Quantcast
Channel: வா.மு. கோமு
Viewing all articles
Browse latest Browse all 425

முகநூல் பதிவு நவம்பர்ல!

$
0
0


இந்த கரி இஞ்சின்களை எல்லாம் இப்ப அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு காயலான் கடையில எடைக்கி போட்டுட்டாங்களா? சின்ன வயசா இருக்கப்ப பொட்டில உக்காந்து போனா சன்னல்ல எட்டி கூட பாக்க முடியாது! கண்ணுல கரி உழுந்து தேய்ச்சி கண்ணை சிவப்பாக்கிக்க வேண்டிது தான்! சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே!பாட்டு வர்றப்ப இந்த இஞ்சின்கள் புலக்கத்தில் இல்லை. கொஞ்சம் சுலோங்கறதால கால மாற்றத்துல காணாம போயிடுச்சு! இருந்தாலும் இது பற்றி ஒரு நினைவோடை குறிப்பு எழுதும் அளவு விசயங்கள் இருக்கிறது! ஏன்னா ரயில் ரோட்டுல கறி தேடி பொறுக்கீட்டு வந்து அடுப்பெறிச்ச காலம் இருக்குல்லோ! (எழுதி? என்று குரல் வருகிறது!)

000000000000000

கரி இஞ்சின் 2

அது ஒன்னுமில்லீங்ணா! அதுல ட்ரைவரா எங்கூரு ஆள் ஒருத்தரு இருந்து ரிட்டையர் வாங்கிட்டு வந்து கள்ளுக்கடை போட்டிருந்தாரு! இந்த காசில்லாத நம்பாளுக நேரத்துல மூனு பேரு கடையில போயி குக்கி என்ன இருந்தாலும் நம்ப மாமன் ரயிலோட்டுனவரு அதென்ன சின்னத்தான காரியமா!என்று பேசி அவரை குளிர வைப்பர். மாமன் உச்சி குளிர்ந்து டேய் பையா! மாப்பிள்ளைகளுக்கு ரெண்டு சொப்பு கள்ளு ஊத்து!என்று ஆர்டர் போட்டு விடுவார்!
 (இப்பிடித்தான் அந்தக் காலத்திலேயே கல்லு வீசி மாங்காய் அடித்திருக்கிறார்கள்)

000000000000000000



 எங்கம்மா கரப்பம்பூச்சிய கண்டாத்தான் கொல்லப்பாக்கும். அதுக சமைல்கட்டுல தான சுத்தும்! செங்கொளவி ஊட்டுக்குள்ளார கூடு வெச்சா நான் ஒடச்சிருவேன். அம்மா சத்தம் போடும்! கொளவி வீட்டுள்ள பறந்தாவே பையன் சொல்வான் அப்பா கெழவி பறக்குறா!அப்புறம் துண்டுலயாச்சும் போட்டு தள்ளீறது தான். (செங்கொளவிய அரைச்சு நாய்க்குட்டிக்கு பால்ல கலந்து குடுத்தா அது பெருசாகுறப்ப கடி நாயா வரும்- தகவல்)

அப்புறம் பல்லிக! இதுகளுக்குத் தான் பல்லி விழும் பயன்கள்னு பக்கமே இருக்குதே! தலையில உழுந்தா சாவாம்! மெரண்டே செத்துடுவான்ல! அதுகளை கண்டா அடிச்சுடுவேன். பார்த்தாப் போதும் பையன் ஓடியாந்து அப்பா முதலைப்பா!என்பான். அதுகளை என்ன தான் அடிச்சி கொன்னாலும் எப்படியும் ஒன்னு ரெண்டு இருந்து கத்திட்டே தான் இருக்குதுக சொச்சு சொச்சுனு! அதுகளை அடிக்க கூடாதுன்னு அம்மா ஆரம்பத்துல கண்டிசன் போட்டு இப்ப விட்டுடுச்சு!

இது இப்படி இருக்க மழைக்காலத்துல பச்சைப் பூச்சி லைட் வெளிச்சத்துக்கு ரெண்டு நாளாவே வருதுக! அது வீட்டுள்ளார வந்தா பசுமை வீட்டுல பொங்குமாம்! கருமம்டா! என்று இரண்டு விரல்களில் கவ்விப் பிடித்து வெளி இருட்டில் வீசினேன்! ஏப்பா கொல்லுல?” சன் கேட்டதுக்கு பசுமைப் புரட்சி நடக்கட்டும் என்றேன்.

0000000000000

எல்லாரும் சிரிக்கறாங்கன்னு 
பூனையும் ஓடிப்போயி பொடக்காலியில
உக்காந்து சிரிச்சுதாம்!

0000

வாயத்தச்சு மனையில உக்கார வச்சாலும் 
தாலிக்கயித்துக்கு மஞ்சள் 
பத்தலின்னு சொன்னாளாம்!

000000

வயித்த வலிக்கி எவனாச்சிம்
கட்டிலை திருப்பி போட்டு படுப்பானாடா?

0000000

பெருந்துறை சிப்காட் சாலையில் படுத்தபடி ரெஸ்ட் எடுக்கும் ஆடுகள் இரு சக்கர வாகனங்களை வண்டியாகவே மதிப்பதில்லை! தானுண்டு தன் சுகமுண்டு என்றே கிடக்கின்றன!

000000

வச்சால் பிள்ளையாரு..
வழிச்சு எறிஞ்சம்னா சாணி...!

0000000

போடு தோப்புக்கரணம்னா...
எண்ணிக்கோடான்னானாம்!

000000

புது வட்டலை பார்த்துட்டு
ஏழு வட்டல் சோறு தின்னானாமா!

000000000


Viewing all articles
Browse latest Browse all 425

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


ஆடி 10 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடோனாக மாறிய சமூக நலக்கூடம்: மக்கள்...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>