம் என் கைக்கு வந்து மாதங்கள் பல ஓடி விட்டன. இது என்னிடம் வருவதற்கு இந்த மண்ணின் எழுத்து என்கிற ஒரே காரணம் தான்கதைகளை ஆண்கள் எழுதுவதற்கும் பெண்கள் எழுதுவதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆணிற்கு சேவகம் செய்ய (காதலோடு) பெண் எந்த சமயமும் காத்திருக்கிறாள் என்றும், அதற்காக அவன் கொஞ்சம் (காதலாய்) பெண்ணிடம் பாசத்தை விதைத்தால் போதுமென்றும் பிரபல பெண் எழுத்தாளரின் நாவல்கள் இன்னமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

அது வாசகர்களால் விரும்பப்பட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெண்ணானவள் அதிகபட்சம் ஆணிடம் கோபம் கொண்டால் துணிமணிகளை பேக் செய்து காப்பகங்களுக்கு நடையைக் கட்டிவிடுகிறாள். ஆணானவன் மனைவியின் அருமையை உணர்ந்துதாடி வளர்த்து தேடிச் சலித்து கடைசியாக  காப்பகத்தில் அவளைப் பார்த்து கட்டியணைத்துக் கொள்கிறான்.

இந்த வகையான நாவல்கள் தொடர்ந்து பெண்களால் பெண்களுக்கென்றே எழுதப்படுகின்றன. வாசிக்கும் பெண்களின் மணவாழ்க்கையோ நாவலை விட நேர் எதிராகா இருக்கிறது. தாலி கட்டிக் கொண்டதற்காய் வாழ்க்கையை எந்த வித கொந்தளிப்புமில்லாமல் அதன் போக்கிலேயேகழிக்கும் பெண்கள் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கென்ற கற்பனை உலகை நாவல்கள் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் புத்தக வாசிப்பை முடித்துக் கட்ட நாடகங்கள் வந்து காலம் பல ஆகிவிட்டன. வாசிப்பு சுவையை அறிந்த சிலரே அதை தொடருகின்றனர். இதில் எழுத்துக்கு வரும் ஒரு சிலரும் (வாழ்க்கையை அப்படியே கண்ணாடியாய் எழுதும்) ஒன்றிரண்டு புத்தகங்களை போட்டுவிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

நல்ல எழுத்தை எழுத வந்த பெண்கள் ஏன் திடீரென காணாமல் போய் விடுகிறார்கள்? என்ற ஆராய்ச்சியெல்லாம் வீண். அவர்கள் அந்த சிலவற்றை கொடுக்கும் அளவிற்கேனும் இருந்தார்களே என்று ஓரளவு திருப்தி அடைய வேண்டியது தான்முகநூலில் அங்கங்கு கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்த பெண்கள் இன்று பெண்கள் பத்திரிக்கையில் தொடர்கள் என்றும் கட்டுரைகள் என்றும் எழுத வந்து விடுவது காலத்தின் வேகம் தான். பத்திரிக்கைகள் பக்கங்களை நிரப்ப பெண் எழுத்தாளர்களை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நான்கு கவிதை எழுதிய பெண்ணை ஒரு போராளி அந்தஸ்துக்கு  உயர்த்தி நாட்டில் நடைபெறும் வன்முறைகள் பற்றி கருத்து கேட்டு பிரசுரிக்கிறது. (அது ஏன் என்றும் நண்பர் சொன்னார். இருக்கும் பெண்களில் கொஞ்சம் சுமாரா அவங்க தான இருந்தாங்க, பேண்ட் டீசர்ட் போட்டுட்டு)

எழுத்தில் நல்ல எழுத்து கெட்ட எழுத்து என்றெல்லாம் தரம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏதும் இங்கில்லை. அதே போல் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று கூட நாம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை, என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசங்களை பெயர்கள் தான் சுட்டிக் காட்டுகின்றன. எழுத்தானது ஒரே நோக்கோடு தான் எழுதப்படுகிறது. அது வாசகனுக்கு பல விசயங்களை சொல்ல வேண்டும் என்பதே! வாசகன் தனக்கு தெரிந்த விசயங்களையும், தெரியாத விசயங்களையும் அறிந்து கொள்ளவே புத்தகங்களை வாசிக்கிறான்.

சுரபி விஜயா செல்வராஜின் கதைகள் அனைத்தும் அம்மாவைப்பற்றி ஆழமாய் பேசுகிறது. அதுவும் பெற்ற மகன்கள் வாயிலாக. அம்மாக்களுக்கு மருமகள்களாக கதைகளில் வாய்ப்பவர்கள் எல்லோருமே தான் தன் சுகம் இவற்றைப் பற்றியே யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கை இங்கு இப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு மருமகளும் தன் கணவனின் அம்மாவைப் பற்றி பல இடங்களில் தூற்றிக் கொண்டே இருக்கிறார்கள்போக கதைகள் வழியாக அழிந்து கொண்டிருக்கும்கொங்கு கிராமிய வாழ்வு  சொல்லப்படுகிறது. மணல் திருட்டுக்கு ஒப்புக்கொள்ளாத படித்த இளைஞர்களும் இவர் கதைகளில் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அவர்களை பிழைக்கத் தெரியாத அப்பாவிகள் என்றே தான் தூற்றும். இவரது கதைகள் அனைத்தையும் துவங்கிப் படிக்கையில் ஒரு பதைபதைப்பு இறங்கிக் கொள்கிறது.

அம்மாவுக்கு இனி டாக்டர் தேவையில்லை என்கிற முதல் கதையை வாசிக்கையில் புற்று நோயால் அவதிப்படும் கிராமத்துஅம்மா  கண்ணுக்கு முன் வருகிறார். தன் மகன் எப்படியேனும் டாக்டரை கூட்டி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் வண்டிக் கொட்டகையில் கடைசிக் காலத்தை கழிக்கும் அம்மா. ‘இந்த ஒரு வாட்டி ஊசி போட்டு வலி நின்னுடுச்சுன்னா  அந்த தெம்புலயே கவுத்தக் கிவுத்த போட்டுட்டு போயிடறேன்என்று கையெடுத்து கும்பிடும் காட்சி வாழ்ந்து முடித்த அம்மாவின் சீரழிவைச் சொல்கிறது. ஒரு ஆறேழு வருட காலமாக இப்படியான துக்கம் சொல்லும் கதைகளை நான் வாசிப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன்.

வேதனைகளைச் சொல்லும் கதைகளை வாசிக்க தனி மனநிலை வேண்டும். இல்லையென்றால் படித்து விட்டோ, அல்லது நடந்த விசயத்தை கேட்டு விட்டோ உச்சுக் கொட்டி விட்டுத் தான் செல்ல முடியும்அதே போல் வேறொரு கதையில்இன்னொரு அம்மா  உடல்நிலை மோசமாகி சிரமப்படும் நிலையில் மாமனாரால் வாங்கி தரப்பட்ட காரின் சாவியை மனைவியிடம் கேட்கும் மகன் வருகிறார். அவருக்கு சாவியை மனைவி தருவதில்லை. அம்மாவை பேருந்திலேயே அவர் அழைத்துச் செல்கிறார். இதுவெல்லாம் அடங்கி ஒடுங்கி வாழ்தல் என்கிற வாழ்க்கை முறைமைக்கு பழக்கப்பட்டுப் போன கணவர்களின் நிலையைச் சொல்ல எழுதப்பட்ட கதைகள்.

மனசு என்கிற கதை தன் கணவரின் அம்மாவிடம் ஓரளவு பாசமாய் இருக்கும் மருமகளைச் சொல்கிறது. இவரின் கதைகள் அனைத்துமே குடும்பம் என்ற கட்டுக்குள் மிகச் சரளமாக பயணிக்கின்றன. எப்போதுமே தன்னைப் பார்க்க வராத மகனுக்காக கோழி வளர்த்தும் அம்மா, அதை விலைக்கு கேட்கும் பெண்ணிடம் கூட, மகனுக்காக அது! என்றே சொல்கிறார்மனைவி அமைவதெல்லாம் என்கிற கதையில் மனைவி தன் கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள்.

கலைச்சாலும் பொம்பள, காப்பர் டி போட்டாலும் பொம்பள, ஆப்பரேசன் பண்ணிக்கிட்டாலும் பொம்பள, மாலா டி மாத்திரையை முழுங்கினாலும் பொம்பள, ஏன் ஆம்பளைங்க செஞ்சுக்க கூடாதா?” இந்தக் கேள்வி படிக்கும் வாசகர்களை கொஞ்சம் நேரம் அந்தப் பக்கத்திலேயே நிறுத்தி விடும் என்றே படுகிறது. பார்க்கப்போகையில் இன்னமும் இது இப்படித் தானே நடந்து கொண்டே இருக்கிறது! எவ்வளவு விளக்கம் மருத்துவர் சொன்னாலும் நரம்பு போச்சுன்னா போச்சு! என்ற நம்பிக்கையில் தான் ஆண் இருக்கிறான். போக பெண்களும் இரண்டு ஆனதும் கையோடு மருத்துவமனையில் அதையும் சேர்த்தே முடித்துக் கொண்டு வீடு வந்து விடுகிறார்கள். இதை எந்த ஆணும் அவருக்கு சொல்வதில்லை. பெண்ணின் பெற்றோரே அது தான் சிறப்பென முடிவெடுத்து விடுகிறார்கள். காலம் போகிற போக்கில் மகள் இன்னும் ஒன்றை பெற்றுக் கொள்ள அவட்டையில்லாமல் இப்பவே ஈக்குமாத்து குச்சி கணக்கா போயிட்டாளே! என்ற கணக்கோ என்னவோ! போக இந்த விசயத்தில் ஆணுக்கு ஒன்றும் தெரியாது, அது ஒரு பெப்பலத்தான்!  என்ற பெண்களின் முடிவு தான். (இது கிராமிய நிகழ்வு)

உயிருள்ள பொம்மைகள் கதையில் ஒருபழமை வேடிக்கை கதை வருகிறது. கொடுமைக்கார மாமியார் ஊருக்கு போஒயிருந்த சமயத்தில், கோழிக்கறிக்கு ஏங்கிக் கொண்டிருந்த மருமகள் அவசரமாய் மாமியார் வருவதற்குள் சமைத்து அதை சாப்பிட உட்காருகையில் மாமியார் வந்து விட பயந்து போன மருமகள் அப்படியே சட்டியோடு தூக்கிப் போய் புற்றுக் கண்ணுக்குள் ஊற்ரி விட்டு வந்து விட்டாளாம். அடுத்த நாள் காலையில் அந்த இடத்தில் நிறைய காளான்கள் புடைச்சிருந்துச்சாம்! அதனால் தான் அதற்கு கோழிக்கறி போல வாசமும், ருசியுமாம்! இதை நான் இப்போது தான் கேள்விப் படுகிறேன்.

போக புத்துக்கண்ணில் கூட்டமாய் கேளான்களை பிடுங்கிய நிகழ்வு தான் எனக்கு அறிமுகம். கிராமத்தில் தொடர் மழையால் காலை நேரத்தில் ஆண்களும் பெண்களுமாக காடு காடாய் அலைவார்கள் காளான் தேடி. அவர்கள அனைவருமே முதலாக சென்று பார்ப்பது புத்துக் கண்ணுகளைய்த் தான். கிடைச்சா ஒரே இடத்துல அள்ளிட்டு வந்துடலாம்ல! ஆனால் இப்போது பெய்யும் மழைக்கு புத்துக்கண்ணு பக்கம் ஈசல் கூட கிளம்புவதில்லை.

சின்ன மனுஷி.. பெரிய மனசு! சிறுகதை கோவை ஞானி தன் தமிழ்நேயம் இதழில் வெளியிட்டிருப்பார் போலிருக்கிறது. சிறுகதைகள் சிறுகதையாகவே அப்பட்டமாக இருப்பதை அவர் வரவேற்கிறார் என்றே படுகிறதுநெல்மணிகளை வைத்து பெண்குழந்தைகளை கொன்று விடும் பழக்கம் இருந்தாக ஒரு கதை சொல்கிறது. ஆண் என்பவனையே பெற்றெடுக்க பெண்ணும் ஆசைப்படுகிறாள் என்றே இந்த கதை வாயிலாக உணர முடிகிறது. முடிவை முன்பே யூகிக்க முடிவது தான் இந்தப் பழங்கதையின் குறை.

சுக்கையும் மிளகையும் வைத்து தான் பெண்கள் (அந்த)சமயங்களில்  தங்களின் வயிற்றுவலியை ஜமாளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதாக ஒரு கதை. அது கணவனின் இயல்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனைவியின் கதைசுயம் இழந்த சுயநலம் சிறுகதை படித்த கிராமிய இளைஞன் கவிதை எழுதிக்கொண்டு வாழ்க்கையில் சம்பாதிப்பதற்கான எண்ணமின்றி திரிகிறான். அவனுக்கு தன்மானம் என்ற ஒன்றே படிப்பினால் வந்தது தான் முடிவாக அம்மாவின் விருப்பத்திற்கிணங்க மாறுவதாக ஒரு சாதாரண கதை.

தொகுப்பில் மிக முக்கியமான கதை பாவச்சோறுஅதன் கடைசியில் எந்த பத்திரிக்கையும் வெளியிட்ட குறிப்பை காணமுடியவில்லைமற்ற பலகதைகள் அனைத்தையும் ராணி, தேவி போன்ற பத்திரிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. நல்லகதையை அல்லது கதையில் அரசியல் இருந்தால் பத்திரிக்கைகள பின்வாங்கிக் கொள்ளும் என்றே படுகிறது.

தொகுப்பில் பல எளிய கதைகள் உள்ளன. அவைகள் எழுதப்பட்ட காலம் ரொம்ப முந்தினவைகளாக இருக்கலாம். சிறுகதை வடிவங்கள் யுக்திகள் இப்போது மாறி விட்டன என்பதை ஆசிரியரே அறிவார்முதல்பதிப்பு 2014 மே மாதத்தில் தான் வந்திருக்கிறது. வாசிக்கவே முடியாத எத்தனையோ தொகுப்புகளுக்கு மத்தியில் இந்த புத்தகத்தை நான் வாசிக்க மொழியே காரணமாகி விட்டது.

-வா.மு.கோமு

தாய்ப்பால் இங்கே கசக்கிறது - சுரபி விஜயா செல்வராஜ்.


விஜயா பதிப்பகம்- கோவை. விலை -80. பேச : 0422 - 2382614 / 2385614

000

சின்னக் குறிப்புகள்

$
0
0

நாயின் ஆயுள்காலம் 14 வருடங்கள் என்கிறார்கள். எந்த நாயையும் கணக்கு வைத்து வாழ்ந்ததை பார்த்ததில்லை. இதன் பெயர் ஜிம்மி. 14-வது ஆண்டில் கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. குட்டியாய் இருக்கையில் ஒருமுறை கையை கவ்வியுமிருக்கிறது. அடுத்தமுறை திங்களூர் செல்கையில் பார்ப்பேனா? என்பது சந்தேகமாகவும் இருக்கிறது.
வேறு குட்டியை இப்பவே வளர்க்கலாங்களே! என்ற போது அது தப்புங்க, இது பொக்குனு போயிரும்! என்கிறார்கள். இது போயிச்சேரட்டும்! குட்டிக்கா பஞ்சம்? என்ற போது இப்படியான இடத்தில் தான் வளர்ப்பு நாய் தன் முழு ஆயுள்காலத்தையும் வாழும், என்ற உண்மை புலப்படுகிறது.

000


000



000

எலி நாவல் ஒரு மதிப்பீடு

$
0
0

நாவல்கள் தமிழில் விதம் விதமாக எழுதப்படுவதை வரவேற்கவும், வாசிக்கவும் வாசகர்கள்  என்றுமே  ஆர்வமாகவும், காத்திருப்பிலும் இருக்கிறார்கள். எலி நாவலை நடுகல் பதிப்பகத்தில் கொண்டு வருவதற்கு முதலில் ஆர்வமாக இருந்தவர் இலக்கியச்செம்மல் வெளங்காதவன். முன்பாக என் பார்வைக்கு செல்வகுமார் பழனிச்சாமி இந்த நாவலின் முதல் அத்தியாயத்தை வாசிக்க அனுப்பி வைக்கையில் இதன் தலைப்பும், அந்த அத்தியாயமும் என்னை ஆச்சரியப்படுத்தின.

அதாவது கயிற்றில் நடப்பது மாதிரியான விசயம். இம்மி பிசகினாலும் வேடிக்கை கதையாகிவிடும் களம் இது. அந்த அத்தியாயம் எனக்கு இலக்கியப்பாங்குகளோடும், தத்துவச் சரடுகளோடும் இருந்ததாக தெரிந்தது. ஒரு விசயத்தை மிக எளிதாக மனதில் முடிவெடுத்து, ப்பூ! என ஊதித்தள்ளிவிடலாம் என்பது  போல எளிதாகத்தான் இருக்கும். இறங்கிப் பார்த்தால் தான் சிரமம் தெரியும்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு கிரிக்கெட் மீது அலாதிப் பிரியம். எந்த நேரமும் ஊமாங்கொட்டையுடனும், தென்னை மட்டையுடனும் இருப்பான். அவன் ஒரு தனி ஆட்டகாரன். அவனுக்கு பந்து பொறுக்கிப் போடக்கூட ஆட்கள் தேவையில்லை. அவனாகவே பாகிஸ்தான் பந்து வீச்சுகளை ஒரு பந்து விடாமல் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசுவான். அவனது பணி ஆடுகளை பத்திரமாய் காட்டில் மேய்ப்பது. அதை அவன் ஒன்றும் மேயச் சொல்வதுமில்லை. ஆடுகள் அதுபாட்டுக்கு புற்களை மேய்ந்து வயிற்றை நிரப்பிக் கொள்ளும் என்பது அவனுக்கு தெரியும். இவனுக்கு கிரிக்கெட் என்பது மட்டுமே டிவியில் பார்த்து ரசித்த விளையாட்டு.

ஊமாம்புரடையை கொஞ்சம் மேலாப்பில் இடது கையால்வீசிவிட்டு தென்னை மட்டையால் ஒரு சாத்து சாத்துவான். புரடை பறந்து காட்டின் எதாவது ஒரு இடத்தில் சென்று விழும். அருகே குவியலாய் ஊமாங்கொட்டைகள் கிடக்கும். அவன் வாயும் அந்த சமயம் சும்மா இருக்காது. ஆங்கிலம், இந்தி என்று கலந்து கட்டி உலறிக் கொண்டே இருக்கும். எக்ஸ்ட்ர கவர் கீத்ராகே பவுண்ட்ரி லைன்கே பகார்கே சார் ரன் கலியே! ஒரு புறடை தென்னை மட்டையில் படாமல் கீழே விழுந்தால் பேட்ஸ்மேன் அவுட்! இந்திய அணி பேட்டிங்கில் ஒரு புறடையையும் விடமால் சாத்துவான். பாகிஸ்தான் பேட்டிங்கில் கபில்தேவ் வீசிய பந்துகளை மட்டையில் அடிக்காமல் விட்டு அவிட்டாக்கி விடுவான். இது அவனுக்கான பெரும் விளையாட்டு! ஆடுகளுக்கு இவனைப்பற்றித் தெரியும். கிறுக்குப்பயல் என்று.

இதில் விசயம் என்னவென்றால் யாரையும் எதிர்பார்க்காமல் தனி ஒருவனாய் பலத்த கரகோசத்திற்கிடையில் 13 பேர் ஆடும் ஆட்டத்தை ஆடுவது. அந்த நண்பனின் பெயர் குட்டியான். குட்டியான் இப்போது பேத்தியை கொஞ்சிக் கொண்டிருக்கிறான் என்பது சம்பந்தமே இல்லாத உபரித்தகவல்.

எலி நாவல் எழுத்தாளன் மட்டுமே ஆடிய ஒரு விளையாட்டு. முன்பாக ஒரு சிறு குழப்பம் எனக்கு இருந்தது. யாருக்கானது இந்த பேண்டசி நாவல்? நாவலை முழுதாக நடுகல் வெளியிட்ட இவ்வளவு நாட்களுக்குப் பிறகு தான் வாசிக்கிறேன்இப்போது ஒரே அடியாய் அடித்து விடலாம். எலி நாவல் நிச்சயம் சிறுவர்களுக்கானது தான்தமிழில் சிறுவர் நாவல் எழுத ஆட்கள் குறைவு குறைவு என்று ஒரு கூப்பாடு இருக்கிறது. அதை இலக்கிய ஆசாமிகள் தான் கூச்சலாய் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து எந்தச் சிறுவனும் கூப்பாடு போடுவதில்லை.

சமீபமாக இந்தக்குறையைப் போக்க எஸ்.ராமகிருஷ்ணன் தன்னால் முடிந்த அளவு சிறுவர்களுக்கான குறுநாவல்களை எழுத முயற்சிக்கிறார்அவர் வெயிலைக் கொண்டுவாருங்கள் சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்த போதே நான் யூகித்திருந்தேன். இவர் சிறுவர் கதை எழுதலாமே! என்று. கொஞ்சம் தாமசமாய் செய்கிறார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு நாவலின் துவக்கத்திலேயே விடை கிடைத்து விடுகிறது. கடவுள் தான்  செல்வாவிடம் ஒரு சேலஞ்சை தருகிறார். அவர் செல்வாவிடம் புத்தகம் ஒன்றை கொடுக்கிறார். அதில் இவன் விரும்பும் உயிரினத்தின் பெயரை எழுதினால் போதும். அந்த விலங்கினமாக மாறி விடுவான். முதல் அரைமணி நேரம் மனித உணர்வுகள் அந்த விலங்கிற்கு இருக்கும். அடுத்த அரைமணி நேரம் அந்த விலங்காகவே சுற்ற வேண்டியது தான். மீண்டும் அரைமணி நேரம் கழிந்ததும் அந்த விலங்கிற்கு மனித உணர்வுகள் வந்து விடும். அப்போது மனிதனாக நினைத்தால் போதுமானது. மனிதனாகி விடலாம்.சரி இது எதற்காகா?

வீட்டில் பூஜையறையிலிருக்கும் ஐந்து ரூபாய் காசை எடுத்துச் சென்று திட்டமலை முருகன் கோவிலில் இருக்கும் உண்டியலில் சேர்ப்பிக்க வேண்டும். இது ஒரு போட்டிதான்செய்து முடித்து விட்டால் செல்வா ஒரு மகிழ்ச்சிகரமான மனிதனாக இவ்வுலகில் வாழலாம்

கதை வாயிலாக ஆசிரியர் சகுனம் பார்ப்பதிலிருந்து (பூனை குறுக்கே சென்றதால் திரும்ப வீடு போகும் அப்பா) சிறுவனின் உண்டியல் சேமிப்பு வரை கலந்து கட்டி விஸ்தாரமாய் கொண்டு செல்கிறார். செல்வா ஒவ்வொரு விலங்கினமாக மாறுவதும் அவதிப்படுவதும், அந்த திட்டமலை உண்டியலில் ஐந்து ரூபாயை போட முடியாமல் போவதும் சிறுவர்களுக்காக எழுதியதாகத் தான்  உணர முடிகிறது. என்ன கடைசி காட்சிகள் வேண்டுமானால் சிறுவர்களுக்கு நிச்சயம் பிடிக்காதுசெல்வா கடவுளிடம் போட்டியில் ஜெயித்து வரம் பெற்று சுகபோக வாழ்க்கை வாழத் துவங்கினான்! இது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். முடிவு மாறிவிட்டபடியால்இந்த இடத்தில் இலக்கிய வாசகன் வந்து அமர்ந்து விளாவாரியாக பேசலாம்.

இது ஒரு குறுநாவல் வடிவில் வந்திருக்க வேண்டிய புத்தகம் தான். நண்பர் வீடு சுரேஸ் குமார் பெரிய எழுத்து ராமாயணம் போன்றும், வயதானவர்கள் கண்ணாடியின்றியே வாசிக்க ஏதுவாகவும் சிறப்பான வடிவமைப்பில் நாவலாக மாற்றி விட்டார். அடுத்த முறை ஒரு சிறுகதையை  செல்வகுமார் பழனிச்சாமி சுரேசிடம் கொடுத்தால் போதுமானது. நினைத்தே பார்க்க முடியாத பக்க அளவில் பாலிதின் பேக் செய்து புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்து செல்லும் அளவில் கொண்டு வந்து விடுவார். (அந்த நம்பிக்கை வீண் போகாது)

சில நாவல்களை வாசிக்க மனது சுதந்திரமாக இருக்க வேண்டும்அப்படிப்பட்ட நிலையில் தான் வாசிக்க இயலும். போக நாம் அறிவியல் நாவல் வாசிக்கிறோமா? க்ரைம் நாவல் வாசிக்கிறோமா? ரொமான்ஸ் நாவல் வாசிக்கிறோமா? என்ற அடிப்படை விசயம் வேண்டுமல்லவா! இந்த நாவலை சிறுவர்களுக்கான நாவலாகவே வாசிக்கலாம்.

நாவலுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆசிரியரின் முன்னுரையையும், இவருக்காக முன்னுரை வழங்கிய பரிசல்காரன் கிருஷ்ணகுமாரின் முன்னுரையையும் வாசிக்கையில் ஆசிரியரிடம் கிண்டலும், நக்கலும், நையாண்டியுமான ஒரு ஏரியா எழுத்து புதைந்து கிடப்பதை அறிய முடிகிறது. அப்படி ஒரு முயற்சியையும் மேற்கொள்ளலாம். வாழ்த்துக்கள்!

-வா.மு.கோமு

வெளியீடு -நடுகல் பதிப்பகம். - பேச - 9095277700 / 9095377700. விலை - 130.


000

ஆவாரங்காடு புத்தகப் பார்வை

$
0
0


தமிழில் வட்டார வழக்கு நாவல்களுக்கு என்று ஒரு தனி இடம் இன்றுவரை இருக்கிறது. அது இலக்கிய வகைமையில் ஒன்று. தீவிர இலக்கியம் சார்ந்து இயங்குபவர்கள் வட்டார வழக்கு படைப்புகளை பாராட்டி மகிழ்கிறார்கள். எனது கள்ளி என்கிற முதல் நாவல் வெளிவந்த போது அது என் நண்பர்களுக்கே பிடிக்காத படைப்பாக போனதற்கு காரணம் இன்று வரை எனக்கு புரியவில்லை. அதாவது நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பல விசயங்களை அவர்கள் எழுத்தில் பார்க்கையில் ஒரு போதாமையை உணர்ந்து பேசினார்கள். அவர்களை நல்ல வாசிப்பாளர்கள் என்று பலகாலம் நம்பிக் கொண்டிருந்தேன்.


எழுதிய எழுத்தை சற்று தள்ளி நின்று பார்க்கும் பக்குவத்திற்கே நான் இப்போது தான் வந்திருக்கிறேன். முக்கிய எழுத்தாளர்கள் பலர் பொதுத்தமிழில் ஏன் எழுதுகிறார்கள்? என்றெல்லாம் இப்போது தான் புரிகிறது. ஆனால் இலக்கியத்தில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. கொங்கு மண்ணில் எனக்கும் முன்பாக மண் சார்ந்த படைப்புகளைஎழுதியவர்கள் என்றொரு லிஸ்ட் போடுகிறார்கள். இனி எனக்குப் பின்பாக எழுத வருபவர்களின் லிஸ்ட் தயாராகி விடும். அதற்குள் நான் பொது தமிழுக்கு ஓடி விடுவேன்.


இலக்கியம் என்பது தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க அல்லது மண்ணின் மணத்தை எழுத்தில் குவிக்க உகந்ததான ஒன்றல்ல! இலக்கியம் ஒருவனிடம் தொடர்ந்து படைப்புகளை கேட்டுக் கொண்டு நிற்பதில்லை. திரும்பத் திரும்ப நான் உணருவது ஒன்று தான். இன்றைய இலக்கியவாசகர்களின் தரம் மிக உயர்வான ஒன்று. ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்கிறான் என்று இரண்டு நாவல்களை படித்ததும் சொல்லி விடுவார்கள். இது கமர்சியல் எழுத்துப் பக்கம் குறைவு. குறைவு என்று சொல்வதை விட அங்கு அப்படி ஒன்று இல்லை. எழுத்தாளர்களின் ஒரே விதமான எழுத்தை கமர்சியல் வாசகர்கள் தொடர்ந்து விரும்புகிறார்கள்.


நேரம் போவதற்காக வாசிப்பது என்பது வேறு தான். நேரத்தை பயனுள்ளதாக ஆக்குகிறோமா? என்று வாசகனே கேள்வியை வைத்துக் கொண்டு வாசிக்கும் பக்குவம் என்பது வேறு தான். சொல்ல வேண்டியனவற்றை சொல்லி முடித்த பின் ஜெயகாந்தன் தன் எழுத்துப் பணியை முடித்துக் கொண்டார். திரும்பத் திரும்ப ஒரு சாரரின் வாழ்க்கை முறையை எழுத்தில்சொல்லிச் செல்வதில்  அவருக்கான சலிப்பு அது எனக் கொள்ளலாம். அவர் எழுத்தில்அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சி எடுக்கவில்லை. அல்லது அடுத்தகட்டம் என்பது பற்றி தெரியவில்லை. அதற்கு அவரது கல்வியறிவை கூட இப்போது குறையாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஜெயகாந்தன் என்றுமே இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்து தனது கதைகளை எழுதவில்லை. அவர் பறந்துபட்ட வாசகர்களுக்கான எழுத்தை மட்டுமே எழுதினார். இலக்கிய வாசிப்பாளர்கள் யாரும் அவர் புத்தகங்களை சேமிக்கவில்லை. எழுத்தின் தரத்தை இலக்கிய அபிமானிகள் ஒரே புத்தகத்தில் கண்டு கொள்வார்கள். இன்று வரை கள்ளியை தவிர்த்து நாவலே எழுதவில்லை என்று என்னையும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வதும் இது தான். கள்ளி அங்கீகாரத்திற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. அது போல பல நாவல்களை நான் எழுத முடியும். போலியாய் செய்து கொண்டிருக்க அல்லது நடித்துக் கொண்டிருக்க என்னால் இயலாது. கள்ளிக்கு பிற்பாடு சயனம் மட்டுமே அதே போல கொஞ்சம் திணித்து  எழுதிய நாவல்.


ஆவாரங்காடு நாவல் ஒரு கவிஞரால் எழுதப்பட்டது என்பதே இந்த புத்தகத்தின் முதல் ஆச்சரியம். அடுத்த ஆச்சரியம் கவிதை போன்ற எழுத்து நடை இந்த நாவலில் எங்கும் இல்லை. ரத்தினமூர்த்தியை இந்த நாவல் வழியாக முதலாக வாசிப்பவன் அவர் ஒரு கவிஞர் என்றால் ஆச்சரியமே அடைவான்.


கொங்கு கிராமியம் பேசும் எழுத்துகள் என்றும் வட்டார எழுத்துகள் என்றும் ஆர். சண்முகசுந்தரம் நாவல்கள் வழியாகத்தான்  இப்படியான பேச்சுகளே எழுந்தன. ஆர். சண்முகசுந்தரம் தான் எழுதுவது கொங்கு கிராமிய எழுத்து என்று சொல்லிக் கொண்டெல்லாம் எழுதவில்லை. அவருக்கு தெரிந்த மொழியை அவர் எழுத்தில் கொண்டு வந்தார். அவர் சிறந்த கதை சொல்லி தான். அதற்கு அவரின் நாகம்மாள் என்ற படைப்பே அத்தாட்சி. அதுவும் தவிர அவர் பல நல்ல படைப்புகள் எழுதியிருந்தாலும் நம் இலக்கிய முன்னோர்கள் அல்லது ஆசான்கள் அவரை ஒரே ஒரு நாகம்மாள் படைப்போடு ஒரு கொங்கு எழுத்தாளனை முடித்துக் கொண்டார்கள்.


இப்போது நான் அந்த ஒன்றையும் ஒதுக்குகிறேன். ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய படைப்புகளை தற்போதைய வாசகன் படித்தறிய வேண்டிய தேவைகள் இல்லை. ரத்தினமூர்த்திக்கு ஆர்.சண்முகசுந்தரம் யார் என்று கூடத் தெரியாது. அவரது படைப்புகள்,தான் எழுதிய சிவன்மலை, திருப்பூர் பகுதிகளை வைத்துத் தான் என்பதுவும் தெரியாது. இவர் ஆர். சண்முகசுந்தரத்தை வாசித்திருந்தால் இப்படியான ஒரு கிராமிய வாழ்வியலை பதிவாக்கி இருக்க முடியாதுஆக ஆவாரங்காடு நாவல் முந்தைய கொங்கு எழுத்தாளர்களின் எழுத்தை தக்கவைத்துக் கொண்டு தமிழில் முழுமையான வட்டார அரிதாரம் போட்டு வந்திருக்கும் சமீபத்திய நாவல் என்று தான் சொல்ல வேண்டும்.


வட்டாரம் என்பது திருப்பூர் என்ற நகரத்தை சார்ந்து எழுதினாலே அதற்குள் அடங்கி விடும். அதுவே பொதுத் தமிழில் எழுதப்படுகையில்  பறந்துபட்டு சென்றுவிடும் என்கிறார்கள். இதனால் தான் தொடர்ந்து ஒரு ஏரியாவில் இயங்க கொஞ்சம் பயமாயும் இருக்கிறது. யாரின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுப்பவன் நான். சும்மா ஒரு விசயத்தை என் காதில் போட்டு விட்டுச் செல்வது அவர்களின் நோக்கமாக இருக்காது.

நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் பேசுகையில் உங்கள் புத்தகங்கள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், சமீபத்திய புத்தகங்கள் என்னிடம் இருந்தாலும் வாசிக்க தயங்குகிறேன்! என்றும் கூறினார். அவர் அதை சொல்ல வருகையிலேயே நான் உணர்ந்து கொண்டேன்மாற்று எழுத்து வடிவத்தை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்! உங்களுக்கு என் எழுத்தில் சலிப்பு வந்து விடுமோ ! என்ற பயம். எனக்கு அது வந்தே விட்டது நண்பரே! அதனால் தான் நான் வேறு வடிவத்திற்கு முயற்சி செய்கிறேன். எல்லாமும் நான் நினைப்பது தான். இல்லையென்றால் இத்தனை காலம் இத்தனை சிரமப்பட்டு இங்கே வந்திருக்கவே மாட்டேன்என்றேன். நான் பேசியது அவருக்கு திருப்தியாக இருந்திருக்க வேண்டும்.


நான் இப்படித்தான் எழுதுவேன் என்ற பிடிவாதங்களை எழுத்தாளன் வைத்திருந்தான் என்றால் அவனுக்கு நிலையான மாத வருமானம் இருக்கிறது என்று தான் பொருள். பச்சோந்தி இடத்திற்குத் தகுந்தாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பது தெரிந்த ஒன்று தான். எழுத்தை நம்பி வாழ்பவன் அதைப்போலத்தான் இருந்தாக வேண்டும்.


ஜி.நாகராஜன் என்றொரு புரபசர் நல்ல சாராய விரும்பியாகத்தான் எனக்குத் தெரியும். அவர் ஆங்கிலத்தில் புத்தக வாசிப்பு பழக்கமுள்ளவர் என்றும் சில எழுத்துகள் சொல்லின. அவருக்கு விபச்சாரிகள் மீது ஒரு கண் என்று எல்லாரும் சொல்ல மறுப்பார்கள். விபச்சாரிகளை காதலித்தவர் அவர். அவர் எழுத்து விபச்சாரத்தை மட்டும் பேசின. அவரை தலையில் தூக்கி வைத்து  கொண்டாடினார்கள். அவர் தன் கதையை வைத்து நாலு காசு சம்பாதிக்க வேண்டுமென நினைத்திருக்கவேபோவதில்லை.  சாராயம் குடிப்பதையும், டெர்லின் சட்டை போடுவதையும், விபச்சாரிகளிடம் போவதையும் எழுதி சம்பாதிக்க எழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சொல்லத் தெரிந்ததை சொல்லிப் போனார். தமிழில் அந்தந்த காலகட்டத்தில் நடைபெற்ற எழுத்து மாற்றங்களே இவைகள்.


நாச்சிபாளையம் என்கிற கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழா துவங்குவதிலிருந்து சொந்த பந்தங்கள் என்று நாயகன் சுந்தரின் வீட்டுக்குவருகிறார்கள்.  படியூருக்கு கட்டிக்கொடுத்த அக்கா கண்மணி,  அவள் படியூரில் பக்கத்து வீட்டுக்கு அழைப்பு கொடுத்து வந்த நாயகி சிவகாமி என்று கலகலப்பாக நாவல் துவங்குகிறது. நாவலின் ஆரம்பத்திலேயே நாயகன் நாயகி கற்பனைப் பாத்திரங்கள் என்று ஆசிரியர் சொல்லி விடுகிறார்.


நாயகன் திருப்பூர் கம்பெனியில் வேலையில் இருப்பதாகவும், அவரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லையெனவும், அவ்வப்போது குடிப்பழக்கமிருப்பதால் பெண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் செல்லும் கதையோட்டத்தை சிவன் மலை தேர்த் திருவிழாஸ்கைலாப் விழுந்த சமாச்சாரங்கள் என்பன தூக்கி நிறுத்துகின்றன என்பதை முதல் வாசிப்பில் உணர்ந்தேன். தற்போதைய இரண்டாம் வாசிப்பில் இவரின் எழுத்து நடையின் சரளம் பிரமிக்க வைத்ததுபனியன் கம்பெனியில் காயத்ரி என்ற உள்ளூர்ப்பெண் கனகராஜன் என்கிற  தஞ்சாவூர் பயல் கட்டிக் கொள்வான் என்று நம்பி தன்னை அவனிடம் இழந்து வயிற்றில் வாங்கிக் கொண்டு அழும் காட்சி இன்று வரை திருப்பூரில் நடந்து கொண்டேயிருக்கும் நிகழ்வு தான். ஏகப்பட்ட கனகராஜன்கள் வெளிஊரிலிருந்தும். வெளி மாநிலத்திலிருந்தும் வந்து திருப்பூரில் காதலிக்கிறார்கள். அவர்கள் அப்பாவிப்பெண்களை நுகர்ந்து கண்டறியும் சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ஊருக்குள் நடந்து கொள்ளும் முறைகள் இந்த நாவலில் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கிறது. வட்டிக்கு கொடுத்த வீட்டில் அழகான பெண் இருந்தால் பணத்திற்கு பதில் பெண்ணைக் கொடு! என்று நாற்பதாவது வயதிலும் நிற்பார்கள் தான். ஆனால் பெரிய ஒரு தொகையை உறவினர்கள் மூலமாகவேனும் சேர்த்து திரும்பக் கொடுக்கும் நிகழ்வு நாவலில் நிதானமாக சொல்லப்படுகிறது.


சிவகாமியின் அக்கா சாந்தி நாவலில்  தன் கணவனின் கடன் தொகையை தீர்க்கா விட்டால் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று சொல்லி தாட்டி விட்டதாக வந்து அமருகிறாள். “இத பாரு தலையே போனாலும் சரி, உன்னோட புருசனோட கடன உங்கொப்பன் கட்டமாட்டான். நீ இங்கியே இருந்துக்க ஒன்னும் நட்டமில்லே. இதயெல்லாம் கேட்காம உன்ற மாமனாரும் மாமியாரும் என்ன மசுரா புடுங்கிட்டு இருக்காங்க? பெத்த பையனெ தட்டிக் கேட்க துப்பில்லாத மனுசங்க. பொழைக்கறாங்களாம் பொழப்பு.. இந்த பொழப்பு . மானங்கெட்ட நாய்க”  கிழவி பேசும் பேச்சு அப்படியே கொங்கின் கிராமியப்பதிவு. அதன் பின்பாக சாந்தி தன் கணவனின் வீடு சென்று நடந்து கொள்ளும் முறை நாவலில் அட! என்று வியக்க வைக்கும் விதமாய் இருக்கிறது. அது சாந்திக்கும் கூட!


நாவலில்கடைசியாக சிவகாமி சுந்தரிடம் கேட்பது ஒன்று தான். “குடிக்கக் மாட்டேனென சத்தியம் பண்ணுங்க!” என்று. குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து போனதை, எத்தனையோ பெருசுகள் குடிக்காக தன் நிலபுலன்களை இழந்ததை, இந்த மண் அறிந்தே, பார்த்தே வந்திருக்கிறது. அது இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதை  தடுப்பதற்கான வழிவகைகளும் இங்கில்லை. பெண் நினைத்தால் முடியலாம்! என்பதே இதன் உள்ளர்த்தம். ஆனால் இப்படியான காதல்கள் வெறும் கதைகள் மட்டும் தானே, என்கிற ஆதங்கமும் வந்து சேர்கிறது.


இறுதியாக, இந்த நாவல் கிராம மக்களின் இயல்பான நடத்தைகளை அப்படியே கூறியிருக்கிறது என்றே சொல்வேன். சில நேரங்களில் குடியால் எதேச்சையாக நிகழும் கொலைகள் கூட சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் ஜெயிலுக்கு செல்லும் அந்த இருவரும் அதிகாரியிடம் சொல்லும் பதிலும் இது தான். “குடியினால”.  போக ரத்தினமூர்த்தி என் நண்பர் என்பதாலுமோ, இது நடுகல் வெளியீடு என்பதாலுமோ இந்த இடத்தில் நாவலை சீராட்டி நான் பேசவில்லை. வாசிக்க உகந்த நாவல் என்பதை சொல்லவே விழைகிறேன்.

-வா.மு.கோமு.

ஆவாரங்காடு - ரத்தினமூர்த்தி - நடுகல் வெளியீடு - விலை 230. தொடர்புக்கு : 99444 22111.


000

சிறுகதைகள் பத்து பிடிஎப்

$
0
0
எனது சிறுகதைகள் பத்து உருப்படியை நண்பர்கள் டவும்லோடு செய்து பிடிஎப் புத்தகமாக வாசிக்கலாம்!
http://freetamilebooks.com/ebooks/vaamuko10stories/



000

இதற்கே தானே ஆசைப்பட்டீர்கள்!

$
0
0

இதற்கேதானே ஆசைப்பட்டீர்கள்!
வா.மு.கோமு.

நம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றை இப்படியெல்லாம் நடக்கிறதென, வேதனையான விசயங்களை கூட ஐயோ என்ற பரிதவிப்பு இல்லாமல் சொல்லிக் கடந்து போகிறோம்தினச்செய்திகளைத் தரும்  பத்திரிக்கைகளில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் இருந்து கொண்டே இருக்கின்றனகிழவர்கள் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள்  என்கிற தகவல் வந்து கொண்டேயிருக்கிறது. கிழவர்களைக் கண்டால் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள்  வீணான கற்பனை செய்து பயப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தப்புற்றில் பாம்பு இருக்கும் என்று தெரியாது தான். ஆகவே புற்று என்றிருந்தால் பாம்பு இருக்கும் என்பதாக நம்புகிறார்கள்.

இண்டர்நெட்டில் பாலியல் வலைதளங்கள் இயங்குவது அனைவருக்குமே தெரியும். அவைகள் பல காமுகர்களின் வெறியைத் தணிக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன என்று தான் படுகிறது. அவைகள்  ஜப்பான், இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என்றுபல தேசத்து ஆண் பெண் உறவுகளை  பிரித்து வைத்து வீடியோக்களாக பதிவேற்றி வைத்திருக்கின்றன. ஆண் பெண் உடலுறவில் பல்வேறு வகை மாதிரிகளையும் பிரித்து வரிசைப்படுத்தி பார்வையாளர்களுக்கு சிரமத்தை குறைத்து வைத்திருக்கின்றன.

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் யார் இவைகளை இப்படி புத்தக லைப்ரெரி மாதிரி மெனக்கெட்டு சேகரித்து அதன் வகைகளைப் பிரித்து  வைக்கிறார்கள்? என்பது தான். எம்.எம்.எஸ் என்றும், ஸ்கேண்டல் என்றும் ஹோம் என்றும் லெஸ்பியன் என்றும் கிளாசிக் என்றும் கே என்றும்இவற்றில் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் தினமும் மணிக்கொருமுறை புதிய வீடியோக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அவற்றில் ஒவ்வொரு ஆடவனும் தன்சாமார்த்தியத்தை நிறுபித்துக் காட்ட வேண்டுமென்றும், தன்னுடைய வீடியோவும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் நினைக்கிறாகளோ என்று தான் படுகிறது. ஒரு அரசாங்க லைப்ரேரியில் தன் புத்தகமும் இருக்க வேண்டுமே! என்று எழுத்தாளன் ஆசைப்படுவது போல. ஒவ்வொரு லைப்ரேரியிலும் தாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் இருக்க வேண்டுமென ஒரு பதிப்பகத்தார் ஆசைப்படுவது போல.

இவற்றில் ஒரு ஆண் தான் பயன்படுத்திக் கொள்ளும் பெண்ணுக்குத் தெரியாமல் தன் அலைபேசியில் பதிவு செய்து அதை வலையேற்றுவதும் நடக்கிறது. அந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்களாம். போக பெண்கள் குளிக்கும் காட்சியை திருட்டுத்தனமாக எடுத்து வலைதளத்தில் ஏற்றப்படுகிறது. பாலியலில் ஒரு மனிதனுக்கு என்னவென்ன வக்கிரங்கள் இருக்கிறதோ அவை அனைத்துமே வீடியோக்களாக ஏற்றப்பட்டு லட்சக்கணக்கில் கிடக்கின்றன.

இதில் பெண்களே தங்கள் உடல் அழகை ரசித்து சுயமைதுனம் செய்து கொள்வதை பார்த்துரசித்ததோடு ஓயாமல்  அவற்றை வலைதளத்தில் ஏற்றி விடுகிறார்கள்வக்கிரங்கள் ஆணிடமும் பெண்ணிடமும் சம அளவிலேயே இருக்கின்றன என்பதை இந்த வலைதள ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான வலைதளங்கள் மனிதர்களின் அளவுகடந்த பாலியல்இச்சையை தீர்க்கும்  பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. இவைகளும் இல்லாவிட்டால் செய்தித் தாள்களில் இன்னமும் அளவுக்கு அதிகமான சம்பவங்கள் தான் நடந்ததாக அச்சேறிக் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் பாலியல் கல்வியின் தேவையை அனைவருமே உணருகிறோம்.

இந்த வலைதளங்களின் பார்வையாளர்கள் என்று ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த வீடியோக்களை சும்மா பொம்மை பார்ப்பது போல பார்க்க வருவதில்லை. பெண்ணானவள் பல ஆண்களின் உடல் அழகை காணவும், ஆணானவன் பலவித பெண்களின் உடல் அழகை காணவுமே வருகிறார்கள்.

பாலியலில் பலவித விருப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. லெஸ்பியன் உறவுக்காரர்கள் வலைதளத்தில் லெஸ்பியன் பிரிவிலேயே இருக்கிறார்கள். பின்புற உறவில் ஆர்வமும் காமமும் உடையவர்கள் அந்தப்பிரிவிலேயே இருக்கிறார்கள். இப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக மனிதர்கள் பாலியல் உணர்வுகளை உள்ளுக்குள் மறைத்து வெளியே மறுத்துப் பேசியே வருகிறார்கள். பெண்கள் வெளியே அதுவொரு கெட்ட சமாச்சாரம் என்றே பேசுகிறார்கள். அப்படியானவர்களின் காம இச்சையை தீர்க்கும் விதமாக இந்த வலைதளங்கள் செயல்படுகின்றன.

முன்பெல்லாம் மலையாள, ஆங்கில பி கிரேடு படங்கள் தான் ஆண்களின் காம் இச்சையை தீர்க்கும் வடிகாலாக இருந்து வந்தன. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெண்கள் நடித்திருந்தால் அந்த இருவருமே குளிக்க எப்போது செல்வார்கள்.. என்று காத்திருக்கும் முகங்கள் திரையரங்கில் நிறைந்திருந்தன. அது அரைகுறையாய் நிறைவேற்றப்பட்ட பின்  படுக்கையறையில் கணவனின் நண்பனோடு எப்போது உருளுவார்கள்? என்று காத்திருந்தார்கள். அப்படி ஏதேனும் காட்சிகள் திரைப்படத்திலேயே இல்லாவிடினும் தியேட்டர்காரர்கள் பிட்டுப்படங்களை இணைத்து  ரசிகர்களின் காம இச்சையை தீர்த்தார்கள். அதற்காக அவர்கள் மாமூல் கொடுத்து அழுதார்கள்.



இன்று இணையதளத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்துவர்கள் தனக்குத் தானே என்ற திட்டத்தின்படி செயல்படுகிறவர்கள். ரசிகர்களே ரசிகர்களை  திருப்தியுறச் செய்கிறார்கள். இந்த வலைதளங்கள் தீமைகளை உற்பத்தி செய்கின்றன என்று ஒருசாரர் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். மார்க்கெட்டில் வரும் சில சோப்புகள் சிலருக்கு உடலில் ஒவ்வாமையை கொடுக்கத்தான் செய்யும். அந்தச் சோப்பு செரியில்ல  .. வேற போட்டுப் பாக்கணும்! என்பார்கள். அப்படித்தான் எதுவும்.

குண்டாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்காது. சிவப்பாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்கும். உண்ணும் உணவிலிருந்து எல்லாவற்றிலும் தான் தீமைகள் இருக்கின்றன. பறவைக்காய்ச்சலில் இருந்து கண்ட காய்ச்சல் எல்லாம் சிக்கன் உணவிலிருந்து தான் மனிதர்களுக்கு வருகின்றன என்கிறார்கள். சாப்பிட வேண்டாம் என்று சத்தமில்லாமல் அதிகாரிகள் கூறி விடுவார்கள்ஒருகிலோ சிக்கனின் விலை இன்னமும் குறைந்தபாடில்லை. அதை உண்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருந்தால் இந்த நேரம் அதன் விலையும் இறங்கியிருக்குமே!

ஞாயிறுகளை நடுத்தரவர்க்கம் சிக்கன் உணவை வைத்தே கழிக்கின்றன. ஊசியிடப்பட்டு அதிவேக வளர்சியில் வளரும் இந்தக் கோழிகளால் உடலுக்கு தீங்குண்டு என்பது அவர்கள் அறியாத விசயமல்ல. தவிர நாக்கு ருசி என்று ஒன்று பழகிப்போனதாகவே இருக்கிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போலத்தான். கள்ள உறவுக்கு என்றொரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமிருப்பது போல! மேலும் எம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே.. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு கூத்தியாவும் வேணுமாம்.

நாம் தவறுகளை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்புவதால் நாளை தவறுகளே நடக்காமல் போய்விடுமா என்ன? பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது என்றால் 30 காசு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வரும். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்புபவர்கள் விசாரித்துக் கொண்டா நிரப்பிக் கொள்கிறார்கள்? அப்படி குறைந்த 30 காசு என்னவாயிற்று? என்று விபரமாக கேட்டால், ‘எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலை சார்என்பார்கள். எரியுற வீட்டில் எது கிடைத்தாலும் மிச்சம் தானே! என்கிற கணக்கு தான் இது.

இப்படி தவறுகள் என்பன மட்டுமே நம்மைச் சுற்றிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன. தவறுகள் மட்டுமே வெளிச்சமிட்டும் காட்டப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தவறுகள் மீது தான், அதைப்பற்றி அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் குவிந்திருக்கிறது. தவறை தவறே இல்லாமல் செய்வதெப்படி? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். குறைப்பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் அவர். குழந்தையின் எடை 1300 கிராம் இருந்ததால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. மறுநாள் காலை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுக்கு டாக்டர்கள் வந்த போது ஈன்றெடுத்த தாயைக் காணோம். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு தனியாக வந்த அந்தப்பெண் பதிவேட்டில் பிருந்தா வயது 19, கணவர் பெயர் குமார், கே.ஆர்.எஸ் லே அவுட், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். என்று முகவரி கொடுத்திருக்க போலீசார் விசாரிக்கையில் முகவரி போலியானது என்றும், அந்தப்பெண் திருமணமாகாதவள் என்பதும் தெரியவந்தது. அந்தப்பெண் குறித்து போலீசார் விசாரித்தவண்ணமிருக்கிறார்கள்.

அந்தப்பெண் மீண்டும் இன்னொரு காதலனை தேடிப்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழலாம். மிக தைரியமான பெண் என்று தான் தெரிகிறது. 100 ரூபாய் மாத்திரையில் முடிந்திருக வேண்டிய விஷயம் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் இருந்திருக்காது. இதுவே கிராம சூழ்நிலையில் வாழும் பெண் என்றிருந்தால் தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கக்கூடும். பிள்ளை ஒன்று பெற்றாள், விட்டு விட்டுப் போய் விட்டாள் என்ற தகவலை வைத்து குட்டி ஜப்பானில் போலீசார் எந்தப்பெண் என்று தேடுவார்கள்/ நாள் ஒன்றிற்கு நகரில் ஒரு பிரச்சனையா நடக்கிறது?

கடந்த 20 வருடங்களில் இந்தியாவில்20 கோடி குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு இருப்பதாக சமூக நலவாரியம் தெரிவிக்கிறது. 3 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிராக குற்றம் இந்தியாவில் நடக்கிறது. 9 நிமிடங்களுக்கு ஒருமுறை கணவராலோ, உறவினராலோ கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். 15 நிமிடத்திற்கு ஒருமுறை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 29 நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெண் கற்பழிப்புக்கு ஆளாகிறாள்.

தமிழகத்தில் 560 ஸ்கேன் மையங்கள் கொண்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. 8 மரபணு ஆய்வுக்கூடங்களும், 3943 அல்ட்ரா சவுண்ட் சோதனைக் கூடங்களும், 38 கருத்தரிப்பு மையங்களும், 11 குரோமோசோம்கள் குறித்து ஆராயும் ஆம்னியோ சென்சிடிங் மையங்களும் பதிவு பெற்று இயங்குகின்றன.

இவற்றை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மையங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் கொலை செய்யப்படுகின்றன. எங்களுக்கு பெண் குழந்தை தான் வேண்டுமெனச் சொல்லும் தம்பதியினரை இனியேனும் தனித்து பாராட்டி அரசாங்கம் சலுகைகளை வழங்கலாம்.

ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பார்கள். இப்போது வயிற்றில் உயிர்த்துடிப்போடு இருக்கும் பெண் சிசுக்களை துண்டு துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்கிறார்கள். மருந்துக்கடைகளில் கருக்கலைப்பிற்கான மாத்திரைகள் டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கிறது. கருக்கலைப்பிற்கு மருத்துவமனைகள் வாங்கும் தொகைகள் என்று பார்த்தால் மூன்று மாத கர்ப்பத்தைக் கலைக்க 3000 ஆயிரம் ரூபாயும், ஐந்து மாத கர்ப்பத்தைக் கலைக்க6000 என்றும் ஏழுமாத கர்ப்பத்தைக் கூட பணத்திற்காக மருத்துவர்கள்\ கலைப்பதாகவும் கூறுகிறார்கள்.

கணவரின் நிர்பந்தத்தாலோ அல்லது கணவரின் குடும்பத்தின் நிர்பந்தத்தாலோ அல்லது கள்ள உறவினாலோ சிசுக்கலைப்பிற்காக பெண்கள் மருத்துவமனைக்கு பரிதாப ஜீவன்களாக வருகிறார்கள். கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தவறான ஒன்று. பணத்தைக் கொடு கருவுவைக் கலைத்து அனுப்புகிறோம் என்று மருத்துவமனைகள் செயல்படுவது மருத்துவத்திற்கு அழகல்ல.

குழந்தையின்றித் தவிப்பவர்கள் உங்களைச் சுற்றிலும் கூட இருக்கிறார்கள். குழந்தை வேண்டுமென கோவில் கோவிலாய் சுற்றுபவர்கள் உங்களைச் சுற்றிலும் இருகிறார்கள். குழந்தை என்பது ஒரு உயிர். மருத்துவர்கள் கருக்கலைப்பிற்கு வரும் பெண்களின் கணவர்களை வரவழைத்துப் பேசலாம். ஆனால் டெங்கு, பறவை, மர்மக்காய்ச்சல் என்று மருத்துவமனையில் கூட்டம் நிரம்புவதால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை.

பிழைக்க வழி சொல்லுங்கள் நண்பா! என்றொருவர் வந்தார். இருக்கே! என்றவன் தீபாவளி பலகாரச்சீட்டு ஆயிரம் அடித்து மாதா மாதம் வீடு வீடாய் சென்று தொகை வாங்கி சேர்த்துடா! என்றேன். கொஞ்சம் யோசித்தான் அதன் விளைவுகளை. கடைசியாக நல்லதாகத்தான் படுகிறது என்றான். தீபாவளி நெருங்கும் சமயம் ஊரை காலி செய்து விட்டு ஓடி விடு! என்றேன்.
அடுத்ததாக கேரளாவுக்கு அரிசி கடத்துடா! என்றேன். ஐயோ நண்பரே! என்றான். இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்றான் என்னிடமே! தீவாளி செலவுக்கு பைக்கு திருடி வித்தேன். தீபாவளி முடிஞ்சு பிடிச்சாங்க, உள்ளார உக்காந்துட்டு வர்றேன், என்றேன். சீட்டு ஒன்னு சேர்த்தலாம்னு இருக்கேன்டா அடுத்ததா  மூனு மாசத்துக்கு ஒருக்கா 4000. மொத்தம் பதினஞ்சு பேரு.. உன் பேரை சேர்த்திக்கறேண்டா.. என்றதும் எஸ்கேப்டா சாமி! என்றோடினான்.

மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தை, பணத்துக்காக மைனர் மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தந்தை, ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட இளம்பெண் உயிருக்கு ஊசல் என்று கேரளாவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்க, அந்தப் பட்டியலில் கிட்னியை விற்க ஒப்புக்கொள்ளா விட்டால் மகனைக் கொன்று விடுவேன் என மிரட்டிய காதல் கணவனின் பேச்சைக் கேட்டு சிறுநீரகத்தை விற்ற இளம்பெண் மஞ்சு சமீபத்தில் ஆங்கிலப்பத்திரிக்கைக்கு தந்த பேட்டியில் கூறியது…

கொச்சியில் டீ எஸ்டேட்டில் நான் வேலையில் இருந்தேன். அதே டீ எஸ்டேட்டில் சேல்ஸ் பிரதிநிதியாக வேலை பார்த்த பினு என்பவரை 2005ல் சந்தித்தேன். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்டதால் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து அந்த தீயை அணைத்தோம். தீ அணைந்த ஒரு வருடத்தில் ஆண் மகவு ஒன்றை ஈன்றெடுத்தேன். பினுவின் குடும்பம் 2009ல் கடுமையான கடன் தொல்லையில் சிக்கித் தவித்தது.

அதே நேரத்தில் தனது நண்பர் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுவதாகவும் எனது சிறிநீரகத்தை விற்றால் 10 லட்சம் தொகை கிடைக்குமெனவும், அதை வைத்து கடன்களை தீர்த்து விடலாமென்றும் பினு கூறினார்.நான் அதற்கு, கிசுக்கணும்!  உன்னுதை வித்துக்கோ, கடனைக் கட்டிக்கோ! என்றேன். எனது மகனை தூக்கிப்போய் சினிமா பணியில் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் பினு. தாய்ப்பாசத்தால் சம்மதித்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பினுவைக் காணவேயில்லை. பினு எஸ்கேப் ஆகிவிட்டதை தெரிந்து கொண்டேன். பல இடங்களில் தேடியும் பினுவைக் காணாததால் 2011ல் புகார் கொடுத்தேன்.

இந்தப் பெண்ணின் பேட்டியிலிலிருந்து நம் தமிழ்ப்பெண்கள் ஏதாவது உணர்ந்து கொள்வார்களா? என்றே யோசித்தேன். ஏற்கனவே கழுதைப்புலியை முறத்தால் விரட்டிய பாரன்பரியத்தில் வந்த பெண்கள் தான் இன்று கரப்பான் பூச்சிக்கு பயந்து காதலன் மீது தாவிக் குதிக்கிறார்கள்.

மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது பச்சைக்கிளி ஒன்று வந்து அமர்ந்து கொண்டதாம். கோவில் நிர்வாகிகள் கூறுகையில் ஒரு மாதத்திற்கு முன்பாக பூஜை நடந்து கொண்டிருந்த போது இடது கண்ணில் காயத்துடன் பறந்து வந்த கிளி கர்ப்பக்கிரகத்தினுள் சென்று அம்மன் சிலை மீது உட்கார்ந்து கொண்டது. அன்று முதல் கிளியை வெளியே கொண்டு வந்து விட்டாலும் மீண்டும் அம்மன் சேலையைப் பிடித்து மேலேறி உட்கார்ந்து கொள்கிறது.

பூசாரி கூறுகையில் அபிஷேகம் செய்யும் போது கீழே இறங்கி வந்து விடுகிறது. மற்ற நேரங்களில் அம்மன் மீதே அமர்ந்திருக்கிறது. இரவு கோவிலை பூட்டும் போதும் கருவறையை விட்டு வருவதில்லை. பழம், பொங்கலை விரும்பி சாப்பிடுகிறது. அர்ச்சனை செய்யும் போதோ, மணி அடிக்கையிலோ பயப்படுவதில்லை.

சுற்று வட்டார பொதுமக்கள் கூட்டமாய் வந்து கிளியை பார்த்து வணங்கிச் செல்கின்றனர். முன்பு மாட்டின் கண்ணில் ஒரு தலைவர் தெரிகிறார் என்று கும்பல் கூடியது. வருமானம் இல்லாத கோவில்களில் நல்ல பாம்பாட்டியிடம் பேசி பல் பிடுங்கிய பாம்பை சிலை மீது நீண்ட வாக்கில் படுக்க வைத்து விட்டால் கோவிலில் கூட்டம் கூடும். சர்க்கஸ் கம்பெனியாரிடம் பேசி புலி, சிறுத்தை என்று கூட முயற்சிக்கலாம். குரங்கை வைத்து தீபாராதனை காட்டலாம். ஜனங்களுக்கு எல்லாமே அதிசயம் தான்.

இருமுடி ஏந்தி சபரிமலை சென்ற +2 மாணவனை காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவனுடன் சென்ற ஆறு பேரையும் யானை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். நம் ஆட்கள் எதையும் உருப்படியாக செய்வதேயில்லை. மாலை போட்டு விட்டேன் என்று சொல்லி டாஸ்மார்க் பாரில் நிற்பான். குடியை சிலநாட்களேனும் விட்டொழிப்போம் என்பதற்காக மாலை போட்டுக் கொள்வான். பின் மாலை நேரத்தில் மாலையை கழற்றி வீட்டில் சாமி பட்த்தின் முன்பு வைத்து விட்டு வந்து குவாட்டர் குடிப்பான் மீன் சில்லி சாப்பிட்டபடி. வாயில் சிகரெட் புகையும். பின்பாக வீடு சென்று குளித்து துன்னீரு பூசுக் கொண்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்வான். போக இதை நான் தவறென சொல்ல மாட்டேன். அது அவன் பிரியம்.

மனைவியின் பாலியல் டார்ச்சர் பொறுக்க முடியாமல் சர்க்கரை வியாதிக்காரன் அதற்காகவே பயந்து முருகனுக்கு, ஐய்யப்பனுக்கு என்று மாலை போட்டுக் கொள்வது பரிதாபத்திலும் பரிதாபம் தானே!. சபரிமலைக்குச் சென்ற வேன் கவிழ்ந்து ஆறு பேர் மரணம் என்று படிக்கிறோம். தப்பு செஞ்சுட்டு சாமியத் தேடிப்போனா இப்படித்தான் நடக்கும் என்று சமாதானம் பேசிக் கொள்கிறோம். நம் டாஸ்மார்க் சாமி லெக் பீஸ் கடித்துக் கொண்டே சியர்ஸ் போட்டு அடிக்கிறது.

000

கிராமியப் பேச்சு (கட்டுரை)

$
0
0


கிராமியப் பேச்சு

வா.மு.கோமு.

-மாப்ளே! அப்புறம் மழை துளி பெஸ்சு போட்டுதாட்ட இருக்குதா.. காட்டுல எதாச்சிம் கம்பு சோளம்னு  வெதச்சுப் போட வேண்டீது தானொ!

-அட ஏம்மாமா நீங்க வேற, டொமீர் டொமீர்னு சாமத்துல தலையில வுழுந்த மாதிரி இடிச் சத்தம் தான் போங்க! மழை எங்க பேஞ்சுது? மாடு மண்டுட்ட மாதிரி .. போக கருக்கல் கட்டுனாவே எங்கூர்ல கரண்டு வேற போயிரும். துளி மழை வேற பெஸ்சு போட்டுதா.. இனிப் பாருங்க போன கரண்டு வந்து சேர ரெண்டு நாளு ஆவிப்போயிரும்.

-சுப்பக்கா புருசன் மருதாசலம்னா இல்ல மாணிக்கன்னு பேசிட்டு இருக்கே.. இந்தக்கட்டாப்பு மழை இருக்குதுன்னு டிவிலயே சொல்லிட்டான் மாப்ள! தைரிமா டிராக்டரை ஓட்டு காட்டுல.

-வேணும்ல இங்க ! டிரேக்டர் ஓட்டறதாமா. காத்தால ஏம் மாமா பொழுது போவலின்னு இங்க வந்து கழுத்தை அறுக்குறே? நானே காடு கெடந்து சாட்டாதுன்னு நூறு நாளு வேலைக்கி மம்புட்டி சட்டி தூக்கிட்டு போயிட்டிருக்கேன். இவ என்னடான்னா பனியன் வேஸ்ட்டை மூட்டை மூட்டையா போட்டு சர்ரு சர்ருன்னு என்னாரமும் மடியில புள்ளத்தாச்சியாட்ட கட்டீட்டு இழுத்துட்டே இருக்குறா. நோவு மேல நோவு வந்துட்டு இருக்குது. அதை இழுக்காதடி.. பஞ்சு உன் நெஞ்சுல அடச்சி நாளக்கி நூத்தியெட்டுக்கு போனு போட்டு கொய்ங் கொய்ங்குனு சத்தம் போட்டுட்டு தூக்கிட்டு போயி செலவு பண்டோணுமுன்னு சொன்னா கேக்கறாளா ஒன்னா? ஏம் மாமா.. இந்த ஆஸ்துமா ஆஸ்துமாங்கறாங்களே அது தான வந்து சேரும் இப்பிடி இழுத்துட்டு இருந்தா?

-ஆமா மாப்ள! நானு வேற பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கனா.. எங்கிட்ட நீ கேட்டுப்போட்ட! இப்ப டிவில பாக்கறீல்ல நீயி.. உங்க பேஸ்டுல உப்பிருக்கான்னு நம்மளைப் பாத்து கேக்காங்க.


-அது பழசு மாமா.. இப்ப உப்போட எலுமிச்சை இருக்கான்னு கேக்காங்க!

-சரி இனி புளியிருக்கான்னு கேக்க எவ்ளோ நாளாயிடும்னு நினைக்கே? அட பல்லு வெளக்குறதுல போயி கடுகிருக்கா? சீரகமிருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்களே.. அவிங்க தான் என்ன பண்ணுவாங்க மாப்ள? தெனம் தெனம் புதுப் புது கம்பெனிக்காரனுக பேஸ்டோட ப்ரஸ்சு, 100 % எச்சுன்னும், குடுத்துட்டே இருக்காங்க. போயி கடையில நின்னு பாரு. ஒரே கம்பெனிக்காரன்  44 விதமா வெச்சிருப்பான். நான் தான் இன்னம் கருவேலங்குச்சிய சைசா வெட்டிக் கொண்டாந்து ஊட்டுல வெச்சிட்டு கடிச்சு மென்னுட்டு தேச்சிட்டு இருக்கேன். உம்பட பல்லைப்பாரு.. பொண்டாட்டி எப்பிடி மாப்ளெ உன்னையெல்லாம் கிட்ட உடறா?

-ஆமா இருக்குற இருப்புக்கு இனி அது வேறயா? ஊட்டைப்பாரு மாமா மொதல்ல. பாரு வெள்ளைப்பஞ்சு ஊட்டுக்குள்ள மொகுட்டுல எல்லாம் அப்பிக் கெடக்குது. இதுல பசக புள்ளைகளுக்கு நோவு வந்து சீரழியோணுமேன்னு நான் கவலப்படறது கூட அவளுக்கு தெரியில.

-அட பொம்பளைங்க கையி சும்மா இருக்காதப்பா! அப்ப வள்ளியம்மா பஞ்சிழுத்துட்டு உன்னை இழுக்கறதில்லீங்கறே! மொறைக்காத மாப்ள சும்மா! நான் தான் இருக்குற காட்டை வித்துப்போட்டு சிவனேன்னு உக்காந்துட்டேன். அங்க எம்பட காடு இருந்த அடையாளமே மாறி கம்பெனிக ஊடுன்னு ஆயிப்போச்சு. கண்ணு மூடி முழிக்கறக்குள்ள செஞ்சு கொண்டாந்து வெச்சமாதிரி ஆயிப்போச்சு மாப்ளெ!

-உனக்கென்ன மாமா, பசக ரெண்டும் பெங்களூர்ல கம்ப்யூட்டர் பொட்டி முன்னால உக்காந்து சொளையா சம்பாதிக்கறானுக. இப்ப போயி எங்கிட்ட வந்து மழை பெஸ்சு போட்டுது காட்டுல வெதைக்கலியான்னு எங்கிட்ட வந்து எகத்தாளம் பேசிட்டு இருக்குறே! போயி அத்தை மடியில படுத்துட்டு லவ்வு பண்ணிட்டு இருக்கறதை உட்டுட்டு.

-அடப்போ மாப்ளே! உம்பட அத்தைகாரி முண்டுக்கட்டையிலயே சாத்த வர்றாடா! சம்பாதிக்க துப்பில்லாத மனுசன்னு அவ பசகளாட்டவே பேசிட்டு இருக்குறா. இனி சம்பாதிச்சு நானு என்ன பண்டப் போறேன்?

-பேங்க்குல  உம்பேருல எத்தன லட்சம் இருக்குது மாமா? எனக்காச்சிம் கொஞ்சம் கடனாக் குடேன். நானு எதாச்சிம் பண்டி பெழைச்சிக்கறேன்.

-நீ நேரா போயி டாஸ்மார்க்குல உக்காந்து குடிச்சு குண்டி வெடிச்சு செத்துப் போயிடுவெ மாப்ள! அப்புறம் வள்ளியம்மா எனக்கு சாபம் குடுத்துடுவா!

-நீ ஏம்மாமா உம்பட காட்டை வித்தே? பசகளை மேல படிக்க வெக்கவா?

-அவனுக படிப்புக்காக நானெங்க வித்தேன் மாப்ள? மழை நல்லா இருந்தா நீயே ரோட்டு வேலைக்கி போவியா சொல்லு பாக்கலாம்? வர்றப்ப உம்பட கெணத்துல தண்ணி கெடக்கான்னு எட்டி பாத்துட்டு தான் வர்றேன். அமுட்டு செடி மொளச்சு நின்னுட்டு இருக்குது. நாங்க பொடியானுகளா இருந்தப்ப என்ன குதியாளம் போட்டம் தெரியுமா அந்த கெணத்து தண்ணியில!

-நீ குதியாளம் போட்டது இருக்கட்டும், சொல்லு ஏன் வித்தே?

-யாரு எம்பட தோட்டத்துக்கு கூலிக்கு வந்தா சொல்லு? செடி என்ன வெச்ச ஒடனே அதுவா வளர்ந்துடுதா? பண்டிதம் பாக்கோணுமுல்லொ! அதுக்கு செலவுக்கு ? கூலி பத்தலின்னு கூலிக்காரன் வரமாட்டீங்கறான். தக்காளிய பொறிச்சு கூடை கூடையா லாரில ஏத்தி கொண்டு போனா கிலோ ஒரு ரூவாய்க்கி கேக்கறான். லாரி வாடகைக்கே செரியாப் போயிருது. கணக்கு பண்ணி பாத்துட்டு தான் வித்துத் தொலச்சேன் மாப்ள. ஆனா இப்ப பொண்டாட்டிய வித்து தின்னது மாதிரி கவலையாவே இருக்குது. நீ அப்படி கீது வித்துப்போட்டு என்னையாட்ட சங்கட்டப்பட்டுட்டு இருக்காத மாப்ள.

-இல்ல மாமா, ஆளுக கேட்டுட்டு தான் இருக்குது. நல்ல வெலை வந்தா குடுத்துடுவேன். எம்பட பசகளும் அப்பத்தான் எங்காச்சிம் வெளிய போயி சம்பாதிச்சு அனுப்புவானுக! நானும் உன்னியாட்ட ஊருக்குள்ள வேட்டி சட்டை போட்டுட்டு சுத்துவேன். அப்ப என்னையும் சேத்திக்கோ கூடவே! ரெண்டு பேரும் ஊடு ஊடா போயி நாயம் பேசிட்டே பொழுதோட்டலாம். என்ன மாமா நாயம் பேசுறே? பையனுக சம்பாதிக்கறானுக.. போயி அந்தக்காசுல நெலம்  வாங்கிப் போடு! கெணறு வெட்டு. தென்னைமரம் வரிசியா வெய்யி. தோட்டம் பண்ணு. மழை பெய்யுறப்ப பெய்யட்டும். போரை போடு! நெலத்தை வித்துப்போட்டன்னு கவலைப்படறாராமா!

-கூலிக்கி ஆளுக்கு எங்க போவேன்? நீயெல்லாம் ரோட்டோரத்துல துளி புல்லை செதுக்கி வீசிட்டு சொளையா 100 ரூவா நொட்டீர்றே! அதும் மரத்தடியில பொம்பளைகளோட உக்கோந்துட்டு மத்தியானத்துல தாயக்கரமாடுறே! அரசாங்கம் பாரு வெளையாட்றதுக்கெல்லாம் காசு குடுக்குது.

-நீ 150 ரூவா கூலி குடு. நான் வர்றேன் உன்னட காட்டுல வேலை செய்ய.

-எம்பசங்க பெங்களூர்ல இருந்தே பிஞ்ச செருப்பை தூக்கிட்டு வருவானுக!

-அப்ப காட்டுக்காரங்க எல்லாரும் சேர்ந்து ஒரு போராட்டம் அறிவிச்சுடுங்க அரசாங்கத்துக்கு எதிரா! 100 நாள் வேலைத் திட்டத்தை அரசாங்கமே உடனே நிறுத்து! இல்லீன்னா நாங்க தீக்குளிப்போம்னு கத்துங்க!

-என்ன மாப்ளெ உள்ளார கொண்டி மாமனை உக்காத்தி வெச்சு அழகு பாத்துடுவே போலிருக்கே? ஏம் மாப்ள தெரியாமத்தான் கேக்குறேன்.. இந்த டவுன்ல இருக்குற ஆக்களெல்லாம் போராட மாண்டாங்களா இதுக்கு?

-அவிங்க என்னான்னு மாமா போராடணும்? கருமத்தெ உங்கிட்ட போராட்ட குணமெல்லாம் இன்னம் இருக்கே!

-ஆமா மாப்ளெ! இப்ப டவுன்ல இருக்குறவங்க எல்லாம் ஒன்னு  கூடி இந்த விவசாயிகளைப் பார்த்து, ‘’ ! விவசாயிகளே! எங்களுக்கெல்லாம் உழைத்துச் சோறு போடும் விவசாயிகளே! நீங்க எப்படி விவசாயத்தை உட்டுட்டு டவுனுக்கு காரச்சட்டி தூக்கவும், கண்ட வேலைக்கும் வரலாம்இங்கெல்லாம் கூலி வேலைக்கி வரக்கூடாது! வராதே வராதே! ஊர்ல விவசாயமே பார்! அரசாங்கமே! 100 நாள் வேலைத்திட்டத்தை சீக்கிரம் நிறுத்து! அப்படின்னு போராடலாமே.

-லாமே! ஆமா மாமா லாமே! எப்படியோ எனக்கு தெனமும் 100 ரூவா வர்றது உனக்கு பொச்செரிசலா இருக்குது! அதுக்கு என்ன பண்ணலாம்னு நான் சொல்றங்கேளு. நீ சொன்னாப்ல ரோட்டோரத்துல புல்லை சொறண்டறதுக்கு அரசாங்கம் காசு குடுக்குதுன்னு தான உனக்கு கவலை? அரசாங்கம் நூறு ரூவா குடுக்கட்டும். தோட்டம் வச்சிருக்குறவங்க 100 ரூவா குடுக்கட்டும். கூலி ஆளுகளுக்கு ஒரு நாளைக்கி 200 ரூவா ஆச்சு! அரசாங்கம் விவசாயத்தை காப்பாத்திய மாதிரியும் ஆச்சு பாருங்க மாமா! நீங்களும் பொழச்சிக்கலாம்.

-மாப்ளெ! நல்ல ஐடியாவாத்தான் சொன்னே போ! ஆனா ஊருக்குள்ள பாதிப்பேரு நெலத்தை வித்துப்போட்டானுகளே! அந்தக்காசுல கார்ல போயிட்டு வந்துட்டு இருக்கானுக. காசைக்கொண்டி கம்பெனி வக்கிறதுலயும், கந்து வட்டிக்கும் உட்டு கெளப்பீட்டு இருக்கானுக. போயி இப்படி செய்யலாமான்னு கேட்டா மேலயும் கீழயும் பாப்பானுகளே!

-மொதல்ல பசங்க கிட்ட சொல்லி நெலம் வாங்குற வழியப்பாருங்க மாமா! அவனுக என்ன சொல்லுறானுகன்னு கேளுங்க! ஒரு வேளை நீங்க கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங் படிச்சு முடிச்சு பெங்களூருக்கே வாங்கப்பான்னு சொன்னாலும் சொல்லுவானுக மாமா! அப்படி ஒரு வாய்ப்பு இருந்தா அதைப் பாருங்க! இங்க ஊருக்குள்ள ஏன் பொச்செறிச்சலோட சுத்தீட்டு இருக்காட்டி. அத்தையையும் கூட்டிட்டு பெங்களூரே போயி செட்டிலாயிடுங்க! நீங்க சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்துட்டீங்கன்னா அத்தை வீட்டை பார்த்துக்கும்.

-ஆமா மாப்ளெ! தண்ணிய வேற தமிழ்நாட்டுக்கு தரமாட்டேன்னு அவன் சொல்லிட்டு இருக்கான்.

-அதை நான் சின்னப்பையனா இருக்கப்ப இருந்தே சொல்லிட்டு தான் இருக்கான் மாமா! அங்கிருந்து இங்க தண்ணி வர்றதுனால தான அவன் தடுத்து தரமாட்டீங்கான்! இங்கிருந்து அங்க போற மாதிரி இருந்தா நாமுளும் தான் தரமாட்டோம். தண்ணிய அவுனுக்கு தந்துட்டு நாம நாக்கு வழிச்சிக்கிறதா? அதனால தண்ணி இருக்குற இடமாப் பார்த்து நீங்க போயிடறது தான் சரி! எதுக்கும் அத்தை கிட்ட பேசிப்பாருங்க இன்னிக்கே!


000

நன்றி - மலைகள்.காம்

முகநூல் போட்டோ கமெண்ட்ஸ் (மே)

$
0
0

பெரிப்பா யெல்லோ வளையல்ல செவன் இருக்குது! க்ரீன் வளையல்ல எய்ட் இருக்குது! அவசரப்படாதே.. இன்னும் இருக்குது.. கவுண்ட் பண்ணிட்டு இருக்கேன். கடைசியா டோட்டல் சொல்றேன். கம்முனு படுத்திரு!

000


கம்முனிரு பெரீப்பா! நா கேம்ஸ்ல தீவிரமா இருக்கேன். நீ மட்டனை ஊட்டி உடறதுன்னா என் தங்கச்சிக்கி ஊட்டி உடு! அப்பறமா இந்த வெளையாட்டுல ஜெயிச்சுட்டு வந்து ஆ க்காட்டி வாங்கீக்கறேன்! மொத நீ பாட்டிலை முடி!

000


மாட்டை அடக்குனாத்தான் பொண்ணு தருவேன்னு மாமன் சொல்லிட்டாரு. அந்தக் கருவாச்சிய கட்டுறதுக்கு இதை அடக்கோணுமா? அவளை நீயே வெச்சுக்கோ.. எனக்கு வேணாம்! ஆனா மாட்டை அடக்கி காட்டுறேன்..உம்பொண்ணை பக்கத்தூட்டு முருகேச மாமம் பையனுக்கு குடுன்னு சொல்லிட்டேன்.

000


-எனக்கு ரெண்டு நாளைக்கி கம்பெனி லீவு வேணும் சார்.

-அதெல்லாம் முடியாது! ஆர்டர் அர்ஜெண்ட்டு. ரெண்டு நாளைக்கிம் மிந்தி தான லீவு போட்டே!

-சார் அண்ணன் இறந்துட்டாரு சார்.. இப்பத்தான் போனு வந்துச்சு!

-இந்த ஆர்டரை முடிச்சு குடுத்துட்டு

-சார், கம்பெனில அவசர ஆர்டர் ஓடுது.. அதை முடிச்சுக் குடுத்த பொறவு செத்துருன்னு எங்கண்ணன் கிட்ட சொல்லிட்டு தான் சார் வந்தேன்.. அவந்தான் கேக்காமஇப்படி பண்ணிட்டான்.

(நேற்றிரவு இடுகாட்டில் நண்பன் சொன்னது)

000


ஒரு கத்தி வாங்குனது நல்லதாப் போச்சு பெரீப்பா! நான் எல்லாரையும் ஈசியா போட்டுத் தள்ளிடறேன்.

000


விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காதுன்னு நினைக்கேன். நாளைக்கி உள்ளூரு ஆத்தா நோம்பி. ஒறம்பரை பொடுசுக வந்து சேர்ந்தா சரி!

000


நகுலன், ஜி.நாகராஜன், மெளனி, சுஜாதா, கரிச்சான் குஞ்சு, புதுமைப்பித்தன் இவர்களுடன் அலைபேசியில் நேற்றிரவு பேசிய செம்மல் அவர்கள், அனைவரும் நடுகல் பதிப்பகத்திற்கு ஒரு புத்தகம் புதிதாய் எழுதித் தந்து விடுவதாய் சொல்லிய பிற்பாடே அலைபேசியில் அடுத்த ஆளுக்கு தாவி இருக்கிறார். இதை என்னிடம் சொல்கையில் அவிங்க நெம்பர்களை எப்பிடி பிடிச்சீங்க? என்ற கேள்வியை வைத்தேன். அது கூகுள்ல சர்ச் பண்ணி புடிச்சிட்டனுங்க! என்றார். விடிந்து விட்டதால் பொழப்புக்கு கிளம்பி விட்ட செம்மல் இன்று இரவும் தன் வலையை வீசுவார்!

000


-அரிக்க அரிக்க திங்கறாளேன்னு

இன்னொருத்திய கட்டீட்டு வந்தா

இவொ பொடைக்க பொடைக்கவே 

தின்னுபோடறா!

000


எல்லக்காட்டிலிருந்து திரும்புறச்சே ஒரு பெருசு (நாமெல்லாம் சிறிசு) வண்டியில லைட் மப்புல ஏறிடுச்சு!
-எங்கூர்ல எறக்கி உட்டுட்டு போயிடுங்க மவராசா!

-
உக்காந்து தொலையிடா!

-
ராசா நமக்கு எந்தூருங்க? வாய்ப்பாடியா?

-
ஆமா! நீ போற வழியில இறங்கிக்குவியா?

-
ஆமாங்க ராசா? உங்கூர்ல கோமுன்னு ஒரு பொம்பளப்புள்ள அருமையா கதையெல்லாம் எழுதுதுன்னு எம்பட புள்ள சொல்லுச்சுங்க!

-
ஆமா. எங்கூர்ல ஒரு பொண்ணு பொத்தவத்துல எல்லாம் எழுதிட்டு தான் இருக்குது.

-
நல்லா எழுதுதுங்களாமா.. ஒரு நாளு அந்தப் பொண்ணெ நா வந்து பாக்கோணுமுங்க ராசா!

-
ஐயோ! என்னுங் சாமி சொல்றீங்கொ?

000

என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்.

புத்தகங்கள் பற்றி பேசுவோமா?

Viewing all 425 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>